tango and salsa

  எக்ஸைல் editing வேலையில் 900-ஆவது பக்கத்தில் இருக்கிறேன்.  அதில் Bandoneon என்ற வாத்தியத்தைப் பற்றி ஒரு குறிப்பு வந்தது.  உடனே எக்ஸைலை விட்டு விட்டு இதை எழுத ஆரம்பித்து விட்டேன்.  எக்ஸைலை முடிக்கும் வரை வேறு எதுவுமே செய்யக் கூடாது என்று இருந்தும் இதை என்னால் கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை.  என்னை பல நண்பர்கள் எழுதுங்கள் எழுந்துங்கள் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்; ஏதோ நான் எழுதியதையெல்லாம் இவர்கள் படித்து விட்டது போல. என்னுடைய … Read more

withou you…

jagermeister என்ற மூலிகைகளால் ஆன மது ஒன்று உள்ளது.  அராத்துவின் நண்பர் பிரபு எங்களுக்கு இதை அறிமுகப்படுத்தினார்.  ஜெர்மன் மது.  மூலிகை மணம் வீசும் திரவம்.  ருசி நம் ஜிகிர்தண்டா ருசி.  இதை ஹெகாமஸ் என்று உச்சரிக்க வேண்டுமாம்.  பாக்கி விபரங்களை நீங்கள் கூகிளில் தேடிக் கொள்ளலாம்.  பிரபுவும் அராத்துவும் நானும் ஒருமுறை குடித்திருக்கிறோம்.  மூன்று பேருக்கும் ஒரு போத்தல் சரியாக இருந்தது.  இதைத் தண்ணீர் சேர்க்காமல் ஃப்ரீஸரில் வைத்து சில்லென்று அருந்த வேண்டும்.  இப்போது இரண்டாவது … Read more

nothing’s gonna change my love for you…

எத்தனை ஆயிரம் முறை இந்தப் பாடலைக் கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை.  எப்போது கேட்டாலும் முதல் முறை கேட்பது போலவே இருக்கிறது… இந்தப் பாடலை கிட்டத்தட்ட எல்லா இசைக் கலைஞர்களும் பாடியும் வாசித்தும் இருக்கிறார்கள்.  கீழே உள்ள இணைப்பில் உள்ளது  kaori kobayashi ஸாக்ஸில் வாசித்தது… http://www.youtube.com/watch?v=BROSIBd6IsA

நுண்ணுணர்வும் மற்றும் சில நற்பண்புகளும்…

http://www.youtube.com/watch?v=zRvhQ5Rf6-U இந்த பியானோவைக் கேட்டுக் கொண்டே பின்வருவதை நீங்கள் படிக்கலாம். ”அவர் உங்களை வெறுக்கிறார்; நீங்களும் அவரை வெறுக்கிறீர்கள். ஆனால் இரண்டு பேரும் எப்படி நெருங்கிய நண்பர்களாக இருக்கிறீர்கள்?” என்று மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு நண்பர் கேட்டார். இதை யார் சொன்னது உங்களுக்கு என்று கேட்டேன். அவர் தான் சொன்னார் என்றார் நண்பர். ”தெரியவில்லை, அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள்” என்றேன். போன மாதம் இன்னொரு நண்பர் ”அவர் உங்களை வெறுக்கிறார்; நீங்களும் அவரை வெறுக்கிறீர்கள். ஆனால் … Read more

கடவுளின் கவிதை…

நேற்று காலையில் பாபா கோவிலுக்குப் போய் விட்டு வந்து வீட்டிலேயே ”எட்டு” போட்டுக் கொண்டிருந்த போது வீட்டு வாசலில் பிரம்மாண்டமான ஒரு கார் வந்து நின்றது.  முகப்பில் அதிமுக கொடி.  அதிமுக செங்கோட்டையன் என் பக்கத்து வீட்டுக்காரர் என்பதால் அவர் வீட்டுக்கு வந்த வண்டியாக இருக்கும் என்று விட்டு விட்டேன்.  சற்று நேரத்தில் பார்த்தால் வாசலில் உள்ள கேட் தட்டப்படும் ஒலி.  என் வீட்டுக்குத்தான்.  யார் அது இந்தக் காலை நேரத்தில், அதுவும் அதிமுக கொடியோடு என்று … Read more