கொஞ்சமாவது புத்தி வேண்டாமா?

எப்படி ஆரம்பிப்பது என்று புரியவில்லை.  தலைக்கு மேல் வேலை இருக்கிறது.  இருந்தாலும் இந்த சனியன் பிடித்த விஷயத்தை எழுதாவிட்டால் என் மண்டை வெடித்து விடும்.  எனக்கு எதிரிகளால் பிரச்சினையே இல்லை.  ஏனென்றால், நான் யாரையும் எதிரி என்றே நினைப்பது இல்லை.  ஆனால் என்னைத் தங்கள் எதிரி என்று நினைத்து பல அன்பர்கள் ரத்தம் கக்கிக் கொண்டிருப்பதை அறிவேன்.  அவர்கள் என்னைப் பற்றி எழுதும் வசைகள் என்னைப் புண்படுத்துவதே இல்லை.  ஏனென்றால், அன்பைப் போலவே வெறுப்பும் ஒரு மனித … Read more

நிலவு தேயாத தேசம் – 25

மோனா லிஸா பற்றி 1924-ஆம் ஆண்டு பாரிஸில் நஸீம் ’லா ஜியோகோண்டாவின் டயரியிலிருந்து சில குறிப்புகள்’ என்ற ஒரு நீண்ட கவிதை எழுதினார்.  இந்தக் கவிதையை வைத்தே துருக்கியின் பாரம்பரியக் கவிதை மரபிலிருந்து நஸீம் எவ்வளவு தூரம் விலகி விட்டார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அந்தக் கவிதைக்கு முன்னால் 1928-இல் அவர் எழுதிய “A Claim” என்ற கவிதையை வாசித்துக் கொள்வோம்.   A CLAIM (to the memory of my friend SI-YA-U, … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் – சி.சு.செல்லப்பா – பகுதி 5

சில ஆண்டுகளுக்கு முன்பு மகாபலிபுரத்தில் ஓர் அரசியல் கட்சியின் மாநாடு நடந்தபோது மாநாடு நடத்திய தொண்டர் ஒருவரும் சுற்றுவட்டாரப் பகுதியில் வசித்த தலித் ஒருவரும் கலவரத்தில் இறந்து போனது சோமையாஜுலுவின் பாதயாத்திரைகளைப் படித்தபோது எனக்கு ஞாபகம் வந்தது. அப்போதைய போராட்டங்களை அஹிம்சை என்ற அறத்தையும் சத்தியம் என்ற தர்மத்தையும் இரண்டு கண்களாகக் கொண்ட காந்தி என்ற மகா மனிதர் வழி நடத்தினார். அப்படிப்பட்ட உன்னதமான ஒரு காலகட்டத்தை தத்ரூபமாக நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் செல்லப்பா. … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் பற்றி அசோகமித்திரன்

ஏப்ரல் 15 அன்று தி இந்து தொடரில் பழுப்பு நிறப் பக்கங்கள் பற்றி அசோகமித்திரன் எழுதியுள்ளார். – ஸ்ரீராம் http://bit.ly/1p4KPFX