மதுரை புத்தக விழா

மதுரை புத்தக விழாவில் கலந்து கொள்கிறேன்.  வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் மதுரையில் இருப்பேன்.  அதாவது, 4, 5 செப்டம்பர் தேதிகளில்.  என்னைச் சந்திக்க வரும் நண்பர்கள்/அன்பர்கள் அப்துல் கலாம் பற்றி விவாதிப்பதைத் தவிர்க்கவும்.  கலாம் பற்றி நான் சொல்ல வேண்டியதையெல்லாம் உயிர்மையில் எழுதிக் கொடுத்திருக்கிறேன்.  செப்டம்பர் முதல் தேதி வரும் உயிர்மையில் அந்தக் கட்டுரை வரலாம்.  உங்களுக்கு அதில் ஏதேனும் மறுப்பு இருந்தால் உயிர்மைக்கு எழுதிப் போடவும்.  விவாதம் செய்வதற்கும் பேசுவதற்கும் வேறு பல முக்கியமான விஷயங்கள் உள்ளன. … Read more

நானும் வாசகர் வட்டமும்… (2)

இன்றைய தினம் புதிய எக்ஸைல் இரண்டாம் பதிப்புக்கான பிழை திருத்தங்களை அனுப்பி வைத்தேன்.  பிழை திருத்தம் செய்தவர் டாக்டர் ஸ்ரீராம்.  இரண்டு லட்சம் வார்த்தைகளைச் சரி பார்த்திருக்கிறார். இவரும் செல்வகுமாரும்தான் வாசகர் வட்டத்தின் செயலாளர்கள்.  இவர்கள் இருவரும் குடிப்பழக்கம் இல்லாதவர்கள். வாசகர் வட்டத்தில் குடித்து விட்டுக் கூத்தடிக்கிறார்கள் என்று சொல்லும் நட்புக் கொழுந்துகள், உறவுக் கொழுந்துகள் இந்த வேலையை எனக்காகச் செய்யுமா? இது அவர் செய்யும் இரண்டாவது பிழை திருத்தம்.  இப்போது எடிட்டிங் வேலையையும் சேர்த்து செய்திருக்கிறார்.  … Read more

அழகிய பெரியவன் கதைகள்

‘வாசகசாலை’யின் இலக்கியக் கூட்டத்தில், ஆகஸ்ட் 23 அன்று, மாலை 5:30 மணிக்கு அழகிய பெரியவனின் கதைகள் பற்றி சாரு நிவேதிதா பேசுகிறார். இடம்: பனுவல் புத்தகக் கடை அரங்கம், பேருந்து நிலையம் அருகில், திருவான்மியூர்.

நானும் வாசகர் வட்டமும்…

என்னுடைய எழுத்தின் மீது பிரியம் கொண்ட சில நண்பர்கள் ஏற்படுத்திய அமைப்பே வாசகர் வட்டம்.  இதற்கு முன்னாலும் ஒரு வாசகர் வட்டம் இருந்தது. லட்சுமி கிருஷ்ணமூர்த்தி நிறுவிய வாசகர் வட்டம். க்ரியா பதிப்பகத்துக்கும் முன்னால் அதற்கு ஒரு முன்னோடியாக இருந்த வாசகர் வட்டம் அது.  நல்ல புத்தகங்களைப் பதிப்பிப்பது அந்த வாசகர் வட்டத்தின் நோக்கமாக நடைமுறையாக இருந்தது.   என் வாசகர் வட்டத்தைப் பற்றி எனக்கு நெருக்கமான பலரே அவதூறாகப் பேசும் போது வேதனையாக உள்ளது. என் … Read more

குடும்ப நலச் சட்டங்கள் (2)

சில தினங்களுக்கு முன்பு பதிவிட்ட படித்ததில் பிடித்தது என்ற கட்டுரையை இதன் முதல் பகுதியாகக் கொள்ளவும்.  ஒரு வாசகியிடமிருந்து இதற்கு மறுப்பாக ஒரு கடிதம் வந்துள்ளது.  அதற்கும் பதில் எழுத வேண்டும்.  நேரம் கிடைக்கும் போது எழுதுவேன்.  பெண்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை; சமூகத்திலும் குடும்பத்திலும் பெண்கள் எத்தனையோ வேதனைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள்.  என் வாசகி ஒருவரை அண்ணா சாலையில் எதேச்சையாகச் சந்தித்த போது எப்படி இருக்கிறீர்கள் என்று சாதாரணமாக விசாரித்தேன்.  அதற்கு அவர் முந்திலாம் அடிச்சிக்கிட்டிருந்தான்; … Read more