Tiga : Bugatti : Totally psychedelic…

இன்றுதான் இவரது இசை எனக்கு அறிமுகம்.  அதாவது பெயர் தெரிந்து.  பெயர் தெரியாமல் இரவு விடுதிகளில், நடன அரங்குகளில் கேட்டு ஆடியிருக்கலாம்.  போதையில் பெயரை யார் கவனிப்பது?  இன்றுதான் பெயர் தெரிந்து கேட்கிறேன்.  அறிமுகப்படுத்தியவர் பாவாணன்.  பாடகரின் பெயர் டீகா.  Tiga.  கனடா நாட்டவர்.  இவர் இசை ஸைக்கடெலிக் ஆக இருக்கிறது.  இமயமலையில் கிடைக்கும் இலையைப் புகைத்தபடி கேட்டால் சொர்க்கம் பார்க்கலாம் போல.  என்னதான் நான் காந்தியவாதியாக மாறி விட்ட போதும் காந்தி கேட்ட ரகுபதியையெல்லாம் கேட்க … Read more

தி இந்துவில் கருந்தேள் ராஜேஷ்

ராஜேஷின் முக்கியமான கட்டுரை ஒன்றை இன்றைய இந்துவில் பார்த்தேன்.  வாசிக்க: http://m.tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%88/article7306697.ece

படிக்க வேண்டிய தத்துவவாதிகளின் பட்டியல் (2)

யாரொருவர் ஒரே தலைப்பில் இரண்டு அத்தியாயங்களை என்னை எழுதத் தூண்டுகிறார்களோ அவர்கள் ஒன்று, எனக்கு மிகப் பெரிய சந்துஷ்டியைக் கொடுத்திருக்க வேண்டும்; அல்லது, தீவிரமான மன உளைச்சலைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்க வேண்டும். என் அன்புக்குரிய வளன், நீ இப்போது என்னை இரண்டாவது பிரிவில் தள்ளியிருக்கிறாய்.  ஒரு தப்பு செய்தால் அந்தத் தப்பை சரி செய்கிறோம் பேர்வழி என்று தப்புக்கு மேல் தப்பாகவே செய்து கொண்டிருப்பதைத்தான் பொதுவாக நான் பார்த்து வருகிறேன்.  அதுவும் என் விஷயத்தில் நண்பர்கள் … Read more

தேகம் : திருத்தப்பட்ட பதிப்பு

தேகம் திருத்தப்பட்ட பதிப்பு கிழக்கு பதிப்பகத்திலிருந்து வெளிவந்துள்ளது.  கிடைக்கும் இடம்: தேகம் புதிய பதிப்பு ரூ.125/- கிழக்கு இணையதளம் – https://www.nhm.in/shop/978-93-5135-196-2.html அமேஸான் – http://www.amazon.in/Degam-Charu-Nivedita/dp/9351351963/ ஃப்ளிப்கார்ட் – http://www.flipkart.com/degam/p/itme7kz5dumuhzgd?pid=9789351351962   தேகம் நாவலின் முதல் பதிப்புக்கு நிர்மல் எழுதிய மதிப்புரைகள் கீழே:  http://www.pichaikaaran.com/2011/02/blog-post_02.html  http://www.pichaikaaran.com/2011/02/mrinzo.html http://www.pichaikaaran.com/2011/02/blog-post_06.html http://www.pichaikaaran.com/2011/02/blog-post_05.html

நிவேதனம்

பல ஆண்டுகளாக மகாமுத்ராவுக்கு brand ambassador ஆக இருந்தேன்.  அதேபோல் ரெமி மார்ட்டின்.  நான் சொல்லும் வரை ரெமி மார்ட்டினை யாருக்கும் தெரியாது.  சினிமா உலகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ரகசியமாக உபயோகித்து வந்தனர்.  இப்போதோ அது தமிழ்நாடு முழுவதும் பிரபலமாகி விட்டது.  அதேபோல் ஹேகமைஸ்டர் (Jagermeister), சீனத்து அரச வம்சத்தினர் அருந்திய Wenjun. இப்போது மகாமுத்ராவில் இலக்கியவாதிகளையும் அடிக்கடி பார்க்க முடிகிறது.  ஆனால் மகாமுத்ராதான் முன்பு போல் இல்லை.  தரத்தில் மாற்றம் இல்லை.  நிர்வாகம்தான் மோசமாகி விட்டது.  … Read more

படிக்க வேண்டிய தத்துவவாதிகளின் பெயர்ப் பட்டியல்…

அப்பா, இங்கே ஒரு நல்ல நூலகம் உள்ளது.  அதில் நவீன சிந்தனையாளர்களைப் படிக்க விரும்புகிறேன்.  சிலரது பெயரை எனக்குச் சொல்லுங்கள். வளன். அன்புள்ள வளன், இதே போல் இன்னும் ஒரு கடிதம் வந்தாலும் நான் உன்னோடான தொடர்பை நிறுத்திக் கொள்வேன்.  எனக்கு மகா மன உளைச்சலைத் தரும் கடிதம் என்றால் இதுதான்.  ஏன் தம்பி, என்னுடைய எழுத்து ஏதாவதை நீ படித்திருக்கிறாயா இல்லையா?  என்னுடைய நூல்களைப் படித்திருந்தால் நீ நாலைந்து ஆயுட்காலம் படிப்பதற்கான தத்துவவாதிகளின் பெயர்களைத் தெரிந்து … Read more