வீடு

இன்றும் வீடு தேடி மறைமலை நகர் வரை வந்தோம். கடைசியில் பார்த்தால் மறைமலை நகரிலிருந்து நாலு கிலோமீட்டர் தூரம் உள்ளே கோவிந்தாபுரம் என்ற குக்கிராமத்தில் இருந்தது வீடு. ஆனால் அங்கே வைஃபை கூட இல்லை என்பதால் இப்போது அம்பத்தூர் செல்கிறோம். வீடு பார்க்கத்தான். மைலாப்பூரில்தான் 1,70,000 ரூ மாத வாடகை கேட்கிறார்களே கொடூரர்கள்? வேறு என்ன செய்ய? பின்குறிப்பு: இந்தக் காரணத்தினால் இன்றைய கட்டுரை இன்று நள்ளிரவில்தான் பதிவேற்றம் செய்யப்படும்.

ஏன் தினமும் எழுதுகிறீர்கள்?

என் நண்பர் ஒருவர் என் வாட்ஸப்பில் கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தார். எழுதிய நேரம் இரவு 11.43. ”உங்களை நிரூபிக்க என்ன தேவை இருக்கிறது சாரு… ஏன் விளக்கம் கொடுத்துக்கொண்டே இருக்கிறீர்கள்? ஒரு ரெண்டு நாள் எழுதுங்கள், போஸ்ட் பண்ணாதீர்கள். வீட்டில் நீங்க பாட்டுக்கு இருங்கள். எழுதி எழுதி போஸ்ட் போடனும்னு எந்த அவசியமும் இல்லை. ஒரு பத்து நாள் அமைதியாக இருங்கள் .. எல்லாரும் தேடி வருவார்கள், இல்லயா ஒரு **## இல்லை.. சாரு தப்பாகச் சொல்லிருந்தால் மன்னிச்சிருங்க.. … Read more

21. பின்னோக்கிப் பார்க்கிறேன்…

1978இலிருந்து நான் தில்லியில் பார்த்த திரைப்படங்கள்தான் சமகாலத் தமிழ் இலக்கியத்தில் பெரும்பான்மையான படைப்பாளிகளை நான் மூர்க்கமாக நிராகரிப்பதற்குக் காரணமாக அமைந்தன. நான் நிராகரித்தவர்களுள் முக்கியமானவர் தி.ஜானகிராமன். அந்தத் திரைப்படங்கள் எனக்குப் பார்க்கக் கிடைத்ததனாலேயே ”நான் ஜெர்மன் சினிமாவினால் உருவாக்கப்பட்டேன்” என்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். பொதுவாகச் சொன்னால், ஐரோப்பிய சினிமா. அதிலும் பெர்க்மன் போன்றவர்கள் அல்ல. பெர்க்மன் மானுட குலத்தின் ஆன்மீக வெறுமையைத் தன் கருப்பொருளாக எடுத்தவர். ஆனால் பசோலினி போன்றவர்களும், ஜெர்மானிய பெண் இயக்குனர்களும்தான் மனிதனின் … Read more

20. It is about transgressive sex…

பத்தொன்பதாம் அத்தியாயத்தின் இறுதியை நினைவு கூர்ந்து கொண்டு இப்போது மீதிக் கதையைப் படியுங்கள்.  Truth or Dame game என்று எழுத்துப் பிழையோடு வந்து விட்டது.  ஆட்டத்தின் பெயர் Truth or Dare என்பதை நீங்கள் அறிவீர்கள். இரண்டாவது ஆட்டத்தில் தியோ வெல்கிறான்.  இஸபெல் தோற்கிறாள்.  இப்போது நீ மேத்யூவுடன் எனக்கு முன்னே உடலுறவு கொள்ள வேண்டும் என்கிறான் தியோ.  என்னதான் படத்தின் கதையை எழுதினாலும் நீங்கள் பார்த்தால்தான் படத்தின் இயல்புத்தன்மையைப் புரிந்து கொள்ள முடியும்.  படத்தில் … Read more

ஒரு கதை அல்ல, ஒரு நூறு லக்ஷ்மி கதைகள்…

முதல் அட்மின் “மிகவும் வருந்துகிறேன், இனிமேல் இப்படி நடக்காது” என்று எனக்கு எழுதியிருந்தாள். நல்லவேளை, ”முதல் அட்மின் என்றால் யார் என்று உலகத்துக்கே தெரியும், முச்சந்தியில் வைத்து என்னை அசிங்கப்படுத்தி விட்டீர்கள்” என்று என்னைக் குற்றம் சாட்டவில்லை. இல்லாவிட்டால் அதற்கு வேறு ஆயிரம் மன்னிப்புக் கேட்டு, முந்நூறு (காதல்!) கவிதைகள் எழுதித் தொலைக்க வேண்டும். முதல் அட்மின் பற்றி எனக்கு நன்கு தெரியும் என்பதால்தான் அதை நான் தைரியமாக எழுதினேன். முதல் அட்மின் “இனிமேல் அப்படி நடக்காது” … Read more

பைசா பெறாத விஷயம் – ஒரு சோகக் கதை

நேற்றுதானே மகிழ்ச்சி பற்றி எழுதினேன்? எழுதி முடித்த கணத்திலிருந்து ஒரே மன உளைச்சல். எல்லாம் இந்த இன்ஸ்டாவினால் வந்தது. கதையை ப்ளாகில் வெளியிட்ட கையோடு என் அட்மினை அழைத்து கதையை இன்ஸ்டாவில் பகிர்ந்து விடு என்றேன். அட்மின் பயங்கர பிஸியான ஆள். அதனால் அவளுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது போடட்டும் என்று அந்த விஷயத்தை அப்போதே மறந்து விட்டேன். ஒரு மணி நேரத்தில் “எந்தக் கதையை? இந்தக் கதையையா?” என்று மகிழ்ச்சி கதையின் லிங்க் வந்தது. … Read more