ஜென்ரல் நாலட்ஜ்

சில ஆண்டுகளாக எலான் மஸ்க் என்ற பெயர் காதில் விழுந்து கொண்டே இருந்தது. நான் எப்போதும் வாசனைத் திரவியங்களின் ரசிகன் என்பது உலகறிந்தது. வாய்ப்பு கிடைக்கும்போது எலான் மஸ்கை வாங்கிப் பார்க்க வேண்டும் என்ற நினைப்பிலேயே இருந்தேன். நேற்றுதான் சீனியின் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட கட்டுரையைப் படித்த போது (தூக்கம்) எலான் மஸ்க் என்பது ஒரு ஆளின் பெயர் என்பதை யூகிக்க முடிந்தது. ஆனாலும் எந்தத் துறை என்று தெரியவில்லை. கூகிளைப் பார்த்து ஜென்ரல் நாலட்ஜை இம்ப்ரூவ் … Read more

தூக்கம்

தூக்கம் பற்றி ஜெமோ மற்றும் சாரு எழுதிய கட்டுரைகளை வாசித்தேன். தூக்கத்தில் கூட இரண்டு ஆளுமைகளும் எதிரெதிர் துருவங்களில் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள் தூக்கம் என்பது புணர்ச்சியைப்போல பர்ஸனலான ஒன்று. இன்னும் கேட்டால் புணர்ச்சியை விட ரொம்ப பர்ஸனலானது. புணர்ச்சிக்கு இன்னொருவர் தேவையல்லவா ? நான் இப்படித்தான் மேட்டர் செய்வேன் , அதனால் எல்லோரும் இப்படி மேட்டர் செய்வதுதான் சிறந்தது என்று எப்படி கூற முடியாதோ , அதே போல இப்படி தூங்குவதுதான் சிறந்தது என்று கூற முடியாது … Read more

இரண்டு கடிதங்களும் ஒரு பதிலும்

சாரு எழுதிய இரண்டு ஆட்டோ ஃபிக்‌ஷன் கதைகளை படித்தேன். தமிழில் அட்டோ ஃபிக்‌ஷன் சாருவுக்கு முன்பு யாரும் எழுதியதில்லை; சாருவுக்குப் பிறகும் யாரும் எழுதப் போவதில்லை என்று தோன்றுகிறது. அப்படியே எழுதினாலும் இந்தக் கதைகளுக்கு அருகில் கூட வர முடியாது எனச் சொல்லலாம். ஏன் சாருவுக்குப் பிறகு அட்டோ ஃபிக்‌ஷன் சாத்தியமில்லை? ஒட்டு மொத்த சமூகமும் வெகுஜனக் கலாச்சாரத்துக்குள் இருக்கிறது. இதில் வாழ்வில் நடக்கும் அபத்தங்களை அல்லது அங்கதங்களை அல்லது நேர்மறையான செயல்களை நெருங்கிப் பார்த்து திளைத்தல் … Read more

கலாச்சார அவலம்

ஸ்பானிஷ், ஃப்ரெஞ்ச், அரபி போன்ற மொழிகளின் இலக்கியத்தோடு ஒப்பிட்டால் தமிழ்தான் உச்சபட்ச நிலையில் இருக்கிறது.  இதை சர்வதேச இலக்கியத்தின் தீவிர வாசகன் என்ற முறையில் என்னால் அறுதியிட்டு சொல்ல முடியும்.  (இந்தப் பட்டியலில் நான் ஆங்கிலத்தைச் சேர்க்கவில்லை.  அந்த மொழியில் இன்று சீரிய இலக்கியம் படைக்கப்படுவதில்லை.)  தமிழ் இலக்கியத்தின் சாதனைகள் சர்வதேசத் தரத்தில் இருந்தும் அதை வெளியுலகத்துக்கு எடுத்துச் சொல்ல தமிழில் ஒரு ஆள் இல்லை.  பிராமணர்கள் இலக்கியத்தைத் துறந்து விட்டார்கள்.  அவர்கள் துறந்தது இலக்கியத்தை மட்டும் … Read more

நம்முடைய ஆன்மீக சக்தியைப் பிறர் உறிஞ்சி எடுப்பதிலிருந்து தப்பிப்பதற்கான எளிய உபாயம் (ஒரு ஆட்டோஃபிக்‌ஷன் கதை)

டிசம்பர் பதினேழு பதினெட்டு தேதிகளில் விழா.  பதினாறாம் தேதி பத்தினியின் பிறந்த நாள் என்பதால் பதினாறாம் தேதியே கோயம்பத்தூர் கிளம்ப முடியாது.  நான் எந்த நாட்டில் எந்தப் பட்டணத்தில் இருந்தாலும் டிசம்பர் பதினாறிலிருந்து பதினெட்டு வரை ஊரில் – வீட்டில் – இருந்தாக வேண்டும்.  பதினெட்டு?  அது அடியேனின் பிறந்த நாள்.  ஆக, மூன்று தினங்களும் என்னைப் பொருத்தவரை வெளியுலகம் மூடப்பட்டது.  இப்படித்தான் கடந்த இருபத்தேழு ஆண்டுகளாக நடந்து வருகிறது.    விழா அமைப்பாளரிடமிருந்து அழைப்பு வந்தது.  … Read more

கனவு, வைன், யோகா கதையில் விடுபட்டது

கனவு, வைன், யோகா என்ற நேற்றைய கதையில் விடுபட்ட சில பகுதிகளை இப்போது தருகிறேன்.  எனக்கு வரும் கனவுகளில் முக்கியமான இரண்டு கனவுகள் விடுபட்டு விட்டன.  ஒன்று, மனித நரகல் சம்பந்தப்பட்டது.  அதற்குக் காரணம், மெரீனா பீச்சும் என்னோடு பழகிய பெண்களும்.  நீங்களே கவனித்துப் பார்க்கலாம்.  ஓ, கவனித்துப் பார்க்கலாம் என்பதை அப்படியே அர்த்தப்படுத்திக் கொண்டு உற்று கவனித்தீர்களானால் வெளிநாடுகளில் உங்களைப் பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள்.  அதனால் கவனிக்காதது போல் கவனியுங்கள்.  பெண்கள் மட்டும்தான் கடல் … Read more