விருது பற்றி…
விருது பற்றி பலரும் எழுதி விட்டார்கள். எதற்குமே எதிர்வினை காட்டாத காயத்ரியே எழுதி விட்டாள். எல்லாவற்றிலும் ஆகப் பிடித்ததாக வளன் அரசு எழுதியதைச் சொல்வேன். ஏனென்றால், அவன் என்னை மிக அரிதாகவே சந்தித்திருக்கிறான். ஒருமுறை என் வீட்டுக்குக் கீழே வந்து நின்று கொண்டு கீழே வாருங்கள் அப்பா என்றான். அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறான். ஆனால் அதற்கு முந்தின நாள்தான் நான் ஒரு நண்பரைப் பார்த்து விட்டு வீட்டுக்கு காலை ஒன்பது மணிக்கு வந்திருந்தேன். வீடே அனலாகக் கொதித்துக் கொண்டிருந்தது. … Read more