1.

எதையெல்லாம் நீ துறக்கிறாயோ… புத்தாண்டில் எழுதும் முதல் கட்டுரை.  கிருமி முற்றாகப் போகவில்லை என்றாலும் நாம் பூச்சியை முடித்து விடுவோம்.  இதற்கு வேறு ஏதாவது ஒரு தலைப்பு வைக்க  வேண்டும்.  அதுவரை எண்கள். சென்ற ஆண்டு நிறைய எழுதியவர்களில் என்னையும் சேர்த்திருந்தார் பா. ராகவன்.  சந்தோஷமாக இருந்தது.  ஆனால் வேறொரு விஷயத்தை நான் உங்களுக்கு இதுவரை சொல்லவில்லையே என நினைத்து சற்று என் மீதே வருத்தமாகவும் இருந்தது.  நான் எழுதிய பூச்சி அனைத்தும் நான் ஈடுபட்ட வேலையிலிருந்து … Read more

சிறப்புத் தள்ளுபடி

புத்தாண்டை ஒட்டி ஸீரோ டிகிரி பப்ளிஷிங்கில் என்னுடைய புத்தகங்களுக்கு மாபெரும் விலைக் குறைப்பை அறிவித்திருக்கிறார்கள். 35% இலிருந்து 50% சதவிகிதம் வரை விலைக் குறைப்பு. இதை நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். https://www.zerodegreepublishing.com/collections/charu-nivedita

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய சஞ்சய் சுப்ரமணியம் அவர்களுக்கு,

வணக்கம்.  உங்களுக்கு இப்படி ஒரு கடிதம் எழுத எனக்கு எந்தத் தகுதியும் இல்லை.  இருந்தாலும் கடைக்கோடி ரசிகனின் ஏதோ ஒரு மனத்தாங்கலை உங்களிடம் கொட்டி விடலாம் என்று எழுதுகிறேன்.  நான் சொல்வது முழுக்கவே தவறாக இருக்கலாம். இருந்தாலும் என் மனசாட்சி ‘இப்படி ஒரு பார்வையும் இருக்கலாம்தானே?  இதை சம்பந்தப்பட்டவரிடமே சொல்லி விடலாமே?’ என்று சொன்னதால் மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு இதை எழுதத் துணிந்தேன்.  சமீபத்தில் ரா. கணபதி எழுதிய மகா பெரியவர் விருந்து என்ற நூலில் மகா … Read more

2021

2020 முடிய இன்னும் இருபத்து நான்கு மணி நேரம் இருக்கிறது.  இதுவரை எந்த ஆண்டும் புத்தாண்டு பற்றிப் பெரிதாக யோசித்ததில்லை.  எல்லா நாளும் ஒரே நாளே என்ற மனநிலையே எனக்கு.  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்காட்டில் அராத்து புத்தக வெளியீட்டு விழா.  கோலாகலம்.  சென்ற ஆண்டு கிழக்குக் கடற்கரைச் சாலை.  அராத்து புத்தக வெளியீடு.  இந்த ஆண்டு புத்தக வெளியீடு இருந்தாலும் நான் வருவதற்கில்லை என்று சொல்லியிருந்தேன்.  இப்போது நண்பர்கள் ஏற்காட்டில் சந்திப்பதாக அறிந்தேன்.  எனக்கு மிக … Read more

an open letter to Sanjay Subrahmanyan

இந்த வார குமுதத்தில் நான் எழுதியுள்ள மேற்கண்ட கடிதம் கடும் விவாதங்களுக்கு உட்பட்டிருப்பதை அறிந்தேன். நான் சற்றும் எதிர்பார்த்திராதவர்களெல்லாம் எனக்கு போன் செய்து பேசினார்கள். கடும் சர்ச்சையையும் விவாதத்தையும் எழுப்பியுள்ள அந்தக் கடிதத்தை என் ப்ளாக் வாசகர்களும் படிக்க வேண்டும் என்று பிரியப்படுகிறேன். பொதுவாக பத்திரிகைகளில் நான் எழுதுவதை என் ப்ளாகில் மறுபிரசுரம் செய்வது என் வழக்கம் இல்லை. எனவே நீங்களே குமுதத்தை ஆன்லைனிலோ, உள்ளூர் நண்பர்கள் கடையிலோ வாங்கிப் படிக்கலாம். படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

188. ராம்ஜிக்கு ஒரு கடிதம்…

ஸீரோ டிகிரி பதிப்பக பார்ட்னரும் என் ஆருயிர் நண்பருமான ராம்ஜிக்கு, நேரடியாக விஷயத்துக்கு வந்து விடுகிறேன் ராம்ஜி.  இதை நான் உங்களுக்கு ஒரு போன் போட்டுக் கூட சொல்லியிருக்கலாம்.  அப்படிச் சொன்னால் அதை நீங்கள் விளையாட்டாக எடுத்துக் கொண்டு விடுவீர்கள் என்பதால் இப்படி ஒரு பகிரங்கக் கடிதமாக எழுதத் துணிந்தேன்.  விஷயம் இதுதான்.  ரொம்ப சிம்பிள்.  ஆனால் ரொம்பக் கஷ்டம்.  நானும் நேர்வழியில் செல்ல எத்தனையோ முயற்சி பண்ணினேன்.  45 ஆண்டுகளாக முயற்சி பண்ணினேன்.  தெய்வத்தால் ஆகாது … Read more