நிலவு தேயாத தேசம் – 13

நாளை மறுநாள் – அதாவது 21-ஆம் தேதி ஜெய்ப்பூர் இலக்கிய விழாவுக்குச் செல்கிறேன்.  25 வரை அங்கே இருப்பேன்.  ஜெய்ப்பூரில் இருக்கும் நண்பர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.  charu.nivedita.india@gmail.com நிலவு தேயாத தேசம் தொடரின் அடுத்த அத்தியாயத்தின் இணைப்பு கீழே: http://andhimazhai.com/news/view/nilavu13.html

பழுப்பு நிறப் பக்கங்கள் – கோபி கிருஷ்ணன் – 2

இங்கே நான் கொடுக்கும் பழுப்பு நிறப் பக்கங்கள் இணைப்புகளுக்குச் சென்று பல நண்பர்கள் படிப்பதில்லை என அறிந்தேன்.  அவர்கள் என்னை மட்டுமே படிப்பவர்களாக இருக்கிறார்கள்.  இந்தப் பக்கங்களில் வரும் நம்முடைய முன்னோடிகளையும் படித்துக் கொண்டால் இன்னும் என் எழுத்துக்களை சரியாகப் புரிந்து கொள்ளலாம். http://www.dinamani.com/junction/pazhuppu-nira-pakkangal/2016/01/17/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2/article3224363.ece

ஒரு முக்கியமான நேர்காணல்

நியூஸ் 7 சேனலுக்காக உமா மகேஸ்வரன் எடுத்த நேர்காணல் இது.  நேர்காணலின் ஆரம்பத்தில் உமா சொன்னார்.  ஒருவரைப் பேட்டி காணச் செல்லும் போது என்ன கேள்விகள் கேட்கலாம், என்ன கேள்விகள் கேட்கக் கூடாது என்ற do’s and don’t’s ஐ யோசித்துத் தயார் செய்து கொள்வார்கள்.  ஆனால் சாரு விஷயத்தில் டொண்ட்ஸே இல்லை.  சுதந்திரமாகச் செல்லலாம் என்று வந்தேன்.  எந்தக் கேள்வியையாவது தவிர்க்க வேண்டுமா என்று கேட்டார்.  எ-ந்-த-க் கேள்வியாக இருந்தாலும் சரி என்றேன்.  அவர் சொன்னதை … Read more

உலக மாடுகளே ஒன்று படுங்கள்!

எஸ்.ரா.வின் வாதத் திறமை ஊர் அறிந்தது.  மற்றொரு ராம் ஜெத்மலானி.  அவரோடு போட்டி போடக் கூடிய ஒரே ஒரு எழுத்தாளர்தான் தமிழ்நாட்டில் உண்டு.  தினந்தோறும் தொலைக்காட்சியில் தோன்றி அதகளம் பண்ணிக் கொண்டிருக்கிறார்.  அம்மாதிரி இடத்திலெல்லாம் என்னைப் போன்ற சோனி சோப்ளாங்கிகள் பேச முடியுமா?  நேற்று புதிய தலைமுறையில் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு பற்றி கேள்வி வந்து விட்டது.  எஸ்.ரா. ஜல்லிக்கட்டு ஆதரவு.  சாமானியர்கள் பேசினால் புரிந்து கொள்ள முடிகிறது.  புத்திஜீவிகளும் எழுத்தாளர்களுமே மிருகவதைக்கு ஆதரவாகப் பேசுவதை … Read more

இரண்டு நேர்காணல்கள் மற்றும் இருநூறு ரூபாய் கடன்…

பொதுவாக தொலைக்காட்சி நேர்காணல்களில் நீங்கள் எத்தனை புத்தகம் எழுதியிருக்கிறீர்கள் என்பது போன்ற அறிவான கேள்விகளே கேட்கப்படும்.  ஆனால் இப்போது கொஞ்சம் மாறி விட்டது.  மக்கள் தொலைக்காட்சியில் என்னோடு உரையாடிய கௌதம் மற்றும் அபர்ணா இருவரும் அந்த நேர்காணலை மிகவும் சுவாரசியமாகவே செய்தனர்.   என் எழுத்தோடு நன்கு பரிச்சயம் கொண்டவர்களாக இருந்தனர்.  அந்த நேர்காணல் இன்று காலை மக்கள் தொலைக்காட்சியில் காலை ஏழு மணிக்கு ஒளிபரப்பப்பட்டதாக அறிந்தேன்.  பார்த்தவர்கள் நன்றாக இருந்ததாகத் தெரிவித்தனர்.  நான் கடந்த சில … Read more

மண்ணில் தெரியுது வானம் வெளியீட்டு விழா உரை

மண்ணில் தெரியுது வானம் நாவல் வெளியீட்டு விழாவில் பேசுவதற்கு எதுவும் தயாரித்துக் கொள்ளாமல் போனேன்.  சிறப்புரை திருப்பூர் கிருஷ்ணன் என்பதால் நான் ஒரு ஐந்து நிமிடம் சம்பிரதாயமாகப் பேசலாம் என எண்ணினேன்.  ஆனால் கிருஷ்ணன் பேசி முடிக்கும் போது சாருவின் பேச்சைக் கேட்க ஆர்வமாக இருக்கிறேன் என்று ஒரு போடு போட்டு விட்டு அமர்ந்து விட்டதால் திடீரென்று களமிறக்கப்பட்ட ஆட்டக்காரனைப் போல் ஆனேன்.  இருந்தாலும் மனசு பூராவும் மண்ணில் தெரியுது வானம் பொங்கி வழிவதால் நாற்பது நிமிடங்கள் … Read more