மனு ஸ்மிருதி: ஒரு சிறிய விளக்கம்

இப்போதைய என்னுடைய நேர நெருக்கடியில் மனு ஸ்மிருதியில் நான் கை வைத்திருக்கக் கூடாது. வைத்தாயிற்று.  இனி மீள முடியாது.  என் நேற்றைய பதிவுக்கு செல்வகுமாரின் எதிர்வினை கீழே: மனுதர்மம் புழக்கத்தில் மறைந்துவிட்ட பழைய சமாச்சாரம் என்றுதான் நம்பிவந்தேன். ஆனால், அதன் நெருப்பை பத்திரமாகக் காப்பாற்றி வருபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பொது சமூகத்தில் மிக நல்லவர்கள் என்று அறியப்படுபவர்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் எகிப்திய பிரமிடுகளில் இருக்கும் மம்மியை எழுப்புவது போல மனுவை எழுப்பிவிடுவார்கள். மனுதர்மம் எல்லா மனிதர்களையும் … Read more

புதுமைப்பித்தன்: காலனும் கிழவியும்

வெள்ளைக்கோயில் என்றால் அந்தப் பகுதியில் சுடுகாடு என்ற அர்த்தம். ஆனால் அது ஒரு கிராமமும் கூட. கிராம முனிஸீபு முதலிய சம்பிரமங்கள் எல்லாம் உண்டு. ஊர் என்னமோ அப்படி அப்படித்தான். ‘வெள்ளைக்கோயிலுக்குப் போகிறேன்’ என்றால் உலகத்திடம் செலவு பெற்றுக்கொள்வது என்பது அந்தப் பகுதி வாசிகளின் வியாக்கியானம். ஆனால், வெள்ளைக்கோயிலுக்குப் போய்த் திரும்பி வருகிறவர்களும் பலர் உண்டு. ஏன், சுப்பு நாடான் தினசரி காலையும் சாயங்காலமும் அங்கு போய்த்தான் ஏழை மக்களுக்குக் கஷ்டத்தை மறக்க வைக்கும் அமுதத்தை இறக்கி … Read more

மனு ஸ்மிருதி

மனு ஸ்மிருதி பற்றிக் கருத்து கூறுபவர்கள் பெரும்பாலும் மனுவைப் படித்தது இல்லை. ஒரு வார்த்தை கூட. நான் அதை ஆங்கிலத்திலும் தமிழிலும் பலமுறை வாசித்திருக்கிறேன். இந்த இரண்டு மொழிபெயர்ப்புகளும் சரி தானா என்றும் சம்ஸ்கிருதத்தோடு ஒப்பிட்டும் பார்த்திருக்கிறேன். ஏனென்றால் சில சமயங்களில் மொழிபெயர்ப்பாளர்களே தங்கள் வசதிக்கேற்ப தகிடுதித்தங்கள் செய்வதுண்டு. இப்போது மனு ஸ்மிருதி பற்றிய பேச்சு ஓடிக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு இது எல்லாமே ஒரு கேளிக்கை. இலக்கிய வாசிப்பே இல்லாத ஒரு கூட்டத்தில் இது எதிர்பார்க்கக் கூடியதும்தான். … Read more

பகவான் கிருஷ்ணரும் பரமசிவனும் (ஒரு குட்டிக் கதை)

அது ஏன் கிருஷ்ணருக்கு ர் விகுதி, அடுத்ததுக்கு ன் விகுதி, ஏன் பெயர்களில் கூட இந்தப் பாகுபாடு என்ற ஐயம் உங்களுக்கு எழலாம்.  பரமசிவனும் கிருஷ்ணரும் இரண்டு அவதாரங்கள்.  நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவராகவே இருந்தாலும் இந்த அவதார விஷயங்களில் நம்பிக்கை கொண்டவராக இருக்க சாத்தியம் இல்லை.  அப்படிப்பட்ட ஆட்களெல்லாம் விவேகானந்தரோடு முடிந்து போய் விட்டார்கள்.  ஆனால் நான் அவதாரத்தை நம்புகிறேன்.  பரமசிவன் சாட்சாத் பரமசிவனின் அவதாரம்.  கிருஷ்ணர் சாட்சாத் கிருஷ்ணரின் அவதாரம்.  கிருஷ்ணரைப் பற்றி எனக்கு … Read more