கோபி கிருஷ்ணன் மாஸ்டர் கிளாஸ் – 1

கொரோனா காலகட்டத்தில் நான் நம்முடைய தமிழ் இலக்கிய முன்னோடிகளைப் பற்றிப் பேருரை ஆற்றிக் கொண்டிருந்தேன். காலையில் ஆறு மணிக்குத் தொடங்கும் உரை அநேகமாக ஒன்பது மணிக்கு முடியும். பிறகு ஒரு மணி நேரம் கேள்வி பதில் பகுதி இருக்கும். கேள்விகள் மிகச் சுருக்கமாகவும் பதில்கள் மீண்டும் ஒரு உரை போன்றும் இருக்கும். ஆறு மணிக்கு ஆரம்பித்தால் ஒன்பது மணிக்கு உரையாற்றி முடித்து விட்டுத்தான் தண்ணீரே குடிப்பேன். இடையில் எது குறுக்கிட்டாலும் என் சிந்தனை ஓட்டம் தடைபடும். பத்து … Read more

Conversations with Aurangzeb நாவலிலிருந்து ஒரு பகுதி

இன்று ஸ்க்ரால் டாட் இன் இதழில் Conversations with Aurangzeb நாவலிலிருந்து ஒரு பகுதி வெளியாகியுள்ளது. லிங்க்: https://scroll.in/article/1057652/fiction-a-writer-holds-seances-with-shah-jahan-who-is-elbowed-out-by-aurangzeb-to-write-a-novel

இயக்குனர் வஸந்த் & ஔரங்ஸேப்

ஹார்ப்பர்காலின்ஸ் பதிப்பகத்தில் Conversations with Aurangzeb நாவல் இருபதாம் தேதி வரும் என்று சொல்லியிருந்தார்கள். என் நண்பர் ஒரு 150 பிரதிகளுக்கு ஆர்டர் கொடுத்திருந்தார். அது எப்போது வருமோ என்று நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன். பொதுவாக எனக்கு மாதம் தேதி வருடம் எதுவுமே தெரியாது. இன்னிக்கு எதுக்கு விடுமுறை என்பேன். காந்தி ஜெயந்தி என்பார்கள். இல்லாவிட்டால் சுதந்திர தினம் என்பார்கள். தீபாவளி மட்டும் தெரிந்து விடும், பட்டாசின் காரணமாக. இந்த நிலையில் ரொம்பப் புதிதாக காலண்டரைப் பார்க்க … Read more

இலங்கைப் பயணம் (2)

நேற்று ஒரு நண்பர் தொலைபேசியில் அழைத்து, கொழும்பு செல்கிறீர்களே, கையில் போதுமான பணம் இருக்கிறதா என்று கேட்டார். பண விஷயம் கொஞ்சல் சிக்கல்தான். ஆனால் அதைத் தீர்த்து வைக்கும் மந்திரம் என் டிஸைனர் ஸ்ரீபத் கையில்தான் இருக்கிறது என்றேன். என்ன என்று கேட்டார். பெட்டியோ முதல் பிரதி இரண்டு லட்சம் ரூபாய். பிறகு இரண்டாம் பிரதியிலிருந்து பத்தாவது பிரதி வரை ஒரு லட்சம் என்று விலைப் பட்டியலை மாற்றி அமைத்திருக்கிறேன். ஒரு ஐந்து நண்பர்கள் ஒரு லட்சம் … Read more

கலையும் மீட்சியும்: ஒரு நேர்காணல்

சில மாதங்களுக்கு முன்பு நான் அருஞ்சொல்லில் சமஸுக்கு அளித்த நேர்காணல் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அது இப்போது புத்தகமாக வர இருக்கிறது. நேர்காணலை செப்பனிட்டிருக்கிறேன். நிறைய சேர்த்திருக்கிறேன். அந்த நேர்காணலை என்னுடைய சுயசரிதை என்றும் சொல்லலாம். கலையும் மீட்சியும்: ஒரு நேர்காணல் என்று தலைப்பு வைத்திருக்கிறேன். இன்னும் ஒரு மாதத்தில் நூல் வெளிவரும். போகன் சங்கர் முன்னுரை தர இசைந்துள்ளார். அந்த நேர்காணலில் என்னுடைய சிவில் சப்ளைஸ் துறை அனுபவங்கள் சிலவற்றை விவரித்திருக்கிறேன். அதை அருஞ்சொல்லில் படித்த … Read more

இலங்கைப் பயணம்: ஒரு முக்கிய அறிவிப்பு

நவம்பர் ஒன்பதாம் தேதி ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் மாலை நான்கு மணி விமானத்தில் கொழும்பு கிளம்புகிறேன். கொழும்பு ஐந்தரை மணிக்குப் போய்ச் சேரும். விமான நிலையத்துக்கு அனோஜன் வருவதாகச் சொல்லியிருக்கிறார். அவருடன் கொழும்பிலிருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாதுக்கை என்ற ஊருக்குக் கிளம்புகிறேன். அங்கேதான் கே.கே. என்றும் சர்ப்பயா என்றும் அழைக்கப்படும் சமன் குமாரவின் வீடு உள்ளது. அங்கே அவர் வீட்டில்தான் தங்கலாம் என்று திட்டம். அவர் தனி ஆள். குடும்பம் இல்லை. அதனால் தங்குவதில் ஒன்றும் … Read more