ஃபெப்ருவரி 27: புத்தக வெளியீட்டு விழா – 2

புத்தக வெளியீட்டு விழா அரங்கத்துக்கு 52000 ரூபாய் ஆனது.  நான் வெளிநாடு செல்வதற்காகக் குருவி சேர்ப்பது போல் சேர்த்து வைத்திருந்த குருவித் தொகையிலிருந்து எடுத்து கொடுத்து விட்டேன்.  ஒரு நண்பர் வெளியீட்டு விழாவுக்காக 20000 ரூ அனுப்பியிருந்தார்.  அதில் 15000 ரூபாயை எடுத்து சொந்த செலவு செய்து விட்டேன்.  அதாவது, ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் 15000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கி விட்டேன்.  எனக்குப் புத்தகம் வாங்கிக் கொடுக்க ஆறேழு நண்பர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் மூலம் அந்த நூல்களை … Read more

ஃபெப்ருவரி 27 : புத்தக வெளியீட்டு விழா – 1

நல்ல சகுனம்.  காலை ஏழரை மணிக்கு நாகேஸ்வர ராவ் பூங்காவில் ப்ரமோ ஷூட்.  அதனால் வழக்கமான நடைப்பயிற்சி உடையணிகளை விடுத்து கனவானாக முயற்சிக்கும் ஆடைகளை அணிந்து கொண்டு போனேன்.  ஷ்ருதி டிவி நண்பர் தான் வர முடியாதது பற்றி ஸ்ரீராமுக்கு காலை ஐந்தரை மணிக்கு செய்தி அனுப்பியிருக்கிறார்.  அதை ஸ்ரீராம் பார்த்த போது மணி ஏழரை.  வடசென்னையிலிருந்து ஸ்ரீராமும், மேற்கு அண்ணா நகரிலிருந்து முத்துக்குமாரும் நானும் நாகேஸ்வர ராவ் பூங்காவில் சந்தித்தது வீணாகி விட்டது.  ஷ்ருதி டிவி … Read more

தேர்தல் கணிப்பு

அன்புள்ள சாரு, தங்கள் தேர்தல் கணிப்பின் ரசிகன் நான். இம்முனற எப்படி இருக்கும்? ஆவலுடன் வினோத்   அன்புள்ள வினோத் ஒவ்வொரு தேர்தலிலும் மிகத் துல்லியமாக முடிவுகளைச் சொல்லி விடும் எனக்கே இந்த முறை விழி பிதுங்குகிறது.  சினிமாவில் இடைவேளைக்குப் பிறகு படம் சொதப்புவதைப் போல் அதிமுகவின் கடந்த ஒரு ஆண்டு ஆட்சி மக்களுக்குப் பிடிக்கவில்லை.  ஆனால் அதிமுகவின் மீது மக்களுக்குக் கடும் வெறுப்பு இல்லை.  சென்னை, கடலூர் மட்டும் விதிவிலக்கு.  இன்னொரு மிக முக்கியமான, ஆச்சரியமான … Read more

அறம் பொருள் இன்பம் : முதல் விமர்சனம்: தர்ம அடி

ஃபெப்ருவரி 27 அன்று ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடக்க இருக்கும் என்னுடைய புத்தக வெளியீட்டு விழாவில் அறிமுகமாக இருக்கும் என்னுடைய சில புத்தகங்களில் ஒன்று, அறம் பொருள் இன்பம்.  ஆறு மாத காலம் அந்திமழையில் தொடர்ந்து நான் எழுதி வந்த கேள்வி பதில் தொகுப்பு.  அந்த நூல் இப்போது விற்பனைக்கு வந்து விட்டது.  அதன் அட்டை இப்போது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.  எனக்கே அந்த அட்டையைப் பார்த்த போது ஏதோ இடிக்கிறதே என்று தோன்றியது.  ஆனால் என்ன … Read more