கனவு, வைன், யோகா…

(ஒரு ஆட்டோஃபிக்‌ஷன் சிறுகதை.  ஆட்டோஃபிக்‌ஷன் கதை என்றாலும் சில சம்பவங்கள் முழுக் கற்பனை.  யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல!)  இன்று சௌந்தர் ஃபோன் செய்து “யோகா பயிற்சிகள் செய்வதற்கு நேரம் இருக்கிறதா?  செய்கிறீர்களா?” என்று விசாரித்தார்.  அதற்கான பதிலைத்தான் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். கொக்கரக்கோ தன்னுடைய ஒரு பிரச்சினையைப் பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறான்.  இல்லை, அது அவனுக்குப் பிரச்சினை இல்லை.  அதை நான்தான் பிரச்சினையாக நினைக்கிறேன். அவன் உறங்கச் செல்வது அதிகாலை நான்கு மணிக்கு.  எழுந்து கொள்வது … Read more

த அவ்ட்ஸைடர் 18: சொமோஸா ஸ்டேடியத்தில் சொமோஸா சிலையை சொமோஸா திறந்து வைக்கிறார்!!!

உங்களுக்குத் தெரிந்த சர்வாதிகாரிகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.  வாழும் போது புகழின் உச்சியில் இருப்பார்கள்.  ஆனால் கடைசி காலத்தில் தெருநாய் போல் ஆகி விடுவார்கள்.  சிலர் ஹிட்லரைப் போல் தற்கொலை செய்து கொள்வதும் உண்டு.  இல்லாவிட்டால், காக்காய் குருவி போல் சுட்டுக் கொல்லப்படுவார்கள். பினோசெத்தின் வீழ்ச்சி மிகவும் கேவலமாக இருந்தது.  அவர் அரசியல் நிர்ணயச் சட்டத்தில் ஏற்படுத்தியிருந்த மாற்றங்களின் காரணமாக அவருக்குப் பின்னால் வந்த அரசினால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதோடு அவர் ராணுவத்தின் முப்படைத் … Read more

த அவ்ட்ஸைடர்: சில எதிர்வினைகள்

சாரு,  தருமபுரியிலிருந்து ஸ்ரீதர். “இன்னும் சத்தமாகக் குரை” பகுதியைப் படித்தேன். உங்களது ஆதங்கம் நியாயமானது. அதற்கான பதில் – படிக்கிறோம். எப்போதும் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவுரங்ஸேப்  போல ஒரு செறிவைக் கொண்டது சீலேயின் சரித்திரம். நீங்கள் சொன்னதுபோல் நமக்கான வரலாறு அதிகார மையங்களால் தந்திரமாகக் கட்டமை க்கப்பட்டது. நிதர்சனமான உண்மையான சரித்திரங்கள் சமூகங்களுக்கு என்றுமே காட்டப்படுவதில்லை. பெருந்திரளான மக்கள் கூட்டங்களுக்கு மத்தியில் மிகச் சொற்ப எண்ணிக்கையிலான மனச்சான்றுடைய எழுத்தாளர்கள், கலைஞர்களே அவை குறித்து பதிவாக்குகின்றனர். அவையும் … Read more

த அவ்ட்ஸைடர் – 17 (Más fuerte Perra – இன்னும் சத்தமாகக் குரை பெண்நாயே!)

உடலை ஒடுக்குதல் என்பது சர்வாதிகாரத்தின் பண்புகளில் ஒன்று. அதனால்தான் ஹிட்லர் ஓரினச் சேர்க்கையாளர்கள் அனைவரையும் வதைமுகாமுக்கு அனுப்பினார்.  அதைப் போலவேதான் சீலேயின் ஓரினச் சேர்க்கையாளர்களும் பிஸாகுவாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.  இது கிட்டத்தட்ட ரஷ்யாவில் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை சைபீரியாவின் பனிப்பாலைகளுக்கு அனுப்பியதற்கு நிகர்.    லியனார்தோ ஃபெர்னாந்தஸ் என்பவர் சீலேயின் ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றி ஆய்வு செய்தவர்.  இபான்யேஸ் தெல் காம்ப்போவின் (Ibáñez del Campo) ஆட்சியில் – அதாவது, 1920களின் இறுதியில் – ஓரினச் சேர்க்கையாளர்கள் … Read more

சாரு நிவேதிதாவின் எழுத்தும் குற்ற உணர்ச்சியும்: அராத்து

சாரு நிவேதிதா எழுத்தின் தனித்தன்மை என்ன என சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். தமிழில் அநேகமாக குற்றவுணர்ச்சியில் இருந்து விடுவிக்கும் எழுத்து சாரு நிவேதிதாவினுடையது. பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் குற்றவுணர்ச்சி கொள்ள வைக்கும் அல்லது குற்றவுணர்ச்சியை அதிகரிக்க வைக்கும். கழிவிரக்கம் , ஏங்கி ஏங்கி நொந்து போதல் , மருகுதல் , தோல்வியை சிலாகித்தல் , கையாலாகாத்தனத்தை ஹீரோயிஸமாக்குதல் , ஏழ்மையை , ஆண்டாண்டுகாலமாக இருந்து வரும் தாய் , மகள் போன்ற குடும்ப உறவுகளை காவியமாக்குதல் … Read more

த அவ்ட்ஸைடர் – 15 (பிஸாகுவா)

1925 ஜூன் 25 அன்று லா கொருன்யாவில் நடந்த படுகொலைகளைத் தொடர்ந்து இந்த நூறு ஆண்டுகளில் கார்லோஸ் கார்ரிதோவின் (Carlos Garrido) கதை அங்கே ஒரு புராணக் கதை போல் – நம் ஊர் மதுரை வீரன் கதை போல் ஆகி விட்டது.  ஜூன் 25 படுகொலைகள் கார்லோஸின் வன்முறைப் பேச்சினால் தூண்டப்படவில்லை என்று கருதும் மற்றொரு விவரமும் நமக்குக் கிடைக்கிறது.  தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணை தொழிற்சாலை அதிகாரி ஒருவன் அடித்துக் கொன்று … Read more