அவதூறுக்கு எதிர்வினை (6): பெருந்தேவி

சாரு தமிழின் முதன்மையான பின்நவீனத்துவப் படைப்பாளி. சாருவோ வேறெந்த தமிழ் எழுத்தாளரோ வாசகர்களின் பொருளாதார ஆதரவைக் கோரினாலோ அதில் வாழ்ந்தாலோ அதை எள்ளிப் பேசவோ விமர்சிக்கவோ தமிழ்ப் பொதுச் சமூகத்துக்கு, குறிப்பாக இன்று வரை எந்தத் திரைப்படத்தையும் கலை நுண்ணுர்வுடனும் தனித்துவத்தோடும் எடுக்காத திரையுலகினருக்கு, அதுவும் திரை இயக்குநப் போலிகளுக்கு எந்த அருகதையும் இல்லை. ஒருவேளை அந்த இயக்குநர் குறிப்பிட்ட கதாபாத்திர வார்ப்பை எந்த எழுத்தாளரையும் மனதில் வைத்து எடுக்காமல், அவரது உதவியாளர் அவ்விதமாக உளறியிருந்தால், அதை … Read more

அவதூறுக்கு எதிர்வினை (5): அராத்து

அனானிமஸ் (2): நான் சின்ன வயதாக இருந்த போது ஒரு அண்ணன் இரவில் தெருக்கடை போடுவார். அப்போது சாலையிலேயே நாற்காலி , மேஜை போடும் பழக்கம் இருந்தது. அவர் மிஸ்டர் மெட்றாஸ் போட்டிகளில் கலந்து கொண்டவர். வென்றாரா என்பது நினைவில்லை. அப்போது அவர் கமல் ரசிகர். அப்போது கமல் ரசிகர்களில் பலர் ஜிம் பாடி மெயிண்டெயின் செய்வார்கள். ரஜினி ரசிகர்களுக்கும் இவர்களுக்கும் அவ்வபோது முட்டிக்கொள்ளும். ரஜினி ரசிகர்கள் எந்த ஆயுதத்தை கமலுக்கு எதிராக இறக்குவது எனத் தெரியாமல் … Read more

தொலைந்து போன புத்தகம்…

அப்போது இலக்கியம் ஒரு கண், குடி இன்னொரு கண்.  அப்படி ஒரு குடி.  ஆனால் குடியைக் குடிக்காகக் குடிப்பதில்லை.  அதுவும் ஒரு தோது.  தி.ஜானகிராமனும் கு.ப.ரா.வும் வெற்றிலை பாக்கும் புகையிலுமாக இரவு பூராவும் இலக்கியம் பேசுவார்களாம்.  ஒவ்வொரு காலத்துக்கும் ஒவ்வொரு அய்ட்டம்.  அப்போது வெற்றிலை பாக்கு புகையிலை.  இப்போது குடி.  பாரிஸிலிருந்து வாசன் வந்திருந்தான்.  நெருங்கிய நண்பன்.  சென்னை வந்தால் சின்மயா நகரில் ராமானுஜம் வீட்டில்தான் தங்குவான்.  இங்கே ராமானுஜத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.  பெயருக்கேற்ற புத்திசாலி.  … Read more