என் புத்தகங்கள் பிரசுரமானது எப்படி என்ற புராணம்…

எனக்கு ஆரம்ப காலத்தில் பதிப்பாளர்கள் யாரும் கிடைக்கவில்லை.  எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும், லத்தீன் அமெரிக்க சினிமா, ஸீரோ டிகிரி, கோணல் பக்கங்கள், ஜே.ஜே. சில குறிப்புகள் – ஒரு விமர்சனம், மற்றும் பலவிதமான சினிமா விமர்சனங்கள் எல்லாமே நான் பிரசுரம் செய்தவைதான்.  நண்பர்களிடம் பணம் கேட்கலாம் என்றால் நண்பர்கள் யாரும் இல்லை.  இருந்த நண்பர்களோ என்னை விட ஏழைகள்.  என் புத்தகங்கள் வெளிவந்தது எல்லாமே என் பணத்தில்தான். அதாவது, அவந்திகாவின் பணம்.  இன்று அவள் என் எழுத்துக்குப் … Read more

விரல்களின் வழியே வழிந்தோடும் இசை…

இன்று பெட்டியோ… நாவலின் ஒரு முக்கியமான அத்தியாயத்தை எழுதி முடித்தேன்.  வாழ்வே முடிந்து விட்டது போல் தோன்றியது.  கூடவே Ludovico Einaudiயின் இசையைக் கேட்டுக் கொண்டே எழுதினேன்.  போலிஷ் இயக்குனர் Andrzej Wajda இயக்கிய தெ கண்டக்டர் (1980) என்ற படத்தில் ஒரு காட்சி வரும்.  எண்பது வயது இசைக் கலைஞன் ஒருவனுக்கும் முப்பது வயது பெண்ணுக்குமான காதல் பற்றிய கதை.  இசைக் குழுவை தன் கரங்களால் இயக்கிச் செல்லும்போது அந்த இசைக் கலைஞனின் விரல்களின் வழியே … Read more

இசையும் மௌனமும்

வணக்கம் சாரு ஐயா, நான் தமிழ் சினிமாப் பாடல்களைத் தாண்டி மற்றவை ஏதும் பெரிதாகக் கேட்பதில்லை. உங்கள் பதிவுகள் சிலவற்றில் ஏதாவது வீடியோக்களோ பாடல்களோ இணைத்திருப்பீர்கள். நான் அதில் சிலவற்றைக் கேட்பேன். அவை எனக்கு ஒத்து வரவில்லை. நேற்றையப்  பதிவில் சாமுவெல் பார்பரின் இசைக் கோர்வை ஒன்றை இணைத்திருந்தீர்கள். அதனைக் கேட்டேன். ஆரம்பத்தில் ஏதோ கறுப்பு வெள்ளை  தமிழ் சினிமாப் பின்னணி இசை போல் இருந்தது. பின்னர் ஆங்கிலப் படத்தில் வரும் பின்னணி இசை போல் இருந்தது. … Read more

பெட்டியோ… உன்மத்தமும் கலையும்

சாமுவெல் பார்பர் உருவாக்கிய அடாஜியோ ஃபர் ஸ்ட்ரிங்ஸ் பாடலின் ஒரிஜினல் வடிவத்தை நயநதினி பெருமாளுக்கு அறிமுகப்படுத்தினாள்.  பார்பரை இப்போதுதான் கேட்கிறேன், நீ அதன் ரீமிக்ஸ் வடிவத்தைக் கேட்டிருக்கிறாயா என்றான். கேட்டிருக்கிறேன், ஆனால் அத்தனை கவர்ந்தது இல்லை என்றாள்.  இப்போது கேள் என்று அவள் கேட்டிராத ஒரு லைவ் வர்ஷனைப் போட்டுக் காண்பித்தான்.  உன்னிடமிருந்து வரும்போது அது வேறு மாதிரி இருக்கிறது என்று சொல்லி விட்டு அதற்கு நடனமாட ஆரம்பித்தாள்.  நடனம் தெரிந்தவள்.   அந்த நடனம் எப்படி இருந்தது … Read more

நேரம்

மேற்கு ஐரோப்பாவில் வசிக்கும் ஒரு நீண்ட கால நண்பர் இங்கே ஜூன் மாதம் வருகிறார். என்னை ஒரு லஞ்சிலோ டின்னரிலோ சந்திக்க வேண்டும் என்கிறார். ஒரு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்றால், உடனடியாக ஓடி விடுவேன். அதில் எனக்கு ஒரு நான்கு ஐந்து மணி நேரம் – அதாவது, அரை நாள் – செலவாகி விடும். ஆனால் இப்போதும் நான் அப்படி இருக்க முடியாது. என் வயது 70. என்னுடைய ஒவ்வொரு மணித்துளியையும் மிகக் கச்சிதமாக செலவு … Read more