புத்தகக் கண்காட்சி

ராயப்பேட்டை YMCA மைதானத்தில் இன்று முதல் ஜனவரி 24 வரை புத்தகக் கண்காட்சி நடைபெறவுள்ளது. சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் கிழக்கு (அரங்கு எண்: 107, 201) மற்றும் உயிர்மை (அரங்கு எண்: 124, 125) அரங்குகளில் கிடைக்கும். நேரம்: விடுமுறை மற்றும் வார இறுதிகளில் காலை 11 முதல் இரவு 9 வரை. மற்ற நாட்களில் மதியம் 2 முதல் இரவு 8:30 வரை.

நிலவு தேயாத தேசம் – 12

முகநூலில் டாக்டர் ஸ்ரீராம் எழுதிய குறிப்பு: ஒரு பயணக் கட்டுரையில் – அதுவும் துருக்கிபற்றிய கட்டுரையில் – தாஞ்சியர், ஜிப்ரால்டர் வரலாறு முதலியவற்றை எழுத முடியுமா – அதுவும் சுவாரசியமாக? அதே கட்டுரையில் தஞ்சை பிரகாஷ், ஜெயமோகன் என அனைவரும் உள்ளே வருகின்றனர் – தர்க்கம் மீறாமல். அருமை, சாரு. http://andhimazhai.com/news/view/nilavu12.html

ந. சிதம்பர சுப்ரமணியனின் நூல் வெளியீட்டு விழா

நாளை மாலை ஆறு மணிக்கு மைலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள  பி.எஸ். உயர்நிலைப்பள்ளியில் உள்ள விவேகானந்தா அரங்கில் ந. சிதம்பர சுப்ரமணியனின் மண்ணில் தெரியுது வானம் என்ற நாவலின் வெளியீட்டு விழா நடக்க உள்ளது. மாலை ஆறு மணி.  நற்றிணை பதிப்பகம்.  இந்த நாவல் பற்றி பழுப்பு நிறப் பக்கங்களில் எழுதியிருக்கிறேன்.  என்னை காந்தியவாதியாக மாற்றிய நாவல் இது.  தமிழ் தெரிந்த அத்தனை பேராலும் வாசிக்கப்பட வேண்டிய நாவல். முக்கியமாக பள்ளிக்கூட மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் … Read more

வாசக சாலை ஆண்டு விழா

வாசகர் வட்டத்திலிருந்து பிரிந்து சென்ற என் வாரிசுகளான ஞான பாஸ்கர் ராஜா, பார்த்திபன், கார்த்திகேயன், மனோஜ், அருண் ஆகியோர் மற்ற சில நண்பர்களுடன் சேர்ந்து வாசக சாலை என்ற அமைப்பை ஏற்படுத்தி மாதந்தோறும் இலக்கியச் சந்திப்புகளை நடத்தி வருவதை நீங்கள் அறிவீர்கள்.  வாசகசாலையின் ஆண்டு விழா நாளை நடைபெறுகிறது.  நானும் பங்கேற்கிறேன், பார்வையாளனாக.  அழகிய பெரியவன், ஆதவன் தீட்சண்யா போன்ற நண்பர்கள் உரையாற்றுகிறார்கள். வாசகசாலை ஆண்டுவிழா மற்றும் தமிழ் இலக்கிய விருதுகள் நிகழ்விற்கான முழுமையான அழைப்பிதழை இந்த … Read more