புத்தக வெளியீட்டு விழா (2)

ஃபெப்ருவரி 27 வெளிவரயிருக்கும் ஒன்பது புத்தகங்களில் மூன்று புத்தகங்கள். பழுப்பு நிறப் பக்கங்கள் – பகுதி 1     கடைசிப் பக்கங்கள் – ந்யூஸ் சைரனில் வந்து பெரும் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகள், கிழக்கு வெளியீடாக வர இருக்கிறது.   எங்கே உன் கடவுள்? – துக்ளக்கில் வெளிவந்து கவனத்தை ஈர்த்த 15 அரசியல் கட்டுரைகள் முதல் முறையாக நூல் வடிவில், கிழக்கு வெளியீடாக வர இருக்கிறது.  

புத்தக வெளியீட்டு விழா (1)

  அறம் பொருள் இன்பம், அந்திமழை பதிப்பகத்தின் வெளியீடாக வர இருக்கிறது. அந்திமழை இதழில் வெளிவந்த கேள்வி பதில்களின் தொகுப்பு இந்நூல்.  இத்துடன் இன்னும் ஏழெட்டு நூல்கள் சேர்ந்து அவற்றின் வெளியீட்டு விழா ஃபெப்ருவரி 27 சனிக்கிழமை மாலை ஆறரை மணிக்கு பாரிமுனையில் உள்ள பல் மருத்துவக் கல்லூரிக்கு அருகில் உள்ள ராஜா அண்ணாமல் மன்றத்தில் நடைபெறும்.

மழை – சிறுகதை

மழை பற்றிய என் மூன்று கவிதைகளைப் படித்திருப்பீர்கள்.  சென்ற மாதம் மனுஷ்ய புத்திரன் உயிர்மைக்காக மழை, வெள்ளம் பற்றி ஒரு கட்டுரை கேட்டார்.  நான் ஒரு கதையை அனுப்பி வைத்தேன். கட்டுரை கிடைத்தது என்றார். ஐயோ அது கதை ஆயிற்றே என்றேன்.  என்னங்க இது, உங்களைத் திட்டுபவர்கள் சொல்வதையே நீங்களும் சொல்கிறீர்கள் என ஆச்சரியப்பட்டார்.  என்னைத் திட்டுபவர்களுக்கும் எப்படித் திட்ட வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பவனே நான் தானே?  அவரிடம் நான் சொன்னேன், அவந்திகா என்று இருந்தால் … Read more

கொடுப்பினை

இவர் என்ன மனிதனா அல்லது அரக்கனா என்று தெரியவில்லை.  நானும் எத்தனையோ பேருடைய அசாத்தியமான நினைவாற்றலைக் கண்டு வியந்திருக்கிறேன்.  அப்படியே புகைப்படம் எடுப்பது போல் முழுப் புத்தகத்தையும் மனதில் கிரஹிக்கக் கூடியவர் திலகவதி.  இப்போது டாக்டர் ஸ்ரீராம் இறந்த காலத்துக்குள் ஏதோ ராக்கெட்டைப் போல் புகுந்து புறப்பட்டு வருகிறார்.  ஹவுளேபெக் கதை வெளிவந்து ஐந்து நிமிடத்தில் அவரிடமிருந்து ஒரு கடிதம்.  நீங்களே படித்துப் பாருங்கள்.  இப்படியெல்லாம் நண்பர்கள் கிடைக்கக் கொடுத்துத்தான் வைத்திருக்கிறேன். டியர் சாரு, இக்கதை 2004-இல் … Read more