எது இந்துப் பாரம்பரியம்?

பட்டாசு வெடிப்பது நல்லதல்ல என்று சொன்னால் சில அறிவுக் கொழுந்துகள் நீ இந்தியப் பாரம்பரியத்துக்கு எதிராகப் பேசுகிறாய் என்று குற்றம் சாட்டுகின்றனர்.  எது இந்தியப் பாரம்பரியம்?  எது இந்துப் பண்பாடு?  பட்டாசு வெடிப்பதா?  இதோ ட்டி.ஆர். விவேக் பிரித்து மேய்ந்திருக்கிறார்.  படித்துப் பாருங்கள். http://scroll.in/article/820461/is-complaining-about-diwali-cracker-pollution-really-a-case-of-hindu-shaming

சுப மங்களா

கோமல் சுவாமிநாதனின் ஆசிரியத்துவத்தில் வெளிவந்த சுப மங்களா இதழ் கோமல் காலமானதும் நின்று போனது.  அதை ஈடு செய்வதற்கு வேறு எந்தப் பத்திரிகையாலும் முடியவில்லை.  சுப மங்களாவில் தமிழ் இலக்கியத்தின் எல்லா தரப்பினரும் எழுதினார்கள்.  என்னுடைய திர்லோக்புரி கதையும் அதில் தான் வெளிவந்தது.  சுப மங்களா இதழ் இப்போது இணையத்தில் படிக்கக் கிடைக்கிறது.  பயன்படுத்திக் கொள்ளுங்கள். http://www.subamangala.in/

பயிற்சிப் பட்டறை

ஒளிப்பதிவு & புகைப்படக் கலை – பயிற்சிப்பட்டறை 06-11-2016, ஞாயிறு, மாலை 5 மணிக்கு. நன்கொடை: 100 ரூபாய் மட்டும். பயிற்சியளிப்பவர்: ஒளிப்பதிவாளர் வைட் ஆங்கில் ரவிசங்கர் நண்பர்களே, தமிழ் சினிமாவின் நூற்றாண்டை தமிழ் ஸ்டுடியோ கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தொகுப்பு குறித்து படத்தொகுப்பாளர் லெனின் சென்ற மாதம் ஒரு குறும் பயிற்சிப்பட்டறை நடத்திக் கொடுத்தார். அதன் தொடர்ச்சியாக ஒளிப்பதிவாளரும் தமிழ்நாட்டின் மிக சிறந்த புகைப்படக் கலைஞருமான வைட் ஆங்கில் ரவிசங்கர் எதிர்வரும் ஞாயிறு … Read more

எழுத்தாளர் என்ற அடைமொழி

ஜெயமோகனின் தீவிர விசிறி என்றாலும் அமிர்தம் சூர்யாவை எனக்குப் பல காரணங்களால் பிடிக்கும்.  அடிக்கடி சம்ஸ்கிருத காவியங்களிலிருந்தும் வேதத்திலிருந்தும் எடுத்துக்காட்டுகள் சொல்வார்.  மேடையில் பிரமாதமாகப் பேசுவார்.  பழகுவதற்கு இனிமையானவர்.  நல்ல கவிஞர்.  ஆனால் கொஞ்சம் வெகுளி என்பதால் மேடையில் எப்போதாவது ஏடாகூடமாகப் பேசி வைத்து விடுவார்.  (பிரபு காளிதாஸ் கூட்டம்)  நானும் அப்படித்தானே என்பதால் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.  அவருடைய கவிதை நூல் வெளியீட்டு விழாவில் அடியேனும் கலந்து கொள்கிறேன்.  அது சம்பந்தமாக என்னைத் தனிப்பட்ட … Read more

எடிட்டிங்

தமிழின் சமகால இலக்கியத்தில் எந்தப் பிரதியுமே செப்பனிடப்படுவதில்லை.  எடிட் செய்யப்படுவதில்லை.  எடிட்டர் என்று ஒரு நபரே இங்கே இல்லை.  எல்லா நாவல்களும் எடிட் செய்யப் படாமலேயே வந்து கொண்டிருக்கின்றன.  மேலும், எடிட் செய்வதைத் தமிழ் எழுத்தாளர்களும் ஏதோ சென்ஸார் செய்வது போல் நினைப்பதால் அது ஒரு தொடப்படாத மர்மப் பிரதேசமாகவே இருக்கிறது.  ஆனால் இதில் எனக்கு உடன்பாடு இல்லை.  ஒவ்வொரு நாவலும் எடிட் செய்யப்பட வேண்டும் என்றே நான் நம்புகிறேன்.  ஒரு சில விதிவிலக்குகள் மட்டுமே இருக்கலாம்.  … Read more