மனிதாபிமானிகளே, கொஞ்சம் ஒதுங்கி நில்லுங்கள்!

இப்போது எழுதப் போகும் விஷயத்தைப் பற்றி ஏழெட்டு தடவையாவது எழுதி விட்டேன்.  ஆனாலும் புதிது புதிதாக வரும் வாசக நண்பர்கள் நான் எழுதிய பழைய கட்டுரைகளை வாசிக்காமல் வருவதால் அல்லது பழசை அப்படியே மறந்து தொலைத்து விடுகிறார்கள் என்பதால் மீண்டும் எழுத வேண்டிய கட்டாயத்துக்கு ஆட்படுகிறேன். அந்த நண்பர் கல்லூரி மாணவர்.  நான் வயசு வித்தியாசமெல்லாம் பார்ப்பதில்லை.  அவருடைய வயதில் அவர் படித்ததில் ஆயிரத்தில் ஒரு மடங்குதான் நான் படித்திருந்தேன்.  எனவே அந்த நண்பர் மீது எனக்கு … Read more

ஹவுளேபெக்! (திருத்தப்பட்டது)

சில பேர் சில விஷயங்களை விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.  சிலர் கிரிக்கெட் பற்றிய விபரங்கள்.  சிலர் பிரபந்த உரைகள், விளக்கங்கள்.  சிலர் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ஜ் சமாச்சாரங்கள்.  எனக்கு தென்னமெரிக்கா பற்றிய விஷயங்கள்.  குறிப்பாக, சீலே.  அந்த நாட்டின் இலக்கியம், கலாச்சாரம், அரசியல், இசை.  அந்த சம்பவம் நடந்த போது என் வயது ஐம்பத்து மூன்று என்றால் சீலே பற்றிய ஆய்வுகளை முப்பது ஆண்டுகளாகச் செய்து கொண்டிருந்தேன். குமார் ஒரு இலக்கிய விமர்சகன்.  நல்ல படிப்பாளி.  ஒருநாள் என்னோடு … Read more

சார்வாகன் இரங்கல் கூட்டத்தில் பேசியது

நேற்று நடந்த சார்வாகன் இரங்கல் கூட்டத்தில் பேசும் போது உணர்ச்சிவசப்பட்டு அழுது விடாமல் இருக்க வேண்டுமே என்று வேண்டிக் கொண்டே போனேன்.  நல்லவேளை.  அந்த அசம்பாவிதம் நடக்கவில்லை. கூட்டத்தில் பேசும் போது பாரவி சொன்னார், ஒரு மாதம் பழகியதற்கே சாரு இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறாரே, நான் நாற்பது ஆண்டுகள் சார்வாகனோடு பழகினேன், என் நிலை எப்படி இருக்கும் என்று.  அவரது இழப்பைப் புரிந்து கொள்கிறேன்.  ஆனால் நான் அழுதது, அழுவது எல்லாமே எனக்காகத்தான்.  இப்படி ஒரு புதையல் என் … Read more

“எதற்காக எழுத வேண்டும்?  யார் படிக்கிறார்கள்?” சார்வாகன் (1929-2015)

ஜனவரி 3, ஞாயிறு மாலை 5:30 மணிக்கு, டிஸ்கவரி புக் பேலஸில், சார்வாகன் இரங்கல் கூட்டம் நடைபெற இருக்கிறது. அடியேன் உரையாற்றுகிறேன். வாசகர் வட்ட நண்பர்கள் அவசியம் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும் என வேண்டுகிறேன். முகவரி: Discovery Book Palace, No.6, Mahavir Complex, Near Pondicherry Guest House, Munusamy Salai, K.K.Nagar, Chennai – 600078 *** சென்ற ஆண்டின் துவக்கத்தில் புதிய நாவலை எழுதத் துவங்கும் முன்பு சமகாலத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகள் அத்தனை பேரையும் ஒருசேரப் படித்து விட வேண்டும் என்று … Read more

தேவகோட்டை உரை

எத்தனை அன்புடனும் தொந்தரவு தராமலும் பழகினாலும் எனக்கும் நண்பர்களுக்கும் கொஞ்ச காலத்தில் விரிசல் ஏற்பட்டு விடுகிறது.  நண்பர்கள் பிரிந்து விடுகின்றனர்.  புதிய நண்பர்கள் ஏற்படுகின்றனர்.  நீண்ட கால நண்பர்கள் என்றே யாரையும் சொல்ல முடியவில்லை.  ஏன் என்று நண்பர் மனோவைக் கேட்ட போது நீங்கள் comfort zone எதையும் தருவதில்லை என்றார்.  அப்போதுதான் எனக்கும் புரிந்தது.  நண்பர்களைப் புண்படுத்த மாட்டேன்.  எந்த விதத்திலும் தொந்தரவு செய்ய மாட்டேன்.  சமமாக நடத்துவேன்.  ஆனாலும் என்னோடு இருப்பது வசதியாக இருக்காது. … Read more

சாரு நிவேதிதாவின் நூல்கள் தள்ளுபடி விலையில்

http://uyirmmai.com/Publications/AuthorDetails.aspx?aid=103 http://uyirmmai.com/Publications/AuthorDetails.aspx?aid=103&pn=2 *** உயிர்மையின் புத்தாண்டு, சிறப்புச் சலுகை புத்தக விற்பனை ஜனவரி 20 வரை, 30-40% கழிவில் *** அழையுங்கள்: தொலைபேசி :044-24993448, அலைபேசி: 7845610986 நேரில் வாருங்கள் உயிர்மை 11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-18 எழுதுங்கள்: uyirmmai@gmail.com   உயிர்மையில் சாரு நிவேதிதாவின் நூல்கள்: நரகத்திலிருந்து ஒரு குரல் – கட்டுரைகள் – ரூ.180 மலாவி என்றொரு தேசம் – கட்டுரைகள் – ரூ.140 கனவுகளின் மொழிபெயர்ப்பாளன் – கட்டுரைகள் – ரூ.170 தாந்தேயின் … Read more