தேவிபாரதியின் நொய்யல்

கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நொய்யல் நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன்.  ஒரு நாவலைப் படிக்க இத்தனைக் காலம் எடுத்துக் கொண்ட்து இதுவே முதல் முறை.  அந்த அளவுக்கு நான் அந்த நாவலில் மூழ்கிக் கிடந்தேன்.  அதிலேயே வாழ்ந்தேன்.  திரும்பத் திரும்பப் படித்தேன்.  நாவல் பற்றி இங்கே நான் மதிப்புரையெல்லாம் எழுதப் போவதில்லை.  பா. வெங்கடேசனின் பாகீரதியின் மதியம் என்ற நாவலை உலகின் தலைசிறந்த ஐம்பது நாவல்களில் வைப்பேன் என்றால், தேவிபாரதியின் நொய்யலுக்குத் தமிழ் நாவல் வரலாற்றிலேயே முதல் … Read more

பசி மற்றும் இம்சை கதை பற்றிய ஒரு விவரம்

பசி மற்றும் இம்சை குறித்த ஒரு ஆட்டோஃபிக்‌ஷன் சிறுகதையில் வரும் ஒரு பாத்திரம் பற்றி என் நண்பர் ஒருவர் ஒரு சந்தேகம் கேட்டிருந்தார். அந்த சந்தேகத்துக்குப் பதில் எழுத முனைந்தேன். அது ஒரு நீண்ட கதையாக ஓடி விட்டது. அதனால் அதை மூன்றாம் பாகமாக ஆக்கினேன். ஆக, சிறுகதை குறுநாவலாக மாறி விட்டது. கதையின் பழைய பகுதிகளை தளத்திலிருந்து நீக்கி விட்டேன். கதையில் சில விவரங்கள் தேவைப்பட்டதால் சீனிக்கு அனுப்பியிருக்கிறேன். வந்ததும் இங்கே பதிவேற்றம் செய்வேன். கதையின் … Read more

சாரு நிவேதிதா: எழுத்தும் வாழ்வும் – கார்ல் மார்க்ஸ்

சாரு நிவேதிதாவைப் பற்றி எழுதுவதும் அவரது எழுத்தைப் பற்றி எழுதுவதும் வேறு வேறல்ல. Transgressive எழுத்தாளராக தன்னை அறிவித்துக்கொண்டவர் அவர். அதிலிருந்தே தொடங்குகிறது அவர் மீதான சமூக விலக்கம். எந்த ஒரு எழுத்தாளனும் தனது பால்யத்தை வேறு வேறு விதமாக எழுதிப் பார்ப்பதில் இச்சை கொள்கிறான். ஆனால் ஒரு transgressive எழுத்தாளன் தனது பால்யத்தை அதன் மரபார்ந்த முறையில் எழுத முடியாது. ஏனென்றால் பால்யத்தின் மீதான ரொமாண்டிஸிஸத்தை, தான் இதுகாறும் வந்தடைந்திருக்கும் வாழ்வின் வெளிச்சத்தில் வைத்து அவன் … Read more

ஹெட் மஸாஜ் பற்றி வளன்

நான் போன ஜென்மத்தில் தாய்லாந்தில் பிறந்து ஆயிரக்கணக்கானோருக்கு மஸாஜ் செய்து விட்டுக் கொண்டிருந்தேன் போலிருக்கிறது. வளன் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்த பதிவைப் பாருங்கள்: ஆட்டோஃபிக்ஷன் வகைமையில் நிஜத்துக்கும் கற்பனைக்குமான எல்லைக்கோடுகள் இல்லாமல் போனாலும் வாசக மனம் எது உண்மை எது புனைவு என்பதை தேடிக்கொண்டேயிருக்கும். இந்தக் கதையில் வரும் கோவிந்தன் யார் என்பதை மனம் தேடிக்கொண்டேயிருக்கிறது. அதேபோல இந்த ஹேட்மசாஜ் எனக்கும் கிடைத்திருக்கிறது. தரையில் கால் மடித்து உட்கார முடியாததால் அன்று சாரு வீட்டில் நான் படுத்தவாக்கிலேயே பேசிக் … Read more