இரண்டு புத்தகங்கள் தயார்…

”வால்டேரை எப்படி நாம் கைது செய்ய முடியும்?” என்ற கட்டுரைத் தொகுப்பும் ”இன்ஸ்பெக்டர் செண்பகராமனும் திருவல்லிக்கேணி டாஸ்மாக்கும்…” என்ற சிறுகதைத் தொகுப்பும் தயார் நிலையில் உள்ளன. இன்னும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வரும். ”வால்டேரை எப்படி நாம் கைது செய்ய முடியும்?” என்ற கட்டுரைத் தொகுப்பை என் இனிய நண்பரும் வேளாண் விஞ்ஞானியுமான சி. கற்பகத்துக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.

புருஷன்

தலைக்கு மேல் வெள்ளம் போவது போல் இருக்கிறது வேலை. சுமார் இருபது புத்தகங்களைத் தொகுத்து ஸ்ரீராம் எனக்கு அனுப்பி மூன்று ஆண்டுகள் இருக்கும். நான் தான் புதிதாக எழுதுகிறேன் புதிதாக எழுதுகிறேன் என்று சொல்லியபடி புதிதாகவே எழுதிக்கொண்டிருந்தேன். இப்போது புத்தக விழாவில் ஒரு பத்து புத்தகங்களையாவது கொண்டு வந்து விடலாம் என்று எடிட் பண்ணிக்கொண்டிருக்கிறேன். ஏற்கனவே குறிப்பிட்ட பொருளைக் கொண்டு கட்டுரைகளைத் தொகுத்ததில் ஸ்ரீராம் ஏகப்பட்ட மணி நேரங்களைச் செலவு செய்திருக்கிறார். எனக்கு ஒரு மணி நேரத்தில் … Read more

ஆன்மாவை உருக்கி…

கர்னாடக இசையில் உச்ச பட்சமான ஒரு பாடகியைக் கேட்டேன். எம்மானுவல் மார்ட்டின். ஆன்மாவை உருக்கி இசையாகத் தருகிறார். வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. ட்டி.எம். கிருஷ்ணாவின் மாணவி என்று அறிகிறேன். இனிமேல் ட்டி.எம். கிருஷ்ணா என்ன செய்தாலும் விமர்சிக்க மாட்டேன்.

வால்டேரை எப்படி நாம் கைது செய்ய முடியும்?

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் – 2000ஆம் ஆண்டில் – நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு வெளிவர இருக்கிறது. அதன் தலைப்புதான் மேலே இருப்பது. இதுபோல் வரப் போகும் புத்தக விழாவில் பத்து புத்தகங்கள் வர இருக்கின்றன. அந்தக் கட்டுரைகளையெல்லாம் வாசிக்கும்போது இப்போது நான் கனிந்திருக்கிறேன் என்றே தோன்றுகிறது. வால்டேரை எப்படி நாம் கைது செய்ய முடியும் என்ற கட்டுரையிலிருந்து ஒரே ஒரு பகுதியை கீழே தருகிறேன். இந்தக் கட்டுரை 2000இல் எக்ஸில் என்ற பத்திரிகையில் வெளிவந்தது. எக்ஸில் … Read more

வெங்கடேஷ் குமார்

வெங்கடேஷ் குமாரின் வயது 71. இந்த வயதில் அவர் பெயர் உலகமெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். பீம்சென் ஜோஷி, பண்டிட் ஜஸ்ராஜ், மல்லிகார்ஜுன் மன்ஸூர், கிஷோரி அமோங்கர், கங்குபாய் ஹங்கல் அளவுக்கு இன்று பாடக் கூடிய ஒரே நபராக இருப்பவர் வெங்கடேஷ் குமார். ஆனால் அவரது எளிமையான குணத்தின் காரணமாக அவர் பெயர் எந்த அளவுக்குத் தெரிந்திருக்க வேண்டுமோ அந்த அளவுக்குத் தெரிந்திருக்கவில்லை. இன்னொரு காரணம், வெங்கடேஷ் குமாரின் தியாக மனப்பான்மை. இருபது ஆண்டுகள் அவர் பெங்களூர் பல்கலைக்கழகத்தில் … Read more

க்ராஸ்வேர்ட் வாக்களிப்பு – இன்னும் இரண்டு தினங்கள்

ஆட்டா கலாட்டா சிறந்த நூல் போட்டியின் நெடும்பட்டியலில் இடம் பெற்ற Conversations with Aurangzeb குறும்பட்டியலில் இடம் பெறவில்லை. என் வாழ்வில் இது சகஜம்தான் என்பதால் ஆச்சரியம் இல்லை. க்ராஸ்வேர்ட் குறும்பட்டியலில் இடம் பெற்றிருக்கும் Conversations with Aurangzeb நாவலுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். வாக்களிக்கும் முறை மிகவும் எளிது. Translation categoryக்கு சென்று ஔரங்ஸேப் நூலில் டிக் அடிக்க வேண்டும். ஓடிபி வரும். அதைப் பூர்த்தி செய்தால் வாக்கு அளித்ததாக அர்த்தம். வாக்கு … Read more