சீலே பயணம், ஆவணப்படம் தொடர்பாக…

தெ அவ்ட்ஸைடர் ஆவணப் படத்துக்கான படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.  தில்லியும் கோவாவும் சீலேயும்தான் பாக்கி.   போயும் போயும் ஒரு ஆவணப் படத்துக்கா அம்பது லட்சம் ஆகும் என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.  கேமரா தளவாடங்கள் வாங்குவதற்கே பத்து லட்சம் ஆகி விட்டது.  கேமராமேன் சம்பளம், தங்கும் செலவு, பயணம், உணவு என்று செலவு அடித்துக் கொண்டு போகிறது.  எல்லா செலவையும் பிச்சை எடுத்துத்தான் செய்து கொண்டிருக்கிறோம்.  ஆனால் பெரிய செலவுக்கு மட்டும் கையேந்தினாலும் கிடைப்பதில்லை.  … Read more

சண்டை இல்லாத ஜாக்கி சான் படமா?

செக்ஸ் இல்லாமல் ஒரு ஆயிரம் பக்க நாவலை எழுதியிருக்கிறேன் என்று நேற்று எழுதியதும் சண்டை இல்லாத ஜாக்கி சான் படமா என்று கேட்டிருக்கிறார் நண்பர் சமஸ்.  விவாதங்கள் என்றால் இப்படித்தான் ஆரம்பிக்க வேண்டும்.  பொதுவாக இலக்கிய சமாச்சாரங்கள் எதுவுமே பொதுவெளியில் கவனம் பெறுவதில்லை.  அதை முதல் முதலில் உடைத்தவர் சமஸ்தான்.  அவர்தான் தமிழ் இந்துவில் எழுத்தாளர்கள் பற்றிய செய்திகளை வெளியிட்டார்.  அதுவரை அந்த மரியாதை எல்லாம் சினிமா நட்சத்திரங்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது.  ஒரு எழுத்தாளர் இன்னமும் … Read more

நான்தான் ஔரங்ஸேப்… முன்பதிவுத் திட்டம்

நீண்ட நாட்களாக இந்தப் பக்கம் வர முடியவில்லை.  இரண்டு காரணங்கள்.  ஒன்று, ஆவணப் படப்பிடிப்பு.  இரண்டு, நான் தான் ஔரங்ஸேப்… நாவலின் இறுதிக் கட்ட பிழை திருத்த வேலை.  ஒரு பிழை கூட இருக்கக் கூடாது என்று ஒவ்வொரு எழுத்தாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  நிறுத்தற் குறிகளில் கூட பிழைகள் இருக்கலாகாது.  பிழை திருத்தம் முடித்து நாவலை பதிப்பகத்தில் கொடுத்து விட்டேன்.  இந்த ஆகஸ்ட் இறுதிக்குள் நாவல் வந்து விடும்.  ராம்ஜி முன் வெளியீட்டுத் திட்டம் அறிவித்திருக்கிறார்.  நாவல் … Read more

யூதாஸ் (5)

150 சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்த பாஸ்டன் பாதிரியின் முழுப் பெயர் ஜான் கேகன்.  அவர் சிறையில் சக கைதியால் கழுத்தில் மிதித்துக் கொல்லப்பட்டார்.  இது பற்றி டாக் பேசுகிறார். ”(எனக்கு) மாசிமோ ஸ்டான்ஸியோனேவின் குழந்தைகள் படுகொலை ஓவியம்தான் நினைவுக்கு வருகிறது. அவ்வோவியத்தில் ஒருவன் இரக்கமற்று குழந்தையின் மீது வாளைச் சொருக கை உயர்த்தி இருப்பான். குழந்தையின் தாய் போராடிக் கொண்டிருப்பாள். தரையில் ஏற்கனவே வெட்டப்பட்ட குழந்தைகளின் பிஞ்சு மணிக்கட்டுகள் கிடக்கும். வேதனையில் கதறிக் கொண்டிருப்பார்கள். அப்படித்தான் … Read more

யூதாஸ்: A devil in a midnight mass (4)

பாதிரியார் டாக்கிடம் கியாரா கேட்கிறாள், கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே பாதிரிகள் எதற்கு என்று. டாக் ஒரு பதிலைச் சொல்கிறார். அதை ஷிட் என்கிறாள் கியாரா. பாதிரிகளால் அவள் அடைந்த அனுபவம் அப்படி. அந்தச் சம்பவங்களுக்காக ஒவ்வொரு பாதிரியும் இந்த பாஸ்டன் தெருக்களில் மண்டியிட்டு அமர்ந்து ஒவ்வொரு மனிதனிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொல்லி விட்டு, இந்தப் பாடலைக் கேளுங்கள் என்று பின்வரும் பாடலைப் போடுகிறார். பில்லி டேலண்ட்டின் எ டெவில் இன் அ மிட்நைட் மாஸ். … Read more

யூதாஸ் நாவலை வாசிப்பது எப்படி? (3)

ஜூடும் கியாராவும் ஒருநாள் டாக்கைப் பார்க்கச் செல்கிறார்கள்.  டாக் ஒரு வயதான பாதிரியார்.  பார்க்கச் செல்லும் போது டாக்கின் இல்லத்தில் வெர்தியின் நபூக்கோ என்ற ஆப்பராவில் இடம் பெறும் எபிரேய அடிமைகளின் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.  டாக் தனது இறப்புத் திருப்பலியின் இறுதியில் இதை வாசிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார் என்று கியாராவிடம் சொல்கிறான் ஜூட்.  அந்தப் பாடலைக் கேட்கும் போது கியாராவின் மனதிலிருந்த பாரம் இறங்குவது போல் தோன்றுகிறது.  இப்படியான பல உள்மடிப்புகளைக் கொண்டதாக இருக்கிறது … Read more