ரிஷான் ஷெரீஃபிடமிருந்து ஒரு முக்கியமான வேண்டுகோள்…

வாசகசாலை; மனதிற்கான வைத்தியசாலை வாசிப்பு பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். மனதுக்குப் பிடித்த புத்தக வாசிப்பானது, நோயாளிகளை விரைவில் குணப்படுத்த ஏதுவாகும். அவர்களது மனதை சாந்தப்படுத்தும். வெளிநாடுகளில் நோயாளிகளை விரைவில் குணமடையச் செய்ய இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள். அந்த நடைமுறை, இலங்கையிலுள்ள அநேகமான வைத்தியசாலைகளில் பின்பற்றப்படுவதில்லை. காரணங்கள் பலவற்றைச் சொல்லலாம். இலங்கையிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும், அங்கு அனுமதிக்கப்படும் நோயாளிகளை, ‘நாம் நோயாளிகள்’, ‘நாம் பலவீனமானவர்கள்’ என உணரச் செய்துகொண்டேயிருக்கின்றன. இதே நிலைப்பாடுதான் நோயாளிகளுடன், அவர்களுக்கு உதவுவதற்காக, கூடத் … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள்: ந. முத்துசாமி (பகுதி 2)

இப்போதெல்லாம் ஆண்டு தோறும் நடக்கும் புத்தக விழாவுக்காக அவசர கோலத்தில் எழுத்தாளர்கள் எழுதிக் குவிக்கும் புத்தகங்களைக் கண்டு மிகவும் துக்கப்படுவது என் வழக்கம். பதிப்பாளர்கள் கொடுக்கும் நெருக்கடியும், எங்கே புதிய புத்தகம் வராவிட்டால் நம்மை எல்லோரும் மறந்து விடுவார்களோ என்ற அச்சமும் பீடிக்க எழுத்தாளர்கள் எழுதிக் குவிக்கிறார்கள். இந்த நிலையில் ‘நீர்மை’ தொகுப்புக்கு ந. முத்துசாமி எழுதிய முன்னுரையை நாம் வாசிக்க வேண்டும். அவர் சொல்கிறார்: “இந்தக் கதைகளை எல்லாம் எப்படி எழுதினேன் என்று ஆச்சரியமாக இருக்கிறது. … Read more

அறம் பொருள் இன்பம்

ஈரோடு புத்தகக் கண்காட்சியில் அறம் பொருள் இன்பம், டிஸ்கவரி புக் பேலஸ் (அரங்கு எண் – 97) மற்றும் புதுப்புனல் (அரங்கு எண் – 57) அரங்குகளில் கிடைக்கும். – ஸ்ரீராம்

மிஷ்கினின் சவரக் கத்தி

கொடூரமான கொலை ஆயுதமான சிலுவை ஒரு மாமனிதனின் மகத்தான தியாகத்தால் தியாகத்தின் குறியீடாக மாறியது.  அதைப் போல, கத்தி என்பது கொலைக்கானது அல்ல; அது ஜனனத்தின் குறியீடு, தொப்புள் கொடியை அறுப்பதன் மூலம் என்கிறார் மிஷ்கின்.  மிஷ்கின் எழுதிய, அருள் கொரேலி இசையமைத்த இந்த அற்புதமான பாடலைக் கேட்டேன்.  சவரக் கத்தி மிஷ்கினின் மகுடத்தில் மற்றுமொரு மயிலிறகு.  வாழ்த்துக்கள் நண்பனே… இதை எழுதிய பிறகுதான் மிஷ்கினுக்கு ஃபோன் போட்டு யார் குரல் என்றேன்.  உங்கள் நண்பனின் குரல், … Read more