எழுத்தும் வாழ்வும்…

சாருநான் தங்களுக்கு முன்னமே வாழ்த்து சொல்லியிருப்பினும் இன்றுசாருதாசன் மற்றும் அராத்து, வளன், காயத்ரி, நிர்மல், முருகேச பாண்டியன் கட்டுரைகளைப் படிக்கும் போது நான் வெறுமனே சம்பிரதாயமான வாழ்த்தாகக் கூறிவிட்டதுபோல ஒரு உறுத்தல்.இன்று நாங்கள் கொண்டாடிவரும் இத்தருணமானது தமிழ் இலக்கியப் பரப்பின் ஒரு முக்கிய நிகழ்வாகவே பார்க்கிறேன். இது ஓர் ஆரோக்கியமான, நிறைவான, முதிர்ச்சி பெற்ற சூழலின் துவக்கப்புள்ளியாகத் தெரிகிறது. அது மட்டுல்லாது பலரது கடிதங்கள் ஏற்படுத்திய முக்கிய விளைவுஎன்னவெனில் மீண்டும் தங்களது நூல்களை மறுவாசிப்பு செய்யவும் சரியான … Read more

இன்னும் இருநூறு ஆண்டுகள் கழித்து…

1.அது என்ன பிறழ்வெழுத்து? இவ்வாறு சொல்பவர்கள் அனைவரும், சாருவின் கட்டுரைகளைப் படித்துள்ளார்களா? பிறழ்வெழுத்து என்ன மனம் பிறழ்ந்த நிலையில் எழுதப்படுவதா? மனம் பிறழ்ந்த மக்களைப் பற்றி எழுதப்படுவதா? மனம் ஏன் பிறழ்கிறது? தனிமை, இருந்தலியல் பிரச்சினை, எதிர்கால நிச்சயமற்ற தன்மை, முக்கியமாக சமூகம் நம்  முன்னால் உருவாக்கி வைத்துள்ள சட்டகத்துக்குள் பொருந்த முடியாமை… ’இவற்றுக்கு மருந்தாக இன்னொரு கூட்டத்தை உருவாக்கி புதிய பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்; பாதுகாப்பாக இருக்கும்’ என்பதுதான் இதுவரை சொல்லப்பட்டது. எப்படியாயினும் வாழ்க்கை கூட்டத்தை … Read more

எழுத்து, வாழ்க்கை – இரண்டின் நோக்கமும் என்ன?

டர்ட்டி ரியலிஸம் என்றொரு எழுத்து வகைமை உண்டு. இதை, சமகால வாழ்க்கையில் புறக்கணிக்கப்பட்டவர்களின், விளிம்பு நிலை மனிதர்களின் இலக்கியம் என்று கூறலாம். ஒரு நகைமுரண் என்னவென்றால், டர்ட்டி ரியலிஸ எழுத்தாளர்களும் அவர்களது சமகாலத்தில் சக எழுத்தாளர்களாலும் வாசகர்களாலும்  புறக்கணிக்கப்பட்டவர்களாகவே இருப்பது. அதன் பிதாமகன் என்று அறியப்படுபவர் ‘சார்ல்ஸ் பூகோவ்ஸ்கி’. அவ்வகையில், அரவிந்தன்களும் ஹென்றிகளும் கோலோச்சிக்கொண்டிருந்த தமிழ் இலக்கியப் பரப்பில், கண்ணாயிரம் பெருமாளை கர்வத்தோடு முன்வைத்தவர் சாரு. சாருவை வெறுப்பதற்கான காரணங்களை ஒருவர் எந்த சிரமமும் இன்றிக் கண்டடையலாம். … Read more

புத்தகங்களில் கையெழுத்து…

அன்புள்ள சாரு ’நான்தான் ஓளரங்ஸேப்’ நாவல் இன்று கிடைக்கப்பெற்றேன். என் மகிழ்ச்சியை பின்னால் ஏற்பட்ட திகைப்பு பல மடங்காக்கியது.   திகைப்புக்கு காரணம்,   புத்தகம் உங்கள் கையெழுத்துடன் வந்ததுதான். சூழ்நிலை காரணமாக எந்த சிறப்புத் திட்டத்திலும் என்னால் பங்கேற்கமுடியவில்லை.  எனினும், புத்தகம் உங்கள் கையெழுத்துடன் வந்திருக்கிறது.  முன்பதிவு செய்த அனைவருக்கும் அவர்களின் பெயர் எழுதி, கையெழுத்திட்டு தருவது உங்கள் அன்பையும் அக்கரையையுமே காட்டுகிறது. நன்றியுடன் பெற்றுக்கொள்கிறேன். வேம்பு. கே. அன்புள்ள வேம்பு, இதேபோல் இன்னும் பலரும் எழுதியிருந்தார்கள்.  மொத்தம் … Read more

ஒரு அற்புதத் தருணம்

அன்புள்ள சாரு,நான் 24 வயது இளைஞன். மூன்று வருடங்களாக தங்களின் எழுத்தை வாசித்து வருகிறேன். கோவை புத்தகக் கண்காட்சியில் நேரில் சந்தித்திருக்கிறேன். தங்களுடைய zoom உரையாடல்களில் பூனைகள் தங்கள் தோள் மீது அமர்வதும் சுற்றி வருவதையும் பார்த்திருக்கிறேன். ஒரு surreal அனுபவமாக இருந்தது. இன்று ஶ்ரீ வில்லிபுத்தூர் மடவார்குளம் சிவன் கோவிலில் கொடிமரம் பின் இருக்கும் ஆமை வடிவ கல்லில் அமர்ந்து கண்களை மூடினேன் யாரோ கையைத் தொடுவது போல் இருந்தது. கண்களைத் திறந்து பார்த்தால் ஒரு … Read more

இன்னும் வராத வாழ்த்து

விஷ்ணுபுரம் விருது குறித்து என்னைப் பலரும் வாழ்த்தினார்கள். மகிழ்ச்சி தெரிவித்தார்கள். இருந்தாலும் எனக்கு வராத வாழ்த்து பற்றி மனம் கிலேசம் அடைகிறது. தமிழக முதல்வர் இன்னும் வாழ்த்து தெரிவிக்கவில்லை.