பேசாமொழி மாற்று சினிமாவிற்கான மாத இதழ் – புதியது

படிக்க: http://thamizhstudio.com/Pesaamozhi/index_content_38.html நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் சினிமாவிற்கான இணைய மாத இதழின் பிப்ரவரி இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது. நிறைய கட்டுரைகள் ஆவணப்படுத்துதல் அடிப்படையில் பதிவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் சில குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. தவிர சிவாஜி பத்மினி போன்றோர்களுக்கு மேக்கப் மேனாக இருந்த தனக்கோட்டியின் நேர்காணல், நடிப்பிற்கான ஆர்வம் எப்படி வந்தது என்பது பற்றிய சிவாஜி எழுதியுள்ள கட்டுரை, சென்னை பிலிம் சொசைட்டி நடத்திய திரைப்பட ரசனை வகுப்பு குறித்த கட்டுரை, மருதநாயகம் படம் … Read more

Hina ki kushboo

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், காதல், துள்ளல், ரகளை, அட்டகாசம், குதூகலம் எல்லாம் ஒருங்கே இந்தப் பாடலில்.  கேட்டால் ஆடாமல் இருக்கவே முடியாது.  

ஜெயமோகன், எஸ்.ரா. பல்கலைக்கழகத் துணைவேந்தராக வேண்டும்: அடியேன் கோரிக்கை

அரசாங்கத்திடம் என்ன கோரிக்கை வைக்கிறீர்கள் என்று கேட்டார்கள்.  ஜெயமோகனையும், எஸ். ராமகிருஷ்ணனையும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாக ஆக்க வேண்டும் என்று சொன்னேன்.  மனுஷ்ய புத்திரன்?  நம் கோரிக்கை இல்லாமலேயே ஆகி விடுவார். பகுதி 1 பகுதி 2  

உலகம் தாங்காது… மனுஷ்ய புத்திரன் கருத்து

மனுஷ்ய புத்திரன், முகநூலில்: அந்த காலத்தில் ஞானிகள், ரிஷிகள் இருந்தார்கள். அத்தகைய ஞானத்தை வழங்கும் நவீன ஞானிகளாகவும் ஆசான்களாகவும் திகழ்பவர்கள்தான் இன்றைய எழுத்தாளர்கள். – சாருநிவேதிதா (நியூஸ் 7) ஜெயமோகனை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு எழுத்தாளர்களை வரையறுப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். என்னையெல்லாம் ரிஷி என்றால் உலகம் தாங்குமா? ***  

நியூஸ் 7 தொலைக்காட்சியில் இன்று மாலை…

இன்று மாலை ஏழு மணிக்கு  நியூஸ் 7 தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பில் பேசுகிறேன்.  எழுத்தாளர்களுக்கு ஒரு அரசாங்கம் என்னென்ன செய்யலாம் என்பது பற்றிப் பேச இருப்பதால் சுவாரசியமான மனநிலை ஏற்படுகிறது.  நிகழ்ச்சியின் பெயர் களம் 2016.  உபதலைப்பு வேட்பாளர் பெருமக்களே!   அவசியம் கேட்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

ஓவியர் சீனிவாசன்

கிழக்கு பதிப்பகத்திலிருந்து இரண்டு நூல்கள் வெளிவந்து விட்டன.  எங்கே உன் கடவுள்?  துக்ளக்கில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.  அட்டை பிரமாதம்.  விலை 90 ரூ.  நியூஸ் சைரன் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு கடைசிப் பக்கங்கள் வந்து விட்டது.  விலை 110.  பின்னட்டை பிரமாதம். (இரண்டிலும்தான் அடியேனின் புகைப்படங்கள் உள்ளன!) இரண்டிலுமே புகைப்படம் எடுத்தவரின் பெயர் இல்லை; பதிப்பாளரின் மேல் பழி போட முடியாது;  பிழை திருத்தம் செய்தவன் நான் என்று ஞாபகம் வந்ததும் வயிறு கலங்கியது. … Read more