காதலும் கடந்து போகும்

சினிமா ரசனையைப் பொறுத்தவரை பிரபு காளிதாஸுக்கும் எனக்கும் நன்றாக ஒத்துப் போகிறது.  நேற்று ’காதலும் கடந்து போகும்’ பார்த்தேன்.  இது பற்றி பிரபு எழுதியிருப்பது.  “மரக்கன்றுகள் முறையான கைகளில் சிக்கினால் எவ்வளவு நல்லதோ அவ்வளவு அருமையாக சினிமா இளைஞர்கள் கையில் சிக்கியுள்ளது. மிகவும் சந்தோஷம். பின்னணி இசை, ஒளிப்பதிவு, சவுண்ட் டிசைன் எல்லாமே அற்புதம். விஜய் சேதுபதி படுபயங்கரம். அவர் உலக அரங்கை வெகுவிரைவில் நிச்சயம் தொடுவார். சமுத்திரக்கனி சுப்ரமணியபுரம் படத்திற்குப் பிறகு இதில் நன்றாக நடித்துள்ளார். … Read more

நிலவு தேயாத தேசம் – 21

மீண்டும் சொல்கிறேன்.  அந்திமழை இணைய இதழில் நான் எழுதி வரும் துருக்கி பயணத் தொடரை நூலாக வந்ததும் படித்துக் கொள்ளலாம் என்று இருக்காதீர்கள்.  தொடரில் இப்போது வரும் புகைப்படங்களும் காணொளிகளும் புத்தகத்தில் இடம்  பெறாது.  இப்போதே படித்து விடுவது நல்லது. எஃபெசூஸில் மேலும் சில சுவாரசியங்களைப் பார்த்தேன்.  நகரில் பிராத்தல் என்று ஒரு இடம் இருக்கிறது.  விபச்சார விடுதி.   அதன் நுழைவாயிலில் ஒரு காலடித் தடம் காணப்படுகிறது.  அந்தக் காலடி அளவுக்குக் குறைந்த அளவுள்ள பாதத்தைக் கொண்டவர்கள் … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் : சி.சு. செல்லப்பா (1)

1997-க்குப் பிறகு இந்த நாவல் மறு பிரசுரம் ஆகாததால் இது எங்கே கிடைக்கும் என்று பல பதிப்பகங்களிலும் புத்தக நிலையங்களிலும் தேடினேன். எங்குமே கிடைக்கவில்லை. கடைசியில் ‘நவீன விருட்சம்’ ஆசிரியர் அழகிய சிங்கர் தான் தன்னுடைய சொந்தப் பிரதியை என்னிடம் கொடுத்தார். ஒரு எழுத்தாளர் சொன்னார், யாரையாவது தண்டிக்க வேண்டுமென்றால் அவரிடம் சுதந்திர தாகம் தொகுதிகளைக் கொடுத்து ஒரு அறையில் அடைத்து விடலாம் என்று. இப்போது என் கைகளில் ‘சுதந்திர தாகம்’. எப்படி இருந்தது என்று அடுத்த … Read more

மரணத்தை அவ்வளவு எளிதாகப் பரிசளித்து விட முடியாது : செல்வகுமார்

ஒரு இளம் கவிஞர் முகநூலில் என்னை தேவடியாள் மகனே என்றும் செத்துப் போ என்றும் சொல்லியிருக்கிறார்.  பல நூறு பேரால் பகிரப்பட்ட அந்தப் பதிவு எனக்கும் வந்தது.  நான் இப்போது சொல்லப் போவதை வாசகர் வட்ட நண்பர்கள் கூட நம்பப் போவதில்லை.  சத்தியமாகச் சொல்கிறேன்.  தேவடியாள் மகனே மற்றும் செத்துப் போ என்ற வார்த்தைகள் எனக்கு ஆசானே, உன்னை ஆராதிக்கிறேன் என்பது மாதிரியான வார்த்தைகளாகத்தான் தோன்றின.  இப்போது எனக்கு அன்புக்கும் வெறுப்புக்கும் வித்தியாசமே தெரியவில்லை.  அவருக்கு நான் … Read more

கார்ல் மார்க்ஸ் நூல்கள் வெளியீட்டு விழா பேச்சு – காணொளி

நேற்றைய புத்தக வெளியீட்டு விழா இனிதே நடந்து முடிந்தது.  அது பற்றி இன்று காலை ஒரு சிறுகதை எழுதினேன்.  பிறகு வெளியிடுகிறேன்.  இப்போது நேற்றைய பேச்சின் காணொளி.  ஷ்ருதி டிவி நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.