அழுகல் முட்டை தொடர்பாக

கோவிட் ஊரடங்கு காலகட்டத்தில் அராத்துவை முகநூலில் இயங்கும் குழுமம் ஒன்று நேரலை நிகழ்விற்கு அழைத்திருந்தார்கள். அது ஒரு இளையராஜா பஜனை மடம். அராத்து வழக்கம் போல பேச ஆரம்பிக்க, குழுமத்தின் மகளிரும் தடிமாடுகளும் கமெண்ட் பெட்டியில் கொதித்தெழுந்து உருண்டுகிடந்ததை பார்த்துப்பார்த்து சிரித்து வயிற்று வலியே வந்துவிட்டது. அராத்து அப்படித்தான் பழகினவன் பழகாதவன் என்று பார்க்கக்கூடிய ஆளில்லை. தன் கருத்துக்களை நறுக்குத்தெறித்தாற்போல் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுகிற ஆள். சாரு அப்படியில்லை, அதனால்தான் அழுகல் முட்டை நேர்காணலில் அந்த புரட்சிப்புயலாள் கேட்ட … Read more

Symbols of Diversity in Writing: Voicing Dissent with Charu Nivedita at m.i.l.a.p. 2018

மணிப்பால் பல்கலைக்கழகத்தில் நடந்த உரையாடல் பற்றி நேற்று குறிப்பிட்டிருந்தேன். அதன் காணொலியை எடுத்து அனுப்பியிருந்தார் ஸ்ரீராம். கீழே பார்க்கவும். இங்கே தமிழில் சாரு விழுந்து விட்டார் என்று இளிக்கும் அல்பங்களும் சேர்ந்து இந்தக் காணொலியைப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன். https://www.youtube.com/watch?v=CbE56BB9tjM

தயிர்வடை சென்ஸிபிலிட்டியும் , தயிர்வடையும் : அராத்து

முள் சிறுகதை விமர்சனம் மற்றும் சாரு நிவேதிதாவுடன் உரையடல் நிகழ்வை முன்வைத்து சாரு எழுதிய நீண்ட கட்டுரையைப் படித்தேன். அப்படி என்னடா சாருவை மடக்கி விட்டார்கள் என இப்போதுதான் அந்த காணொலியைப் பார்த்தேன். எடுத்த உடனே தெரிந்து விட்டது, சுதந்திர தினம் கொண்டாடி மிட்டாய் சாப்பிட்டு , எங்கள் தேசம் பாரத தேசம் என சிறுமிகள் உற்சாகத்துடன் பேச்சுப்போட்டியில் பேசி கொண்டாடுவதைப் போன்ற ஒரு நிகழ்வு என. சாருவுக்குத்தான் தொடர்ந்து இப்படி மாட்டும். சரி, அதனால் என்ன, … Read more

என் மீது வீசப்பட்ட அழுகல் முட்டை

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் சென்னையின் குடும்பநல நீதிமன்றம்.  நீதிபதியின் உள் அறையில் அவர் முன்னே ஒரு குற்றவாளியைப் போல் பயபக்தியுடன் நின்று கொண்டிருக்கிறேன்.  நீதிபதியும் என்னை ஒரு குற்றவாளியைப் போலவே பார்க்கிறார். உம்முடைய பெயர் என்று ஆங்கிலத்தில் கேட்கிறார்.  (ஆங்கிலத்தில் நீ, நீர், நீங்கள் வித்தியாசம் இல்லை என்றாலும் அவர் கேட்ட விதம் நீ என்பதற்கும் நீங்களுக்கும் நடுவில்தான் இருந்தது என்பதை சுலபத்தில் புரிந்து கொள்ள முடிந்தது.)  அறிவழகன் சார் என்று பவ்யமாகச் சொன்னேன். அட்ரஸ் என்று … Read more

பிறந்த நாள் கொண்டாட்டம்

நான் என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதைப் பற்றி அராத்து பின்வருமாறு எழுதியிருக்கிறார்: ”சாரு நிவேதிதா பிறந்த நாள் விழா கொண்டாடுகிறார். சாரு நிவேதிதா பிறந்த நாள் கொண்டாடியதே ஆரம்பத்தில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்புறம் கவனித்தால் பிரபலங்கள் அனைவரும் சிறு குழந்தை போல தங்கள் பிறந்த நாளை தாங்களே கொண்டாடிக்கொள்கிறார்கள் என்பதை அறிந்தேன். அனைவரும் அதை மிக முக்கியமாக நினைக்கிறார்கள். என் வயதில் சாரு இருந்திருந்த போது என்னைப்போலவே இப்படித்தான் நினைத்திருப்பார் என அனுமானிக்கிறேன். எனக்கு 60 … Read more