The outsider… (8)

தியாகராஜாவை மீண்டும் தொடங்குவதற்கு முன் படிக்க வேண்டிய சில புத்தகங்களை முடிக்கலாம் என்று நினைத்து நேற்று அந்த்தோனியோ ஸ்கார்மேத்தாவின் The Days of the Rainbow நாவலை எடுத்து நேற்றே முடித்து விட்டேன்.  அது பற்றி பிறகு விரிவாக எழுதுகிறேன்.  ஆனால் ஒரு விஷயம் என் மனதில் திரும்பத் திரும்ப வட்டமிட்டுக் கொண்டே இருந்தது.  உலகில் எத்தனையோ நாடுகள் இருக்க ஏன் திரும்பத் திரும்ப சீலே? எத்தனை விளக்கினாலும் நானே இந்தக் கேள்வியைத் தொடர்ந்து கேட்டு, தொடர்ந்து … Read more

நாளையிலிருந்து தியாகராஜா…

நான்தான் ஔரங்ஸேப்… நாவலை முடித்து சற்று முன்னர்தான் ஸீரோ டிகிரிக்கு அனுப்பினேன். ஒருவழியாக அந்த நெடுங்கதை முடிந்தது. நாளையிலிருந்து தியாகராஜாவை மீண்டும் தூசி தட்டி எடுக்க வேண்டும். சிறிய நாவல்தான். மூன்று மாதத்தில் முடித்து விடலாம். ஏற்கனவே பாதி எழுதி விட்டேன் என்பதால் சிரமம் இல்லை.

ஒரே நாளில் உலகப் புகழ்

நுபுர் ஷர்மா, ஸல்மான் ருஷ்டி, தஸ்லீமா நசரீன், நம்முடைய பெருமாள் முருகன் எல்லோரும் மத நம்பிக்கைகளில் கை வைத்தார்கள். ஒரே நாளில் உலகப் புகழ் கிட்டியது. பெருமாள் முருகனைப் பார்த்துத்தான் ரொம்பவும் பொறாமைப் பட்டேன். கோவிலில் க்ரூப் செக்ஸ் நடக்கிறது என்று எழுதினாலும் எழுதினார், ஒரே நாளில் உலகப் புகழ் எய்தினார். இரண்டு காரணங்கள். ஒன்று, உலகம் பூராவிலும் உள்ள புத்திஜீவிகள். கோவிலில் க்ரூப் செக்ஸ் என்றதும் இந்த உலக புத்திஜீவிகள் அத்தனை பேரும் படு குஷியாகி … Read more

நண்டுக் குழம்பு

நேற்று உடல் நலம் பற்றி எழுதினேன் இல்லையா, எழுதியிருக்கக் கூடாது என்று இரவு தோன்றியது. எனக்கும் நல்ல ஜுரம். உடம்பு வலி. காலையில் எழுந்ததும் நடைப் பயிற்சிக்கு செல்ல முடியவில்லை. ஐந்து மணிக்கே ராகவனுக்கு வாட்ஸப்பில் செய்தி அனுப்பினேன். சில தினங்களுக்கு வர முடியாது என்று. ஏழு மணிக்கு ஃபோன் செய்தார். என்னால் எடுக்க முடியவில்லை. ஜுரம் அடித்தாலும் பூனை சேவை செய்தாக வேண்டுமே? ஏழரைக்கும் போன் செய்தார். அவர் வாட்ஸப் பார்க்கவில்லை என்று தெரிந்து கொண்டேன். … Read more

சுதந்திரம்

வீட்டில் அவந்திகா இருக்கும் போது நான் போன் பேசுவதில்லை. எனக்கு வரும் அழைப்புகளுக்கும் ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் பதில். இப்படி இருப்பதற்கே அவந்திகா அடிக்கடி சொல்லும் புகார், நான் எப்போதும் போன் பேசிக் கொண்டே இருக்கிறேன் என்பது. ஒரு முழு நாளிலும் சீனியோடு நாலு நிமிடம் பேசினால் பெரிது. வேறு யாரோடும் பேசுவதில்லை. ஒரே ஒரு நாள், நம் வளன் பாதிரியார்தானே, பேசினால் என்ன பிரச்சினை வரப் போகிறது என்று அவன் அழைத்தபோது எடுத்தேன். 95 வயதுக்கு மேல் … Read more

அமெரிக்கத் தமிழர்கள்

பின்வரும் இணைப்பில் உள்ள கட்டுரையின் ஒவ்வொரு வார்த்தையையும் என் வார்த்தையாகவும் கொள்ளலாம். அமெரிக்கத் தமிழர்களுக்குச் சொன்னவை… | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)