மலேஷியா பயணம்

நல்ல நினைவாற்றல் உள்ளவர்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.  திருமாறன் என்ற வாசகர் மாணவராக இருக்கும் போதே எனக்குத் தொடர்ந்து கடிதம் எழுதுவார்.  அவர் பற்றி இங்கே எழுதியிருக்கிறேன்.  பிறகு அவர் வேலைக்குப் போனதும் ஒருமுறை என்னை மலேஷியாவுக்கு அழைத்து மலேஷியாவின் ஒரு பகுதி முழுவதையும் சுற்றிக் காண்பித்தார்.  போர்னியோ மட்டுமே செல்லவில்லை.  ஜூனில் தன் திருமணத்துக்காக இங்கே சென்னை வந்து அழைப்பிதழ் கொடுத்தார்.  அவர் திருமணத்துக்காக மலேஷியா செல்கிறேன்.  26-இல் திருமணம்.  நான் இங்கிருந்து 24 கிளம்புவேன்.  சென்ற … Read more

பலஹீன இதயம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம்…

பத்துப் பனிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை அவந்திகாவின் வற்புறுத்தலுக்கு இணங்கி ஆயுள் காப்பீடு செய்து கொள்ள முயன்றேன்.  அதற்கான உடல் தகுதியைப் பரிசோதிக்க ஒரு மருத்துவரிடம் அனுப்பப்பட்டேன்.  மருத்துவர் மிக மிக செக்ஸியான ஒரு இளம் பெண்.  அப்படிப்பட்ட பெண் மருத்துவர்கள் கடுகடு என்று இருப்பர்.  அதற்கு மாறாக, இந்தப் பெண் கலகலவென்று சிரித்துப் பேசிக் கொண்டு சோதனைகள் செய்தார்.  ஈஸிஜி, எக்கோ போன்ற பரிசோதனைகளைச் செய்யும் போது எனக்கு மூச்சு முட்டியது என்றே சொல்ல வேண்டும்.  … Read more

ஒரு கடிதமும் பதிலும்…

சாருஆன்லைனில் வெளிவரும் ஆங்கிலக் குப்பைகள் நான் பதிவிடுவதல்ல.  சில கிரிமினல்களின் வேலை.  என் இணையதளப் பொறுப்பாளரின் பார்வைக்காக விட்டு வைத்திருக்கிறேன். பின்வருவது என்னுடைய ஒரு கடிதமும் அதற்கான பதிலும்: dear kuppuswamy, இதுதான் நான் உங்களுக்கு எழுதும் முதல் மின்னஞ்சல் என்று நினைக்கிறேன்.  நீங்கள் மொழிபெயர்த்த பனி படித்து விட்டேன். எனக்கு ஒவ்வொரு ஞாயிறும் பரீட்சை.  பழுப்பு நிறப் பக்கங்களை சனிக்கிழமை அனுப்பி விட வேண்டும்.  ஆனாலும் அதைத் தொடாமல் ஒரு வாரத்தில் பனியை முடித்து விட்டேன். … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் : ஆ. மாதவன்

எப்படியான சூழலில் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதை பழுப்பு நிறப் பக்கங்களுக்கு வரும் பின்னூட்டங்களிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளலாம்.  மற்ற நாடுகளில் எழுத்தாளனை சிறையில் அடைப்பார்கள்.  நாடு கடத்துவார்கள்.  அல்லது சுட்டுக் கொல்வார்கள்.  தமிழ்நாட்டில் தொடர்ந்து செருப்பால் அடித்துக் கொண்டே இருப்பார்கள்.  அதுவும் எல்லா எழுத்தாளர்களையும் அல்ல;  என்னை மட்டும்தான்.  ஸீரோ டிகிரி ஆங்கிலப் பதிப்புக்கு பல்லவி என்பவர் ஒரு மதிப்புரை எழுதிய போது அதற்கு 190 ஆபாச பின்னூட்டங்கள் எழுதியவர்கள் என் தமிழ் நண்பர்கள்.  படு ஆபாசமான … Read more

அமித் திர்வேதியின் அடுத்த இசை விழா…

நண்பர் பிரகாஷ் பாலா இந்த இணைப்பை எனக்கு அனுப்பி வைத்திருந்தார்.  நான் பொதுவாக ஒரு வேலையை எடுத்துச் செய்து கொண்டிருக்கும் போது இடையில் வேறு எந்த வேலையையும் செய்யும் வழக்கம் இல்லை.  பழுப்பு நிறப் பக்கங்கள் அடுத்த அத்தியாயத்துக்காகப் பரீட்சைக்குப் படிப்பது போல் படித்துக் கொண்டிருக்கிறேன்.  இருந்தாலும் அனுராக் காஷ்யப்பின் அடுத்த படம் என்பதாலும் இசை அமித் திர்வேதி என்பதாலும் எட்டிப் பார்த்தேன்.  வார்த்தைகள் இல்லை, பாராட்ட.  யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும், இன்றைய இந்திய சினிமாவின் … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் – அசோகமித்திரன்

இந்த வார கல்கியில் என்னுடைய ஒரு கலாட்டா பேட்டி வந்துள்ளது.  பார்க்கவும். பழுப்பு நிறப் பக்கங்கள்   – அசோகமித்திரன் (1)  & (2).   கூடவே பழுப்பு நிறப் பக்கங்களுக்கு வரும் ஆபாசப் பின்னூட்டங்களையும் நீங்கள் படித்து மகிழலாம். நாகூர் ரூமிக்கு மட்டும் ஒரே ஒரு சிறிய விளக்கம்.  நான் ஒருவரை ஆகா ஓகோ என்று பாராட்டுவதாகவும் பிறகு அவரைக் கீழே தள்ளி விடுவதாகவும் எழுதியிருக்கிறார்.   என்னுடைய 15 வயதிலிருந்து நான் இலக்கிய வாசகன். … Read more