முகமூடிகளின் பள்ளத்தாக்கு

I finished reading ‘mugamoodigalin  Pallathakku’ Truth be told, a tantalizing reading experience. A soul-stirring  fiction. Tarun has diagonised the crux of humanity that is not so easily detected and is roaming freely in the society. This beautifully written text is against sanctitude, the origin of despotism. And it is a fervent revolution against the term … Read more

குரு பூர்ணிமா

ஒருமுறை மஹா பெரியவரிடம் ஒரு பக்தர் கேட்டார், என்னுடைய குருவிடம் பல தீய பழக்கங்கள் இருக்கின்றன. அதனால் குருவை மாற்றி விடவா? வீட்டைத் தூய்மை செய்யும் துடைப்பம் அழுக்காகத்தான் இருக்கும். வீடு சுத்தமாக இருக்கிறதா என்பதை கவனி. குருவை மாற்றினால் உனக்குப் பரிசுத்தமான குரு எப்போதுமே கிடைக்க மாட்டார். என் எழுத்துதான் உங்களுக்கு நான் அளிக்கும் ஞானம். நான் அளிக்கும் பரிசு. என் எழுத்து ஒரு பொக்கிஷம். அதிலிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் அள்ளிக் கொள்ளுங்கள். மற்றபடி நான் … Read more

இன்று என்ன நாள்?

எனக்குப் பொதுவாக இது எந்த மாதம் என்று தெரியாது. என்ன தேதி என்று தெரியாது. என்ன கிழமை தெரியாது. அதேபோல் இன்று எழுந்த போதும் நாள், கிழமை, மாதம் எதுவும் தெரியாது. ஆனால் ஒரு கேள்வி எழுந்தது. ரொம்ப நாளாக அவருக்குப் பிறந்த நாள் என்று கேள்விப்படவில்லையே? தாண்டி கீண்டிப் போய் விட்டதோ? யாரைக் கேட்கலாம்? அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்க்கலாமா? அவரையே கேட்டால் சுவாரசியம் இருக்காதே? அவர் வேறு வேலை மிகுதியால் பத்துப் பதினைந்து நாட்களாகப் … Read more

சோர்வாக இருக்கிறீர்கள், ஓய்வெடுங்கள்…

நான் என்னுடைய இணைய தளத்தில் எழுதுவதை என் நண்பர்கள் யாரும் ஃபேஸ்புக்கில் எடுத்துப் போட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். என் நண்பர்களை மட்டுமே கேட்டுக் கொள்கிறேன். மற்றவர்கள் பற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால், ஃபேஸ்புக்கில் எழுதுபவர்கள் பெரும்பாலும் ஒன்றும் தெரியாதவர்கள், படிக்காதவர்கள். மிக மேம்போக்கான அரசியல் அபிப்பிராயங்கள் கொண்டவர்கள். அதை விட முக்கியமாக, ஃபாஸிஸ மனோபாவம் உடையவர்கள். சற்று முன்பு நான் எழுதியிருந்த பதிவுக்கு ஒரு ஃபேஸ்புக் அன்பர் “சாரு, நீங்கள் சோர்வாக இருக்கிறீர்கள் போல் … Read more

யாருக்கு வேலை செய்கிறீர்கள்?

ஹிந்துத்துவ எதிர்ப்பாளர்களின் சமீப கால நடவடிக்கைகள் மோடியை இன்னும் பத்து ஆண்டுகளுக்கு பிரதம மந்திரி நாற்காலியிலேயே உட்கார வைக்கும் என்று தோன்றுகிறது. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிறுபான்மையினர் நடத்தும் கல்விக் கூடங்களில் மோடிக்கு எதிரான அரசியல் பிரச்சாரம் நடந்தது. குறிப்பாக கிறித்தவ அமைப்புகளில். அது ஹிந்துக்களை ஒருங்கிணைக்கவே பயன்பட்டது. அது மோடிக்கு ஆதரவான வாக்குகளாக மாறியது. அரசியலில் ஆர்வம் இல்லாத ஹிந்துக்களைக் கூட மோடிக்கு ஆதரவாக ஒருங்கிணைக்கவே அது போன்ற மோடி எதிர்ப்புச் செயல்பாடுகள் பயன்பட்டன. இப்போது … Read more