ஒரு இனிய சந்திப்பு

நேற்று மாலை பார்த்திபன் வீட்டுக்குள் நுழைந்தவுடனே வரவேற்றது வோட்கா.  Pug இன நாய்.  தரையில் அமர்ந்து அதோடு கொஞ்சி விளையாடி விட்டுத்தான் பார்த்திபனுக்கு ஹலோ சொன்னேன்.  பிறகு பாரதிராஜா வீட்டுக்குச் சென்ற போது மணி எட்டரை.  பனிரண்டு வரை பாரதிராஜாவும் பார்த்திபனும் நானும் பேசிக் கொண்டிருந்தோம்.   ”சிங்கத்தில் நல்ல சிங்கம் கெட்ட சிங்கம் என்றெல்லாம் உண்டா, சிங்கம் சிங்கம் தானே, நான் சிங்கம்” என்பது போன்ற ஏகப்பட்ட பஞ்ச் டயலாகோடு பேசினார் பாரதிராஜா.  மிகப் பெரிய … Read more

விழா பதிவுகள் – 14

நண்பர் கிருஷ்ணமூர்த்தி முகநூலில் எழுதியது. ஒவ்வொரு ஆண்டும் நான் மறக்காமல் செல்லும் ஓர் இலக்கிய விழா சாரு நிவேதிதாவின் புத்தக வெளியீடு. சாரு நிவேதிதாவுடைய நூல்களின் வழியே வாழ்க்கை சார்ந்த அறிதலை படிப்பினையாக கொண்டாலும் அதையும் தாண்டி அவரை மையமாக வைத்து எனக்கு கிடைத்த நட்புகள் பல. இன்றளவும் அந்த நட்புகள் என்னுடன் ஆழமாக பிணைந்து இருக்கின்றன. இவையெல்லாமே சங்கமமாகும் இடமாகவே சாருவின் நூல் வெளியீட்டை ஒவ்வொரு முறையும் பார்க்கிறேன். ஏதோ ஒரு நெருடல் ஒவ்வொருமுறையும் என்னை … Read more

விழா பதிவுகள் – 13

ஒரு ஆன்மீக விழா மாதிரி இருந்தது என்றாள் அவந்திகா.  எனக்கு யுவ கிருஷ்ணாவின் ஞாபகம் வந்தது. (அறம் பொருள் இன்பமுமா பிடிக்கவில்லை, யுவ கிருஷ்ணா?) மனுஷ்ய புத்திரனின் ஞாபகமும் வந்தது. ஒருவேளை திருப்பூர் கிருஷ்ணன், லெனின் ஆகியோருடன் சேர்ந்து மனுஷும் ஆன்மீகவாதியாகி விட்டாரா?  இருக்காதே?  அவ்வளவு சீக்கிரம் சாத்தான் தெய்வமாகி விட முடியுமா?  எப்படியோ, கார்ல் மார்க்ஸும் அதே விஷயத்தைத் தொட்டிருக்கிறார்.  கார்ல் மார்க்ஸின் முகநூல் பதிவு இது: சாரு புத்தக வெளியீட்டு விழா: விழாவில் முதலில் … Read more