இன்னும் எத்தனை காலத்துக்கு?

காலையில் எழுந்து நடைப்பயிற்சிக்குக் கூட போகாமல் இதை எழுதத் தொடங்கியிருக்கிறேன். இதோ எட்டாம் தேதி அன்று நடக்க இருக்கும் ஐரோப்பிய சினிமாவுக்கு வேறு தயார் செய்ய வேண்டும். அத்தனையையும் விட்டு விட்டு இதை எழுதிக்கொண்டிருக்கும் காரணம், அத்தனை மன உளைச்சல். ஏன்? தெருவில் செல்லும் ஒரு பெண்ணைப் பார்த்து, எந்த வன்முறையும் செய்யாமல், “உன்னோடு ஒரே ஒரு முறை படுத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டால் அவளுக்கு எப்படி இருக்கும்? அந்த மனநிலையில் இருக்கிறேன் நான். இன்னும் எத்தனை … Read more

காலம்

என் தோழி ஒருவர் அறுபது பூனைகளும் அறுபது நாய்களும் வளர்க்கிறாள். அவள் சொன்ன ஒரு சம்பவம் இது. பார்ப்பதற்கு மேட்டுக்குடி பெண்ணைப் போல் இருப்பாள். மேட்டுக்குடியும்தான். ஆனாலும் குடும்பத்தைச் சாராமல் தனித்து வாழ்பவள். காரணம் மேலே உள்ளது. நாய்களோடு காலை ஐந்து மணிக்கு வாக்கிங் போகும்போது துப்புரவுத் தொழிலாளிகள் அவளிடம் “டீ குடிக்க பத்து ரூபா குடுங்க மேடம்” என்று கேட்பார்களாம். இவள் சிரித்து விட்டுக் கடந்து விடுவாள். ஆனால் மனதில் நினைத்துக் கொள்வாளாம். “உங்களிடம் இருந்தால் … Read more

ஒரே ஒரு ஐரோப்பிய சினிமா

ஒரு ஆயிரம் திரைப்படம் இருக்கும். ஐரோப்பிய சினிமா ஒரு கடல். அதில் ஒரே ஒரு திரைப்படத்தைக் கூறுங்கள் என்றால் கண்டக்டர் என்ற போலந்துத் திரைப்படத்தைக் கூறுவேன். 1980இல் அந்தத் திரைப்படம் வெளிவந்த போது தில்லியில் உள்ள போலந்து கலாச்சார மையத்தில் பார்த்தேன். அதற்குப் பிறகு பார்க்க வாய்க்கவில்லை. ஆனாலும் அதன் காட்சிகள், வசனங்கள் இன்னமும் ஞாபகம் உள்ளன. ஏனென்றால், அதில் வரும் ஆர்க்கெஸ்ட்ரா கண்டக்டரும் நானும் ஒன்றுதான். இத்தனைக்கும் படத்தைப் பார்க்கும்போது என் வயது இருபத்தேழுதான். கண்டக்டராக … Read more

ஐரோப்பிய சினிமா: சில வார்த்தைகள்

திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருப்பதுதான். என்னுடைய ரசனை மிகவும் தனித்துவமானது. ஐரோப்பிய சினிமா என்றதும் எல்லோரும் பெர்க்மன் என்பார்கள். நான் இந்த நிகழ்ச்சியில் பெர்க்மனை சேர்க்கப் போவதில்லை. ஜப்பானிய சினிமா என்றால் குரஸவா போல. இந்தியா என்றால் சத்யஜித் ரே போல. அந்த அடையாளங்களில் நான் ஒருபோதும் சிக்குவதில்லை. உங்களுக்கு பெர்க்மன் பற்றிக் கற்பிக்க யாரும் தேவையில்லை. ஏஐ போதும். ஆனால் நான் இப்போது சொல்லப் போகும் இயக்குனர் பற்றி நான் ஒருவன் தான் சொல்ல முடியும். பெயரைக் … Read more

ஐரோப்பிய சினிமா அறிமுக நிகழ்ச்சியை ஏன் தவற விடக் கூடாது?

இந்த முறை நான் எந்தவித ப்ரமோஷன் வேலையும் செய்யவில்லை. என் நெருங்கிய நண்பர்களிடம் கூட நிகழ்ச்சிக்கு வருகிறீர்களா என்று தனிப்பட்ட முறையில் கேட்கவில்லை. என் குரலில் ஒரு காணொலியைத் தயார் செய்து அனுப்பினால் பலரையும் சென்று அடையும் என்று ராஜா சொன்னார். செய்யவில்லை. ஒரே ஒரு ப்ரமோஷன் வேலையில் கூட ஈடுபடவில்லை. காரணம், இந்த நிகழ்ச்சியில் நான் சொல்லப் போகும் விஷயங்களை ஐந்து லட்சம் ரூபாய் கட்டணம் கட்டி ஒரு அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில்தான் ஒருவர் கற்றுக் கொள்ள … Read more

ஐரோப்பிய சினிமா @ Ex. French Colony : அராத்து

சாரு நிவேதிதா ஐரோப்பிய சினிமா – அறிமுக பயிற்சி பட்டறை பாண்டிச்சேரியில் நடத்துகிறார். லௌகீக வாழ்வில் சாரு, தான் ஒரு “ஸ்மார்ட்” அல்ல என்று பலமுறை எழுதியிருக்கிறார். ஐயா லௌகீக வாழ்வில் எப்போதும் லேட் பிக் அப் தான். ஒரு சாதாரண அல்ப விஷயத்தைக் கிளிப்பிள்ளைக்குச் சொல்லிக் கொடுப்பது சொல்லிக் கொடுத்தாலும் சரியாகத் தவறாகச் செய்வார். ஆனால் இப்படித் தவறாகச் செய்வதில் எப்போதும் தவறியதில்லை. அது ஒரு அருமையான மனப்பாங்கு என்று வையுங்கள். விமானப் பயணத்தின் போது … Read more