ரௌத்ரம் பழகு… (கொஞ்சம் சேர்த்திருக்கிறேன், மீண்டும் வாசித்துப் பாருங்கள்)

திடீரென்று ஜெயசீலன் என்னை அழைத்தார்.  நீண்ட கால நண்பர்.  அவர் ஒரு யூட்யூப் சேனல் தொடங்கப் போகிறார். அதன் முதல் உரையாடலாக நானும் ஷோபா சக்தியும் பேச வேண்டும் என்பது அவரது விருப்பம்.  அப்படிப் பேசினால் அந்த உரையாடலை நிச்சயம் ஒரு லட்சம் பேர் பார்ப்பார்கள்.  சந்தேகமே இல்லை.  “ஜெயசீலன், நான் உங்களுக்கு ஒரு வாட்ஸப் மெஸேஜ் அனுப்புகிறேன்.  அதைப் படித்து விட்டு அழையுங்கள்” என்றேன்.  அவருக்கு நான் அனுப்பிய மெஸேஜ் இதுதான்: “நான் ‘இளம்’ எழுத்தாளராக … Read more

அந்தோனின் ஆர்த்தோ: ஒரு கிளர்ச்சிக்காரனின் உடல்

மேற்கண்ட நாடகம் மலையாள மொழிபெயர்ப்பில் வெளிவருகிறது. மொழிபெயர்ப்பு ரியாஸ் முஹம்மது. பொதுவாக என் மொழிபெயர்ப்பாளர்கள் யாருமே புத்தகத்தை மொழிபெயர்த்து முடிக்கும் வரை என்னைத் தொடர்பு கொள்ள மாட்டார்கள். மொழிபெயர்ப்பு முடிந்த பிறகு அது எனக்கும் பதிப்பாளருக்கும் போய் விடும். ஏதாவது தவறு இருந்தால் நான் பதிப்பாளருக்குத்தான் எழுத வேண்டி வரும். ரியாஸிடம் எனக்குப் பிடித்தது என்னவென்றால், அவர் தினந்தோறும் எனக்கு ஃபோன் செய்து சந்தேகங்களைக் கேட்டுக் கொள்வார். அவர் எனக்கு இறைவன் தந்த வரம். அந்தோனின் ஆர்த்தோ … Read more

கோமாளி ஆக்குதல்: அராத்து

தமிழ்நாட்டில் ஒரு நோய் இருக்கிறது. எதிராளியை, தன் கருத்துக்கு, ரசனைக்கு ஒவ்வாவதவர்களைக் கோமாளி ஆக்குவது. அரசியல், சமூகம், சினிமா, இலக்கியம் என அனைத்திலும் இந்த நோய் பரவியிருக்கிறது. ஏன் தமிழ்நாட்டில் எனச் சொல்கிறேன் என்றால், எல்லோரும் இதைச் செய்கிறார்கள். உதாரணத்திற்கு திமுக ஒருவரை கோமாளியாகச் சித்தரிக்கிறது எனில், பதிலுக்கு எதிர்த்தரப்பு ஸ்டாலின் வாய் தவறதுலாகப் பேசிய விடியோவை பரப்பு பரப்பு எனப் பரப்பி அவரை கோமாளியாகச் சித்தரிக்கிறது. திமுக, அதிமுக இரண்டும் விஜயகாந்தை கோமாளியாகச் சித்தரித்தது நினைவிருக்கலாம். … Read more