ஒரு உதவி

தினமலரில் ஞாயிறு தோறும் நான் ஒளியின் பெருஞ்சலனம் என்ற தலைப்பில் உலக சினிமா பற்றிய கட்டுரைத் தொடர் எழுதி வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம். 700 வார்த்தைகளுக்குள் எழுத வேண்டும். அது ஒரு சவால். சில வாரங்களில் ஹங்கேரிய இயக்குனர் மிக்லாஸ் யான்ஸ்கோ பற்றி எழுத இருக்கிறேன். அதற்கு Miclos Janscoவின் Jesus Christ’s Horoscope, God Walks Backwards, Hungarian Rhapsody ஆகிய படங்கள் தேவை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. உங்களிடம் இருந்தால் கொடுத்து உதவுங்கள். பார்த்து … Read more

மின்னங்காடி

செப்டெம்பர் 28, 2016 என் அன்பு நண்பர் தமிழ்மகனின் மின்னங்காடி சிறப்பாகச் செயல்பட என் வாழ்த்துக்கள். *** அன்புடையீர், வணக்கம். உலகமெலாம் தமிழ் நூல்கள் கிடைக்க வேண்டும் என்ற தீரா ஆவலில் இந்தப் பெரும் பணியில் இறங்கியிருக்கிறேன். மின்னங்காடி டாட் காம் உங்கள் அனைத்து நாட்களையும் புத்தகத் திருவிழாவாக மாற்றும். அல்லும் பகலும் அங்காடி நடத்திய நாம், இந்த டிஜிடல் யுகத்திலும் கடை விரிப்போம். தமிழின் அனைத்துப் பதிப்பக நூல்களும் மின்னங்காடியில் கிடைக்கும். எழுத்தாளர், நூல் பெயர், … Read more

ஆண்டவன் கட்டளை

செப்டெம்பர் 27, 2016 ஆண்டவன் கட்டளை முதல் காட்சியே பார்த்தேன். ஆவணப் படம் போல் இருந்தது. மணிகண்டனுக்கு சுவாரசியமாகக் கதை சொல்லத் தெரியவில்லை. அல்லது திரைக்கதையில் பிரச்சினையா? ராஜேஷ்தான் சொல்ல வேண்டும். படு இழுவை. படு போர். காட்சிகள், கதை எல்லாம் எதார்த்தமாக இருந்தாலும் சுவாரசியமாக எடுத்துச் செல்லவில்லை என்றால் எப்படி அமர்ந்து பார்ப்பது? இடைவேளைக்கு மேல் படம் நன்றாக நகர்ந்தது என்று என்னால் எழுத முடியாது. அப்படியானால் முதல் பாதியை வெட்டி எறிந்து விடலாமா? பத்திரிகைகளெல்லாம் … Read more

மேகா பதிப்பகம்

அக்டோபர் 4, 2016 என் அன்புப் புதல்வர் அருணாசலத்தின் முயற்சிக்கு என் வாழ்த்துக்களும் ஆசியும். *** அன்புமிக்க சாரு, தமிழ் மீது பற்றும், வாசிப்பின் மீது காதலும் கொண்டிருந்த எனது தந்தை திரு.ம.மேகராஜன், தன்னுடைய 84 வயதில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் இயற்கை எய்தியது தங்களுக்கும் நினைவிருக்கும்.. அந்த சமயத்தில் தங்களின் ஆறுதலான வார்த்தைகளால் எனது துக்கத்தை சிறிது சிறிதாக மறந்தேன். எனது தந்தையின் பெயரால் “மேகா பதிப்பகம்” எனும் ஒரு சிறிய பதிப்பகத்தை தொடங்க … Read more

சிங்கப்பூர் விவகாரம்

செப்டெம்பர் 28, 2016 கார்ல் மார்க்ஸிடமும் ஜெயமோகனிடமும் ஒரு சந்தேகம். சூர்ய ரெத்னா போன்ற எதையுமே படிக்காத ஒருவரின் சிறுகதைத் தொகுதிக்கெல்லாம் வேலை மெனக்கெட்டு உட்கார்ந்து படித்து மதிப்புரை எழுதும் ஜெ. என்னுடைய ராஸ லீலா, எக்ஸைல் போன்ற நாவல்களுக்கு மதிப்புரை எழுத மாட்டாரா? திட்டினாலும் பரவாயில்லை. நான் ஒன்றும் பதிலுக்கு சூர்ய ரெத்னா மாதிரி this guy that guy என்றெல்லாம் எழுத மாட்டேன். எப்படி இருந்தாலும் எனக்கு அஞ்சலிக் கட்டுரை எழுதுவார் இல்லையா, அதை … Read more

“மௌனி தாத்தா ஒரு எழுத்தாளரா?”

தி இந்து, செப்டெம்பர் 28, 2016 ‘புதுமைப்பித்தன் நிகழ்ச்சியில் ஜெயலலிதா ஏன் பங்கேற்கவில்லை?’ கட்டுரை படித்தேன். நம் சமூகம் படைப்பாளிகளை அவரவர் காலத்தில் புறக்கணிப்பது தொடர்பாக மேலும் சிலவற்றைச் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். காந்தி சென்னைக்கு வந்தபோது பாரதி அவரைச் சந்திக்கிறார். அப்போது உடனிருந்த ராஜாஜியிடம் காந்தி சொல்கிறார், “இவர் உங்கள் மொழியின் சொத்து. இவரைக் கவனமாகப் பராமரியுங்கள்!” இவ்வளவுக்கும் பாரதி அவரிடம் பேசியது ஒரே வாக்கியம். காந்திக்கு ஒரு இலக்கிய மேதையைக் கண்டுகொள்ளும் உள்ளுணர்வு … Read more