என் கதை

இப்போது மொழி என்ற கட்டுரைத் தொகுப்பை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன். அதில் வரும் ஒரு கட்டுரை இங்கே: என்னுடைய எழுத்து (அது நாவலாக இருந்தாலும் சரி, கட்டுரையாக இருந்தாலும் சரி) எப்போதுமே பொதுக்கருத்துக்கு எதிராக இருந்து வருவதால் (அப்படி இருக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை) ஆரம்பத்திலிருந்தே அதைப் பிரசுரிப்பதில் பெரும் சிரமங்களையும் பிரச்சினைகளுயுமே எதிர்கொண்டு வருகிறேன்.  எண்பதுகளில் நான் தில்லியில் இருந்த போது சுந்தர ராமசாமியின் ’ஜே.ஜே. சில குறிப்புகள்’ நாவலுக்கு ஒரு விமர்சனக் கட்டுரை … Read more

இது ஒரு சமூக அவலம்!

ஒரு நெருங்கிய நண்பர்.  வசதியானவர்.  ஜோடிப்புறா பிடிஎஃப் அனுப்பவா என்று கேட்டேன்.  பதில் இல்லை.  பிடிஎஃப்-இல் வாங்கினால் ஒரு ஐயாயிரம் கிடைக்குமே என்று ஆர்வப்பட்டேன்.  தனவந்தரின் பண உதவி மார்ச்சிலிருந்து நின்று போனதால் பணம் என்ற விஷயம் இதுவரையில் இல்லாமல் முதல் முறையாக என் சிந்தனையில் குறுக்கிட்டுக் கொண்டு வருகிறது.  நெருங்கிய நண்பர் பதில் அனுப்பாமல் போனதோடு அந்த விஷயத்தை மறந்து விட்டேன். ஜோடிப்புறா அச்சு நூலாக வந்தது.  எண்பது பிரதிகள் விற்றது.  அந்த எண்பது என்ற … Read more

மொழி

நமனை அஞ்சோம் என்ற கட்டுரைத் தொகுப்புக்கு அடுத்த படியாக, இப்போதெல்லாம் ஊரில் யாரும் வாழ்வதில்லை என்ற சிறுகதைத் தொகுப்பு தயாராகி வருகிறது. கடந்த ஒன்றரை மாதத்தில் என்னுடைய பத்து புத்தகங்கள் ராஸ லீலா பதிப்பகத்திலிருந்து வெளிவந்துள்ளன. இப்போது ”மொழி” என்ற தலைப்பில் அமைந்த என் கட்டுரைத் தொகுப்பை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன். அதில் பிச்சைக்காரனின் ஒரு கடிதமும் அதற்கான என் பதிலும் உள்ளன. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஹாய் சாரு.. பைபிள் படித்து கொண்டு இருந்தேன். … Read more

இது என்ன மடமா?

டியர் சாரு, சற்று முன்பு நீங்கள் எழுதியிருந்த முற்பகல் செய்யின் படித்தேன். ஒரு சந்தேகம். உங்களிடம் உரையாடல் சாத்தியம் என்பதால் மட்டுமே இதைக் கேட்டு எழுதுகிறேன். இதற்கும் நீங்கள் மன உளைச்சலாகி விட்டால் அப்புறம் எனக்கு அந்தப் பழி வந்து சேர்ந்து விடும். உங்கள் நண்பர் (நண்பி?) சொன்னது போல், நானும் ஏற்கனவே எக்கச்சக்கமான சாபங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். விமோசனத்துக்குத்தான் வழியில்லை. இதை என்னுடைய சந்தேகம் என்று மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். மன உளைச்சல் வேண்டாம். விஷயத்துக்கு … Read more

முற்பகல் செய்யின்… (மேலும் சேர்த்திருக்கிறேன்)

மேற்கண்ட முதுமொழியில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மட்டும் தொடர்ந்து படியுங்கள். ஏனேன்றால், இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க மூட நம்பிக்கை எனக் கருதப்படும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்டுதான் எழுதப்படுகிறது. பகுத்தறிவுக்கும், அறிவியலுக்கும், தர்க்கத்துக்கும் இந்தக் கட்டுரைக்கும் துளிக்கூட சம்பந்தம் இல்லை. அகோரா என்ற மூன்று தொகுதிகள் கொண்ட புத்தகத்தில் விமலானந்தா என்று ஒரு அகோரி வருகிறார். அவருக்கு காளி எதிர்காலத்தையும் அறியும் சக்தியை அளிக்கிறாள். அதன் காரணமாக, உயிருக்கு உயிராக நேசித்த அவர் மகன் ஒன்பது வயதிலேயே … Read more