புத்தக விழாக்கள்

நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஜூலை 3 முதல் 12 வரை நடைபெறுகிறது.  அங்கே உயிர்மை மற்றும் கிழக்கு அரங்குகளில் நான் எழுதிய புத்தகங்கள் கிடைக்கும். இடம்: Book Fair Grounds (Lignite Hall Premises), Block -11, Neyveli. நேரம்: வார நாட்களில் காலை பதினொன்று முதல் இரவு ஒன்பது வரை. வார இறுதிகளில் காலை பத்து முதல் இரவு ஒன்பது வரை. கிழக்கு அரங்க எண் – 160 உயிர்மை அரங்கு எண் – 5 … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் : எஸ். சம்பத்

இதுவரையிலான என்னுடைய பரந்து பட்ட உலக இலக்கிய வாசிப்பில் எஸ். சம்பத்தின் இடைவெளி நாவலுக்கு மிஞ்சிய ஒரு இலக்கியப் படைப்பு இல்லை என்று முடிவுக்கு வந்துள்ளேன்.  நான் மட்டும் அல்ல.  சி. மோகனும் அப்படியே அபிப்பிராயப்படுகிறார். இடைவெளி நாவலை விருட்சம் வெளியீட்டில் படித்தால் புரிந்து கொள்ள முடியாது.  அது எடிட் செய்யப்படாத முதல் பிரதி.  தெறிகள் பத்திரிகையில் அப்படித்தான் வந்தது.  அதை சி. மோகன் செவ்வனே செப்பனிட்டு க்ரியா மூலமாக 1984-இல் வெளிவந்தது.  அதன் பிடிஎஃப் பிரதி … Read more

என் புத்தகங்கள் மின் புத்தகங்களாக…

எனக்கு புத்தகமாகப் படிப்பதை விட ஐ பேடில் அல்லது கணினியில் படிப்பதே வசதியாக உள்ளது.  அதற்காக ஒரு நண்பர் சமீபத்தில் ஐபேட் வாங்கிக் கொடுத்தார்.  இனிமேலான காலம் மின்நூல் வடிவில்தான் இருக்கும்.  காகிதப் புத்தகங்கள் வழக்கொழிந்தும் விடலாம். என் புத்தகங்கள்  சில மின்நூல்களாகக் கிடைக்கின்றன.  தகவல்: விண்டோஸ் 8 கணினியிலும், ஸ்மார்ட் ஃபோனிலும் நியூஸ் ஹன்ட்(newshunt)  app டவுன்லோட் செய்து, சாரு நிவேதிதா / charu nivedita என்று தேடினால், சாருவின் புத்தகங்கள் வருகிறது. விலைப்பட்டியல்:    … Read more

காலம் காலமாகக் கேட்ட குரல்

டியர் சாரு, என் நீங்கள் ரெமி மார்டினை வாங்கி விற்று காசை பெற்று இருக்க கூடாது….ஒரு சின்ன வழி கூட தெரியாமல் நீரும் ஜெயமோஹனும் சமூகத்துக்கு அறிவுரை செய்ய கிளம்பி விடுகிறீர்கள் . கேட்டால் இருவரும் ராக்கெட் செய்வது எப்பிடி என்று வகுப்பு எடுப்பீர்களா? எழுத்தாளன் என்றால் எல்லாம் தெரிந்த மேதை என்ற முட்டாள் நினைவை முதலில் ஒழித்து விடுங்கள். எழுத்தாளர்களின் எழுத்துக்கு முன்னும் இந்தியா இப்பிடித்தான் இருந்தது இப்போதும் இப்பிடித்தான் இருக்கிறது. இப்போது இந்தியா அடைந்திருக்கும் … Read more

ரகசிய சிநேகிதம்

செல்வகுமார் முகநூலில் எழுதியிருப்பது: சாரு, அபிலாஷின் ஜெயமோகன் கட்டுரையை படித்தபோது நீங்கள் எழுதிய கருத்தே எனக்கும் தோன்றியது. ஒரு எழுத்தாளனை வாசகனாக நெருங்கும்போது அபிலாஷ் எவ்வளவு இனிமையாக மாறிவிடுகிறார். கதை, கட்டுரை என்று எழுதும்போது மட்டும் துருபிடித்த பிளேடால் வாசகனை பிராண்டி விடுகிறார். வேடிக்கைக்காக நீங்கள் யாரிடமும் பேசுவதில்லை என்று சொல்கிறீர்கள். உண்மையில் உங்கள் பழைய சாருஆன்லைன் கடிதங்களில் இருந்தும், எழுத்தில் வெளிப்படும் கச்சிதம் + கண்டிப்புத் தன்மையால் உங்களை நெருங்க, எழுத முயற்சிக்கும் எழுத்தாளர்கள் வருவதில்லை. … Read more

இணையப் பிச்சைக்காரன் (1) & (3)

அவசரமாக எழுதியதில் சில விஷயங்கள் விடுபட்டு விட்டன.  முதலில் இணையப் பிச்சைக்காரன் (1) இணைப்பு.  இதோ அது: http://www.jeyamohan.in/74493#.VTr1tCGqqko நான் முடிவு செய்தால் பணத்தை வேறு வழிகளிலும் நிறையவே ஈட்ட முடியும்.  இரண்டு ஆண்டுகளுக்கு முன் – என் நெருங்கிய நண்பர் குமார் என்னைத் தன்னுடைய படத்தில் நடிக்க அழைத்தார்.  ஹீரோ இல்லை.  Anti-hero தான்.  அது நான்.  பச்சையாகச் சொன்னால் வில்லன்.  பூஜா இன்னொரு பாத்திரம்.  அழைப்பை மறுத்து விட்டேன்.  எக்ஸைல் எழுதுவதில் மும்முரமாக இருந்தேன்.  … Read more