ஜானின் மகளுக்குக் கல்யாணம்

எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள மூன்று வாட்ச்மேன்களில் ஒருவர் ஜான்.  ஜானின் மகளுக்குக் கல்யாணம்.  என்னிடம் நாலாயிரம் பணம் கேட்டாள் அவந்திகா.  உயிரையும் எழுத்தையும் தவிர அவள் எது கேட்டாலும் கொடுப்பேன் என்பதால் கொடுத்தேன்.  நாலாயிரம் ஜானுக்குக் கை மாறியது.  மற்ற குடித்தனக்காரர்கள் அதிர்ச்சியும் வெளியே காட்டிக் கொள்ள முடியாத கோபமும் அடைந்தார்கள்.  ஒருத்தர் வெளிப்படையாகவே கேட்டார்.  ”ஏன் மேடம், இது ரொம்ப ஜாஸ்தி இல்லையா?”  “என்னிடம் பணம் இல்லை.  இருந்திருந்தால் நானே கல்யாணம் செய்து வைத்திருப்பேன்” … Read more

எழுத்தாளனோடு பழகுதல்

அராத்து எழுதிய ஒரு பதிவு பின்வருவது.  அதைத் தொடர்ந்து என் கருத்து வரும். மந்தஹாஸினி எழுதும்போது சில நேரங்களில் சாருவை தொடர்பு கொண்டு, இந்த வார்த்தைக்கு தமிழில் என்ன போடலாம் சாரு எனக் கேட்டேன். அவரும் பல வார்த்தைகளுக்கு தமிழில் சொன்னார், சில வார்த்தைகளுக்கு , நான் இதை ஆங்கிலத்திலேயே போட்டு விடுவேன் என்று சொன்னார். வரலாற்று நாவல் என்பதால் ஆங்கிலத்தில் போட முடியாதே என்று சொல்லி விவாதித்து வார்த்தைகளை முடிவு செய்தேன். ஆனாலும் வரலாற்று நாவலில் … Read more

சில விடுபடல்கள்

தரிசனம் என்ற சிறிய குறிப்பில் நான் நினைத்த மாதிரியே சில முக்கியமான பெயர்கள் விடுபட்டு விட்டன. அவர்கள் என் குடும்ப உறுப்பினர்களைப் போல. ஆனந்தி, சிவா மெடிக்கல்ஸ் சிவா, அருணாசலம், செல்வகுமார், ஆடிட்டர் ஸ்ரீதர். இதையும் கூட அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள் என்பதுதான் என் கொடுப்பினை.

எக்ஸைல்

ஒரு மாபெரும் வேலை முடிந்தது.  எக்ஸைல் நாவலின் பிழை திருத்தம் முடித்து விட்டேன்.  பிழை திருத்தம் மட்டும் அல்ல. எடிட்டிங்.  அதனால் கூர்ந்து வாசிக்க வேண்டியிருந்தது.  பொதுவாக ஒரு படைப்பை எழுதி முடித்து விட்டு அதிலிருந்து நான் முற்றாக வெளியே வந்து விடுவேன்.  அதைத் திரும்பப் படிக்க நேர்ந்தால் அது நான் எழுதியது அல்ல.  நான் அதன் வாசகன் மட்டுமே.  அதுதான் எப்போதும் என் அனுபவம்.  பொதுவாக ஸீரோ  டிகிரியைப் பலரும் சிலாகித்துப் பேசுவதைப் பார்க்கிறேன்.  அடிக்கடி … Read more

hathway என்ற கொடூர நிறுவனம்

hathway broadband நிறுவனத்தினர் தினமும் எனக்கு 25 முறை தொலைபேசியில் அழைக்கிறார்கள். தெரியாத எண் என்பதால் எப்போதாவது எடுத்து விடுகிறேன். தினமும் 25 முறை. புது கனெக்‌ஷன் வேணுமா. ஏற்கனவே எடுத்து ஏன் விட்டுட்டீங்க. இப்படி. பத்து மெஸேஜும் வருகின்றன. அநேகமாக என்னைப் பைத்தியமாக்கி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன். நாள் பூராவும் 24 போன் அழைப்பை எடுக்கவில்லை. 25ஆவது அழைப்பை இப்போது எடுத்து விட்டேன். சார் ஹாத்வே கனெக்‌ஷன் வாங்கி ஏன் விட்டுட்டீங்க என்று … Read more