விதை – இயற்கை அங்காடி

இப்போது ரசாயன உரம் போடாத, பூச்சிக் கொல்லி மருந்து போடாத உணவுப் பொருட்களை, தானியங்களை, அரிசியை வாங்கி உபயோகிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாகி இருக்கிறது.  அதற்கேற்றாற்போல் கடைகள் அதிகம் இல்லை.  அந்தக் குறையைப் போக்க இப்போது ஒரு அங்காடி.  விதை இயற்கை அங்காடி.  வாங்கிப் பார்த்தேன்.  நல்ல தரம்.  நீங்களும் பயன்படுத்தலாம். விதை இயற்கை அங்காடியின் பொருட்களை இப்போது இணையத்தின் மூலம் பெறலாம். கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி, தேவையான பிரிவைத் தேர்வு செய்து, பொருட்களைத் … Read more

கேள்வி பதில்

கேள்வி: எஸ்.ராமகிருஷ்ணன் சமீபத்திய தமிழ் இந்து பேட்டியில் இவ்வாறு சொல்கிறார்: கேள்வி: நீங்கள், ஜெயமோகன், சாரு நிவேதிதா ஆகியோர் ஒரு கட்டத்தில் பெரும் பத்திரிகைகள் வாயிலாக வெகுஜன வாசகர்களையும் கணிசமாக ஈட்டியிருக்கிறீர்கள்… உங்களது எழுத்துகளை வாசகர்களின் தேவைக்காக எளிமைப்படுத்தியிருக்கிறீர்களா? பதில்: தமிழில் எழுத்தாளன் எவ்வளவு பிரபலமானவனாக இருந்தாலும் மற்ற இடங்களை ஒப்பிடும்போது வாசகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சாரு நிவேதிதா மூவருக்கும் தனித்தனியாக ஐந்தாயிரமோ பத்தாயிரமோ வாசகர்கள் இருக்கலாம். நாங்கள் எழுதும் உள்ளடக்கம் வெகுஜன … Read more

படச்சுருள்

படச்சுருள் மாத இதழ் – ஆன்லைன் மூலம் சந்தா செலுத்த… நண்பர்களே படச்சுருள் மாத இதழுக்கான சந்தாவை நண்பர்கள் ஆன்லைன் மூலமும் செலுத்தலாம். கீழே உள்ள இணைப்பை சொடுக்கி, சந்தாவை செலுத்திவிட்டு, கொடுக்கப்பட்டிருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் முகவரி உள்ளிட்ட விபரங்களை அனுப்பி விடுங்கள். ஜூன் மாதம் முதல் படச்சுருள் உங்கள் வீடு தேடி வரும். இதுவரை படச்சுருள் இதழுக்கு சந்த செலுத்திய நண்பர்களுக்கும், இனி செலுத்தப்போகும் நண்பர்களுக்கும் தமிழ் ஸ்டுடியோவின் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். ஆன்லைனில் … Read more

சாருநிவேதிதாவின் ''புதிய எக்ஸைல்'' – நுண்ணுணர்வின் அழகியலும் அபத்தமும் : கார்ல் மார்க்ஸ்

எக்ஸைல் பற்றி யாரும் எதுவும் எழுதாத நிலையில் கார்ல் மார்க்ஸ் பின்வரும் மதிப்புரையை அவரது முகநூலில் எழுதியிருக்கிறார். பின்னர் அது குறித்து நிர்மல் சிறிது விவாதித்திருக்கிறார்.  மற்ற யாரும் விவாதத்தில் பங்கு பெறவில்லை.  அருணாசலம், செல்வகுமார், அராத்து, கணேஷ் அன்பு, பிச்சைக்காரன், ராஜேஷ் போன்ற நண்பர்கள் விவாதத்தில் பங்கு பெற்றிருக்கலாம்.  எப்படிப்பட்ட மொக்கை, மரண மொக்கைப் படத்துக்கெல்லாம் மாய்ந்து மாய்ந்து விமர்சனம் எழுதி சண்டை போடுபவர்கள் நாவல் என்றால் பம்மி விடுகிறார்கள். கார்ல் மார்க்ஸுக்கு என் பிரத்தியேக … Read more