பெட்டியோ… நாவலிலிருந்து ஒரு பத்தி

கடந்த மூன்று தினங்களாக ஒரு நாடகப் பிரதியைப் படித்துக் கொண்டிருந்தேன். அதன் காரணமாகத்தான் இந்தப் பக்கம் வர முடியவில்லை. அந்த நாடகத்தைப் படிக்க மூன்று மணி நேரம் போதும். ஆனாலும் அதை நான் படிக்கும்போதே பல மணி நேரம் வெறுமனே அமர்ந்து அது பற்றி யோசிக்க வேண்டியிருந்தது. அந்த நாடகப் பிரதியை எழுதியது நயநதினி. நான் படித்தது அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு. ஆங்கில மொழிபெயர்ப்பு இன்னும் வெளிவரவில்லை. அதில் அந்த்தோனின் ஆர்த்தோ ஒரு பாத்திரமாக வருகிறார். நயநதினி … Read more

அடாஜியோ…

எக்ஸைல் நாவல் எழுதிக் கொண்டிருக்கும்போது லாரா ஃபாபியானின் குரல் பழக்கம். அவரது je taimeஐக் கேட்டு உருகியிருக்கிறேன். எத்தனையோ ஆயிரம் முறை கேட்டிருப்போம். விவரம் எக்ஸைலில் இருக்கிறது. அதற்குப் பிறகு நேற்றுதான் லாரா ஃபாபியானின் பெயரை மீண்டும் கேட்டேன். இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறாயா என்று பின்வரும் லிங்கை அனுப்பினாள் நயநதினி. அடாஜியோ. முதல் முறையாகக் கேட்டேன். இப்படிப்பட்ட குரல்களை இந்தியாவில் கேட்டிருக்கலாம். ஆனால் இந்த உணர்ச்சித் தெறிப்பை, இசையின் உச்சத்தை வெகுஜன இசையில் இந்தியாவில் நான் கேட்டதில்லை. … Read more

என்னுடைய நேரம்

அவந்திகாவின் ஒரு பழக்கம் என்னவென்றால், எந்தப் பணிப்பெண் வந்தாலும் அவர்கள் அவளுடைய எதிர்பார்ப்புக்குத் தோதாக இல்லாவிட்டால் நிறுத்தி விடுவாள். அவளுடைய எதிர்பார்ப்புக்கு நூற்றுக்கு நூறு தோதான எடுபிடி நான்தான். பணிப்பெண்ணை நிறுத்தி விட்டால் எல்லா எடுபிடி வேலையும் நான்தான் செய்ய வேண்டும். முக்கியமான எடுபிடி வேலை, பாத்திரம் தேய்ப்பது, குக்கரில் சோறு பருப்பு வைப்பது, காய்கறி நறுக்கிக் கொடுப்பது. இது எல்லாம் எனக்கு ஒரு மூன்று மணி நேரம் ஆகும். இந்த மூன்று மணி நேரத்தையும் எனக்கு … Read more

சிங்கள கலாச்சார சூழல் – 2

நேற்று கேகே பற்றி எழுதியிருந்தேன். அவர் 39 ஆண்டுகளுக்கு முன்பாக எழுதிய ஸர்ப்பயா கதையை இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இந்தக் கதையினால்தான் அவரை ஸர்ப்பயா என்றே அழைக்கிறார்கள். நான் படித்த எல்லா ட்ரான்ஸ்கிரஸிவ் கதைகளிலும் ஆகச் சிறந்ததாக இருந்தது இந்தக் கதை. ஆங்கில மொழிபெயர்ப்பு இந்த அளவுக்குத்தான் முடியும். கேகேயின் சிங்களம் நிறைய சிலேடைகளும் வார்த்தை விளையாட்டுகளும் நிறைந்தது என்கிறார்கள். அவர் ஆங்கிலத்தில் எழுதிய Cunt-try என்ற கவிதையைத்தான் என் நாவல் பெட்டியோவில் சேர்த்திருக்கிறேன். ஆங்கிலத்திலேயே. … Read more

சிங்கள கலாச்சார சூழல் -1

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் மதுரையில் ரெண்டாம் ஆட்டம் என்ற நாடகத்தைப் போட்டு அடிதடியான போதே முடிவு செய்து விட்டேன். நான் உயிரோடு இருக்கும் வரை தமிழில், தமிழ்நாட்டில் நாடகம் போட முடியாது என்று. ஏன் என்று நண்பர்கள் கேட்கும்போதெல்லாம் என் நாடகத்தில் நடிப்பவர்களின் உடை இங்கே உள்ள கலாச்சாரவாதிகளால் தாங்க முடியாததாக இருக்கும், சமயங்களில் பாத்திரங்கள் நிர்வாணமாகக் கூட வருவார்கள் என்பேன். நல்ல காலம், என் கலை எழுத்து என்பதாலும், தமிழர்கள் வாசிப்பை வெறுப்பவர்கள் என்பதாலும் நான் … Read more