எழுதாத கதையின் கதை (சிறுகதை) : சிரஞ்சீவன்

ச திருப்பதிசாமி என்னிடம் சிறுகதை எழுதச்சொல்லி பணித்தார்.  அன்றுதான் அந்தக் கதை எங்கள் கண்முன் நிகழ்ந்திருந்தது.  ஆனால், என்னால் எழுத முடியவில்லை.  இன்றைய தேதிக்கு பத்து வருடங்கள் ஓடிவிட்டன.  கிழக்குக் கடற்கரைச் சாலையில் கடலை ஒட்டி இருக்கும் ஒரு விடுதியில் நடந்த சந்திப்பில் பத்து பேர் கலந்து கொண்டோம்.  அங்கே சிறுகதை எழுதுவது ஒரு போட்டியைப் போல அறிவிக்கப்பட்டது.  இலக்கிய வரையறைகளுக்கு உட்பட்டு அந்தக் கதை எழுத்தில் நிகழ மறுத்து என்னை அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. ஏதோ ஒரு … Read more

புருஷனும் ஓல்ட் மாங்க்கும்… (அராத்துவின் கேள்வியும் என் பதிலும்)

அராத்துவும் ஓல்ட் மாங்க் ரம்மும் பின்னே சாருவும் ரியூ முராகமியும்… அராத்து ”இப்போது அராத்துவின் புருஷன் நாவலைப் படித்துக்கொண்டிருக்கும்போது அராத்து ரியூ முராகாமியைப் பல மடங்கு அதிகமாகத் தாண்டி விட்டார் என்றே தோன்றியது. நேற்று நான் கொடுத்திருந்த பப் சம்பவம் ஒரு உதாரணம். அப்படியானால் அராத்து என்னையும் தாண்டி விட்டார் என்றே பொருள் கொள்ள வேண்டும். (உடனே என் வாசகர் வட்ட நண்பர்கள் சிலர் வாசகர் வட்ட அறையில் உள்ள என் படத்தை அகற்றி விட்டு அங்கே … Read more

புருஷனில் இதுவரை ரசித்தவை: ஸ்ரீராம் & சாரு

புருஷன் நாவலை மற்றவர்கள் படிக்கும் போது, அவர்களுக்கு வாசிப்பின்பம் குறையாமல் இருப்பதற்காக, சுருக்கமாகச் சொல்கிறேன். * குழந்தைகள் முன் குடிக்கும் நவயுக தம்பதிகள் பற்றிய விமர்சனம். *நேற்று சாரு சொன்ன, பேரிளம் மாதுக்கள், மதுக்கூடங்களில் செய்யும் அக்குறும்புகள் மற்றும் அவர்கள் பள்ளிப்பெண்கள் போல் பாவனை செய்து, உடுத்திக்கொள்ளும் உடைகளின் அபத்தம் பற்றிய நான்கு பக்கங்கள். * ஹொடொரோஸ்கி படங்களில் வரும் shamanism போன்ற ‘ஸ்பெஷல்’ மேகலாவை மீட்கும் கதையில், ‘ஸ்பெஷல்’, மேகலாவின் பிருஷ்டங்கள் பற்றிச் சொல்கிறான், LAS … Read more

பதினேழாவது அத்தியாயம் என்ற வெடிகுண்டு – புருஷன் பதிவுகள் – 3

கார்ல் மார்க்ஸின் சிந்தனை, அரசியல், தத்துவம் குறித்த ஒரு புகழ் பெற்ற கேலிச்சித்திரம் உண்டு. சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில், ஹெகல், இம்மானுவல் காண்ட், நீட்ஷே, விட்ஜென்ஸ்டைன் போன்ற தத்துவவாதிகள் எல்லாம் ஒரு வட்ட மேஜையில் அமர்ந்து தத்துவம் பற்றி விவாதித்துக்கொண்டிருப்பார்கள். அந்த மேஜைக்குக் கீழே தாடி வைத்த ஒரு ஆள் வெடிகுண்டைப் பற்ற வைத்துக்கொண்டிருப்பார். அவர்தான் கார்ல் மார்க்ஸ். அம்மாதிரி புருஷன் நாவலில் ஒரு அத்தியாயம் வருகிறது. பதினேழாவது அத்தியாயம். ழழிழு என்ற கதாபாத்திரம் மானிடர்களிடம் பேசும் … Read more

மரபார்ந்த மொழியின் மரணம் (புருஷன் பதிவுகள் – 2)

1980களிலும் 1990களிலும் இருந்தது போன்ற ஒரு சிந்தனைத் தளம் தமிழ் எழுத்துலகில் இருந்திருந்தால் இந்நேரம் புருஷன் நாவலுக்கு எதிர்வினையாகவும் மதிப்புரையாகவும் இரண்டு மூன்று புத்தகங்களே வந்திருக்கும்.  ஜே.ஜே. சில குறிப்புகளுக்கு அப்படி வந்தது.  ஸீரோ டிகிரிக்கு வந்தது.  விஷ்ணுபுரத்துக்கு வந்தது.  இன்னும் சில புத்தகங்களுக்கு வந்தது என்றாலும், புத்தகங்களைத் தவிரவும் ஒரு சிந்தனைத் திறப்பாக ஒரு கட்டுரை வந்தால் அதைத் தொடர்ந்து, அதை மறுத்தோ அதன் வழி சென்றோ ஒரு ஐம்பது கட்டுரைகள் வரும்.  அப்படியான ஒரு … Read more