கல்கி நேர்காணல்

இந்த வார கல்கியில் என் நேர்காணல் வந்துள்ளது.  ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் பேட்டி மாதிரி இல்லாமல் ஒரு எழுத்தாளனின் பேட்டி போல் வந்துள்ளது.  அமிர்தம் சூர்யாவே காரணம்.   அவருக்கு என் நன்றி.

பிச்சைக்காரன் – விமர்சனம் (திருத்தப்பட்டது)

நண்பர் சசியின் இயக்கத்தில் வெளிவந்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் பிச்சைக்காரன் படத்தைப் பார்த்த சூட்டோடு எழுதுகிறேன்.  படம் பிடிக்கவில்லை.  ஓ ஓ ஓ என்று படம் பூராவும் அம்மா பாச அசரீரி செவியைக் கிழிக்கிறது.  பின்னணி இசை கோரம்.  சகிக்கவில்லை.  இசை மிகப் பெரிய குறை.  சண்டைக் காட்சிகள் படு மோசம்.  படத்தில் எனக்குப் பிடித்த இடம், நாயகி டைட்டஸ், விஜய் ஆண்டனியின் கைகளில் முகம் புதைத்து அழும் காட்சி.  நானும் அழுது விட்டேன்.  இரண்டு … Read more

தேர்தல் களம் – அடியேனின் கருத்து

நடைபெற இருக்கிற தேர்தலில் சிறப்பே, கூட்டணி பேரத்தில் எல்லா கட்சிகளும் குறைந்தது இரண்டு முறைக்கு மேல் அசிங்கப்பட்டது தான். ஆனால், எல்லா இடங்களிலும் ஜெயலலிதாவுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதற்குக் காரணம், இந்த அரசு மீது ‘அதிருப்தி அலை’ இல்லை. ஜெயாவின் இந்த செயல்படாத அரசு மீது உள்ள முணுமுணுப்பு, திமுகவுக்கான அலையாக ஏன் மாறவில்லை? போன ஐந்து வருடத்தில் திமுக ஆடிய ஆட்டம், மக்களுக்கு மறக்கவில்லை. அதுதான். மட்டுமல்லாமல் திமுகவின் பலவீனத்தை ஸ்டாலினை விட … Read more

காதலும் கடந்து போகும்…  (பாலாவின் இயக்கத்தில்)

எனக்கு வரும் கனவுகள் சற்று வினோதமானவை.  ஸீரோ டிகிரியில் உள்ள கவிதைகள் பலவும் கனவில் வந்தவைதான்.  காலையில் மறந்து விடும் என்பதால் கனவு முடிந்ததுமே எழுந்து எழுதி விடுவேன்.  இதற்காகவே அப்போதெல்லாம் காகிதமும் பேனாவும் பக்கத்திலேயே இருக்கும்.  சமயங்களில் க்ரைம் கதைகள் தோன்றும்.  விலாவாரியாக வரும்.  சுபம் வரை நீளமாகப் போகும்.  காலையில் எழுந்து பார்த்தால் புகைமூட்டமாகத் தெரியும்.  காட்சிகளும் கதையும் மறந்து போயிருக்கும்.  அந்தக் கதைகளை மட்டும் அப்போதே எழுந்து எழுதி விட்டால் நானும் ராஜேஷ் … Read more

அன்பும் வெறுப்பும்…

அன்புள்ள சாரு, உங்களுக்கு இது என் முதல் கடிதம். உங்கள் ‘நிலவு தேயாத தேசம்’ தொடர்ந்து படித்து வருகிறேன். எங்கோ ஒரு புள்ளியில் ஆரம்பித்து,  தேவையான எல்லா விடயங்களையும் தொட்டு, பின் ஆரம்பப்புள்ளியில்  முடிக்கும் உங்கள் எழுத்து வியக்க வைக்கிறது. வெறும் இடங்களின் குறிப்பு மட்டும் கொடுக்காது, அதன் முழு வரலாற்றையும் சாறு பிழிந்து கொடுக்கும் உங்கள் உழைப்பு என்னை வெகு விரைவாக உங்கள் எழுத்துக்கு அடிமை ஆக்கி விட்டது. உங்கள் எல்லா புத்தகங்களையும் படிக்க ஆவல் … Read more

காதலும் கடந்து போகும்… Sí Señor…

அன்புள்ள  சாரு, “ஏ பங்காளி…”  எனும்  theme பாடல், Amores Perros-ல் வரும்  “Si Senor” பாடல்  வடிவில்  இருக்கிறது  பாருங்கள்.  கொஞ்சம் டெம்போ  மட்டும்  குறைவு.  மற்றபடி  அந்த  வெறிபிடித்த  நாயின்  அதே  குரல்… “ஏ பங்காளி…” “Si Senor” பிரபு   சந்தோஷ் நாராயணனிடம் ஒளிவு மறைவு இல்லை.  தான் எடுப்பதையும் சொல்லிக் கொண்டுதான் வருகிறார்.  பழக்கத்திலும் eccentricity-யிலும் சந்தோஷ் நாராயணனை கிட்டத்தட்ட சந்திர பாபுவுடன் ஒப்பிடலாம்.   சினிமாவில் இப்படிப்பட்ட கலைஞர்களின் வரவு … Read more