அவதூறுக்கு எதிர்வினை (12)

லக்ஷ்மி ரவணகுமார்: (அபிலாஷின் ‘மன்னிப்பு’க்கு எதிர்வினை) அந்த நபருக்காக நீங்க இவ்ளோ வக்காலத்து வேண்டியதில்லை நண்பா. அவர் பதிவுல இருந்த தொனி விமர்சனம் இல்ல சாருவின் மீதான வன்மம். அதை வெளிப்படுத்த உங்களப் பயன்படுத்திக்கிட்டார் அவ்ளோதான். அவர் நல்லவர் வல்லவர்னு நீங்க சர்டிஃபிகேட் குடுக்கறதெல்லாம் நகைச்சுவை. குனிந்து திருடும்போது பின்னால் குத்தப்படுவார்னு எழுதறாரு அந்த வரிகள அந்தப் பதிவுல கமெண்ட் போட்ற மூத்த எழுத்தாளர்கள் லாம் இதுக்குத்தான் குனிஞ்சு திருடக் கூடாதுன்னு சொல்றதுன்னு எழுதறாங்க. எவ்ளோ அயோக்கியத்தனம். … Read more

அவதூறுக்கு எதிர்வினை (11): வாஸ்தோ

விளம்பரப் பிரியை அல்லது பிரபல்ய பிம்பம் கொடுக்கும் போதை அல்லது நான் மிகவும் மேம்பட்டவனெனக் ‘காட்டி’க் கொள்ள முற்படுதல் அல்லது நான் மிகவும் தைரியமானவன் என நிறுவ நினைத்தல் எனப் பல காரணிகள் ஒன்றினைகையில் அல்லது இதில் ஏதேனுமொன்றுத் தலைத் தூக்கிப் பார்க்கையில் தன் எதிரில் இருப்பவர் யார்..? அவருடைய சாதனைகள் என்ன என்பதெல்லாம் பார்க்கத் தோன்றாது. உடனடியாக அவர்களைத் தாக்கி எழுத வைத்துவிடும். ஜெமோவைப் புளிச்ச மாவு என்று நக்கலடிப்பதில் துவங்கி இன்று சாருவைத் திருடனென்றும் … Read more

அவதூறுக்கு எதிர்வினை (10): மதுரை அருணாச்சலம்

ஆன்லைன் பத்திரிக்கை எடிட்டர் என்ற திமிரில்…. கூகுளில் கட் காப்பி பேஸ்ட் செய்து கட்டுரைகள் தயாரிக்கும் நாயெல்லாம்… தமிழில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக, நவீன இலக்கியத்தில் Transgressive Writer என்ற தனிச்சிறப்புடன், சுமார் 100 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ள ஒரு மூத்த இலக்கியவாதியை தரக்குறைவாக தொடர்ந்து முகநூலில் எழுதி வரும் தமிழினி கோகுல் பிரசாத் என்பவனை வன்மையாக கண்டிக்கிறேன்.. விளக்குமாத்துக்கு எடிட்டர் என்ற பட்டுக்குஞ்சம் வேறு… இந்த பொழப்பிற்கு.. நாலு தெருவில் நீ பிச்சை எடுக்கலாம்…

அவதூறுக்கு எதிர்வினை (9): பிரபு கங்காதரன்

தமிழிலக்கிய உலகில் சாருவிற்கு இடமில்லை என்கிற வகையில் ஒரு மின்னிதழின் ஆசிரியர் ஒரு நிலைப்பாட்டை வைக்கிறார். அதற்கு இதுவரை ஒரு சரியான எதிர்வினை வரவே இல்லை. அந்த மின்னிதழில் எழுதிக்கொண்டிருக்கிற எழுத்தாளர்கள் எல்லாருமே ஆமாம் அவருக்கு இடமில்லை, சாரு ஒரு எழுத்தாளரே இல்லை, அல்லது சாரு ஒரு மோசமான எழுத்தாளர் என்று ஒரு பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்தேன். என் சிற்றறிவுக்கும் குறுகலானப் பார்வைக்கும் எட்டியவரை எதுவுமே காணக்கிடைக்கவில்லை. சாருவினுடைய எழுத்து தமிழிலக்கிய உலகில் என்ன பங்களிப்பை … Read more

அவதூறுக்கு எதிர்வினை (8): அய்யனார் விஸ்வநாத்

ஓர் எழுத்தாளன் தன் படைப்புகளுக்காக விமர்சிக்கப்படுவது என்பது வேறு – ஒருவகையில் அது ஆரோக்கியமானதும் கூட. ஆனால் எழுத்தாளனின் இருப்பே சிலருக்கு ஒவ்வாததாக இருப்பதும், அவன் வாழ்நாள் முழுக்க ‘இலக்கியவாதி இல்லை’ என்கிற புறந்தள்ளல்களை எதிர்கொள்ள நேரிடுவதும் நாம் இயங்கும் இந்த சூழலுக்கு எதிரானதும் அவமானகரமானதுமாகும். சாருவின் மீது தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும் இந்த வன்முறைக்கு என் எதிர்ப்பைப் பதிவு செய்கிறேன். சக மனிதனை இழிவு செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. நாற்பது ஆண்டுகளாக தமிழின் … Read more

அவதூறுக்கு எதிர்வினை (7): அமல்ராஜ் பிரான்சிஸ்

சாருவின் எழுத்துக்கள் இலக்கியமா என்று அவரை வாசித்து விமர்சிப்பவர்கள் மட்டில் எனக்கு பெரும் மதிப்பு உண்டு. வாசகர்களை எதுவுமே செய்யாத எழுத்து இலக்கியமா என்ன? செய்யட்டும். செய்வதால் விமர்சனம் வருகிறது. நல்லது. ஆனால், காலாகாலமாக கொழுந்துவிட்டெரியும் சாருவிற்கு எதிரான வக்கிர விமர்சனங்களில் குறைந்த விகிதாசாரமே நான் மேலே சொன்ன வகையறாவினுள் சேரும். மீதம், அவர் மீதான தனிப்பட்ட வன்முறை. ஒரு தனிமனிதன் மீதான பழி, வசை. கோகுல் பிரசாத்தின் பதிவும் அப்படித்தான். விமர்சனம் அல்ல, வன்முறை. ஒரு … Read more