தமிழ் ஸ்டுடியோவின் B. லெனின் விருது வழங்கும் விழா – 2016

  தமிழ் ஸ்டுடியோவின் B. லெனின் விருது 2016 பெறுபவர்: தீபா தன்ராஜ் 20-08-2016, சனிக்கிழமை, மாலை 6.30 மணிக்கு. பிரசாத் லேப், சாலிகிராமம், ஏவிஎம் ஸ்டுடியோ எதிரில் உள்ள சாலையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. வழக்கமாக நிகழ்வுகள் நடைபெறும் பிரசாத் பிரிவியூ திரையரங்கம் அல்ல, பிரிவியூ திரையரங்கிற்கு அடுத்துள்ள பிரசாத் ரெக்கார்டிங் திரையரங்கில்) தொடர்புக்கு: 9840698236 சிறப்பு அழைப்பாளர்கள்: இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆய்வாளர் வ. கீதா சாரு நிவேதிதா இயக்குனர் லீனா … Read more

போலிகளை என்ன செய்யலாம்?

அன்புள்ள சாரு, தில்லியிலிருந்து நவீன். ராஸ லீலா படித்தேன். google play வில் கிடைத்தது மிக வசதியாக இருந்தது. அதன் பிறகு தேகமும் படித்தேன். ராஸ லீலா முதல் பாகத்தில் வரும் கண்ணாயிரம் பெருமாளின் அனுபவங்கள் சுவாரசியமாக இருந்ததை விட அவை அளித்த திறப்புகள் அபாரம். வேறு தள சிந்தனைக்கு வித்திட்டமைக்கு நன்றி. அடுத்து படித்தது தேகம். ஒரு உடலின் தேடலாகவும் அந்த தேடலின் அலக்கழிப்புகளையும் பதிவு செய்திருந்தது அருமை. இரு நாவல்களிலுமே பெண்கள் எழுதும் கடிதங்கள் … Read more

பழுப்பு நிறப் பக்கங்கள் – ந. முத்துசாமி (பகுதி 3)

நான் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகிறேன், எழுத்தாளர்களைத் தமிழ்ச் சமூகம் கொண்டாடுவதில்லை என்று. உதாரணம், ந. முத்துசாமி. இன்றைய தினம் உலக நாடக அரங்கில் இப்ராஹீம் அல்காஷி ஒரு legend-ஆகக் கருதப்படுபவர். ந. முத்துசாமியின் பெயர் அப்படித் தெரிந்திருக்கவில்லை என்றாலும் ரத்தன் திய்யம் அளவுக்காவது உலக அளவில் தெரிந்திருக்க வேண்டாமா? ரத்தன் திய்யத்தைத் தெரியாத ஒரு மணிப்பூர்க்காரரை நாம் பார்க்க முடியாது. இந்திய நாடகம் என்றால் அதில் முதல் ஐந்து பேரில் வரும் பெயர் ரத்தம் திய்யம். … Read more

லெனின் விருது : தமிழ் ஸ்டுடியோஸ்

தமிழ் ஸ்டுடியோ அருணின் கோரிக்கை: லெனின் விருது – அனுராக் காஷ்யப் சென்னை வருகை – நன்கொடை    தமிழ் ஸ்டுடியோ இயக்கம் ஒவ்வொரு ஆண்டும் சுயாதீன திரைப்படக் கலைஞர்களை தெரிவு செய்து அவர்களுக்கு லெனின் விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு ஆவணப்பட இயக்குனர் தீபா தன்ராஜ் லெனின் விருதிற்காக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். ஆகஸ்ட் 20 ஆம் தேதி சனிக்கிழமை சென்னையில் விழா நடைபெறவிருக்கிறது. ஒவ்வொருமுறையும் லெனின் விருது நடைபெறும்போது நன்கொடை கேட்டு எழுதுவேன். ஆனால் சென்ற ஆண்டே … Read more