இனிமேல் ஜாலி…

குருப் பெயர்ச்சி நடந்திருக்கிறதாம்.  இனிமே ஐயாவுக்கு ஜாலிதான்.  ஜோதிடர் ஆர்.கே. சதீஷ்குமார் சொல்கிறார்.  முகநூலில் படித்தேன். ரிசபம் ;கிருத்திகை,ரோகிணி,மிருகசிரீடம்,நட்சத்திரங்களை ரிசப ராசியினர் கடந்த ஒரு வருடமாக நான்காம் இடத்தில் குரு இருந்து நிறைய சிரமங்களை கொடுத்து வந்தார் ,மருத்துவ செலவு,வீடு சம்பந்தமான பிரச்சினை,தாய் வழி பாதிப்புகள் ,நிரைய அலைச்சல்,குழந்தைகளால் வருத்தம் இருந்து வந்தது.இப்போது உங்க ராசிக்கு ஐந்தாம் இடத்தில் குரு மாரியிருப்பது நல்ல குரு பலமாகும்.இதனால் எண்ணிய காரியம் ஜெயமாகும்.வீடு ,நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்,தொழிலில் இரட்டிப்பு … Read more

இணையம் தரும் கட்டற்ற சுதந்திரம்! – தினமலர் கட்டுரை

ஒரு நண்பர் என்னிடம் சொன்னார். ‘சாட்டிங்’கில் முன்பின் தெரியாத ஒரு பெண்ணிடம் பழகி ஒரே மணி நேரத்தில் அவளை, ‘வாடி, போடி’ என்று அழைக்க முடியும். அவர் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. ‘செய்து காண்பிக்கவா?’ என்றார். ஒரே மணி நேரத்தில், அந்தப் பெண்ணே இவரை, ‘வாடா, போடா’ என்று சொன்னாள். இவரும் அதற்கு ஏற்றாற்போல், ‘வாடி, போடி!’ ஆனால், வெறும் நட்பு தான்; தப்புத் தண்டா பேச்சு எதுவும் இல்லை. நண்பருக்கு, 30 வயது இருக்கும்; … Read more

படச்சுருள் விழாவில்…

ஞாயிற்றுக்கிழமை மாலை அருணின் தமிழ் ஸ்டுடியோஸ்/ப்யூர் சினிமா அரங்கில் நண்பர்கள் அருண், ஜனநாதன், வஸந்த், மிஷ்கின் ஆகியோருடன் நானும் பேசினேன்.  படச்சுருள் பத்திரிகையின் முதலாம் ஆண்டு விழா.  நான் சுமார் 15 நிமிடங்கள் பேசினேன்.  இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம்.  ஆனால் அதற்கு சற்று முன்னால் தான் நியூஸ் 18 என்ற சேனலுக்கு இரண்டரை மணி நேரம் சினிமாவும் இலக்கியமும் என்ற தலைப்பில் ஒரு நீண்ட உரையை நிகழ்த்தியிருந்தேன்.  அதையே திரும்பவும் அந்த விழாவில் பேசத் தெம்பு இல்லை. … Read more

இந்திய எழுத்தாளனும் உலகமயமாக்கலும்! – தி இந்து கட்டுரை

புகைப்படம்: பிரபு காளிதாஸ் ஐரோப்பியர்கள் 1945-இல் ஒன்றைப் புரிந்துகொண்டார்கள். தேசியம் பட்டினி போடும்; செல்வத்தையெல்லாம் ராணுவத்துக்குச் செலவிட்டுவிட்டு நாம் உருளைக் கிழங்கைத் தின்று வாழ வேண்டுமா என யோசித்தார்கள். விளைவு, ஐரோப்பிய ஒன்றியமாக இணைந்தார்கள். விசா போன்ற அனுமதிச் சீட்டுகள் இல்லாமலேயே ஐரோப்பா முழுவதையும் ஒருவர் சுற்றி வர முடிகிறது. ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் ஒரே பணம். ஆனால், இங்கே ஒரே நாடாக இருந்த இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் எல்லாம் ஒன்றை ஒன்று விரோதம் பாராட்டிக் கொண்டிருக்கின்றன. … Read more

மாதொருபாகன் பற்றி

இன்று இரவு ஒன்பது மணிக்கு, ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில், ‘நேர்படப் பேசு’ என்ற விவாத நிகழ்ச்சியில் சாரு நிவேதிதா கலந்துகொள்கிறார். நண்பர்கள் அவசியம் பார்க்கவும். – ஸ்ரீராம்