ஹூசுனின் உக்கிரம்

ஹூசுனின் உக்கிரத்தை நாம் ’திவான்’ கவிதைகளில் காணலாம்.  பாரசீகப் பாரம்பரியத்தில் ’திவான்’ என்பது அரசவையில் பாடப்படும் ஒரு கவிஞனின் பாடல்களின் தொகுப்பு.  உருதுவில் ’கஜல்’ என்று அழைக்கப்படுவதுதான் பாரசீகத்தில் ’திவான்’.  ’திவான்’ கவிஞர்களில் முக்கியமானவர்கள் என மூன்று பேரைச் சொல்லலாம்.  Fuzûlî (1483 –1556) Bâkî  (1526–1600); Nef‘î (1570 –1635). நேஃபியின் இயற்பெயர் ஓமர். இவரது கவிதைகள் அரசு நடவடிக்கைகளைப் பகடி செய்ததால் ஆட்டமன் சுல்தான்களான முதலாம் அஹ்மத்துக்கும் (ஆட்சிக் காலம்: 1603–1617) அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு … Read more

ஆன்மீகம் என்ன கெட்ட வார்த்தையா?

அன்புள்ள சாரு, சமீபகாலமாக உங்கள் எழுத்து ஆன்மீகத்தின் பக்கம் சாய்ந்துவருவதாக சில வாசகர்கள் கவலை தெரிவித்து வருவதை கவனிக்கிறேன். பெப்ரவரியில் நடைபெற்ற தங்களது புத்தக வெளியீட்டு விழாவில் கூட யாரோ அந்த விஷயத்தை தொட்டது ஞாபகம் வருகிறது. அவ்வாறு தெரிவிப்பதில் தவறில்லை. ஆனால் அதை derogatory தொனியில் சொல்வது போல் படுகிறது. ஆன்மீகம் என்ன தீண்டத்தகாத விஷயமா? அதை நீங்கள் எழுதுவதில் இவர்களுக்கு என்ன பிரச்னை? அல்லது ஆன்மீகம் உங்கள் எழுத்தின் வீரியத்தை குறைக்கிறது என்று சொல்ல முற்படுகிறார்களா? உங்கள் “ராஸ லீலா” … Read more

அறம் பொருள் இன்பம்

கடந்த ஃபெப்ருவரி 27 அன்று ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற அடியேனின் ஏழு புத்தக வெளியீட்டுக்கு இலக்கிய உலகில் வரலாறு காணாத கூட்டம் வந்தது.  இவ்வளவுக்கும் அன்றைய தினம் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதிப் போட்டி, இளையராஜாவின் 1000 பட விழா நடந்தது.  அதையும் மீறித்தான் ராஜா அண்ணாமலை மன்றம் நிறைந்தது.  அதன் கொள்ளளவு 800.  வந்திருந்த பார்வையாளர்களில் 90 சதவிகிதம் பேர் இளைஞர்கள்.  இந்த மன்றம் பலமுறை ஹவுஸ்ஃபுல் ஆகியிருக்கிறது.  ஆனால் என்றுமே இந்த அளவு … Read more

நல்ல சினிமாவின் முகவரி

சினிமா நூல்களும், pure cinema புத்தகக் கடையும்… தமிழ் ஸ்டுடியோ அருண் முழுக்க சினிமாவிற்கு மட்டுமேயான ஒரு புத்தகக் கடை திறப்பது என்று முடிவு செய்துவிட்டேன். ஆனால் சினிமா சார்ந்து தமிழில் எத்தனை புத்தகங்கள் வெளியாகியிருக்கும் நண்பர்கள் யாராவது ஊகிக்க முடிகிறதா? அதற்கு முன்னர் இந்த வரலாறையும் கொஞ்சம் பார்த்துவிடுங்கள். சினிமா தமிழ்நாட்டில் தோன்றி நூறு வருடங்கள் ஆகிறது. மலையாளத்தில் சினிமா ரசனைக்கு மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் இருக்கிறது. உலகம் முழுக்க சினிமாவிற்கான புத்தகங்கள் பெரும் … Read more

மனம் கொத்திப் பறவை – ஒரு மதிப்புரை – ஸ்ரீராம்

சாருவின் அனைத்துக் கட்டுரைத் தொகுப்புகளுக்கும் ‘வாழ்வது எப்படி? – 1, 2, 3…’ என்று பெயர் வைக்கலாம். நம் வசதிக்காகத்தான் வேறு வேறு பெயர்களை வைத்திருக்கிறார். கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்ள பெங்களூரு செல்கிறார் சாரு. இவருக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறையில் வேறு ஒருவர், அறையை காலி செய்துகொண்டிருக்கிறார். அந்த ஐந்து நிமிடத்தில் அந்த நபர், சாருவிடம் கேள்வி மேல் கேள்வியாக கேட்டுத் தள்ளுகிறார். நாம் இன்னொருவருடன் எப்படி உரையாடுவது என்றே தெரியாமல் இருக்கிறோம். இந்தத் தொகுப்பின் ஆரம்பக் … Read more

எனக்குப் பிடித்த எழுத்தாளர்

ஒரு நண்பர் முகநூலில் ரகளை பண்ணிக் கொண்டிருந்தார். ஒரு ரஜினி ரசிகன் மாதிரி அவர் போடும் போஸ்ட்டுகளைப் படித்துத் திளைத்துக் கொண்டிருந்தேன்.  அவருக்குமே போதையில் நிலை கொள்ளவில்லை.  யாருக்குத்தான் புகழ்ச்சி பிடிக்காது.  பிறகு ஒரு நாவல் எழுதினார்.  படித்தேன்.  முடிந்தது கதை.  திட்டுவதற்குக் கூட லாயக்கு இல்லை.  விமர்சனம் செய்வதற்குக் கூட லாயக்கு இல்லை.  கொடுமை, கொடுமையிலும் கொடுமை.  முகநூலில் தெரிந்த அந்த சரவெடி சரவணனை   நாவலில் காணவே காணோம்.  (சும்மா எதுகை முகனைக்காகச் சொன்னேன்.  நீங்கள் … Read more