ஜப்பான்: கனவும் மாயமும் – 6

”இளைஞர் உலகம் தன் ஒவ்வொருவருடைய அடையாளத்தையும் இழந்து, மனநோயிலும் தனிமையிலும் விழுந்து விடுகிறது” என்று சென்ற அத்தியாயத்தை முடித்திருந்தேன்.  மற்றவர்களாக இருந்திருந்தால் “அதுதான் கவலை அளிக்கிறது” என்று எழுதியிருப்பார்கள்.  எனக்கு அப்படி அல்ல.  இளைஞர் உலகம் எக்கேடு கெட்டுப் போனால் எனக்கு என்ன என்றே தோன்றுகிறது.  இளைஞர் உலகம் மட்டும் அல்ல, மனித இனமே எக்கேடு கெட்டுப் போனால் எனக்கு என்ன என்றுதான் இருக்கிறது.  ஏனென்றால், ஆயிரத்தில் அல்லது பத்தாயிரத்தில் ஒருத்தரைத் தவிர மற்றவர்களுக்குப் பணமே கண் … Read more

ஜப்பான்: கனவும் மாயமும் – 5

படத்தில் இருப்பவர் சுருக்கமாக RM என்று அழைக்கப்படுகிறார்.  Rap Monster என்பது முழுமையான பட்டப் பெயர்.  இயற்பெயர் கிம் ஜூன்.  தென் கொரியாவைச் சேர்ந்த பாடகர்.  இவருடைய குழுவின் பெயர் BTS. பதின்பருவத்திலேயே ஆர்.எம். வெளியிட்ட பாப் ஆல்பம் உலகப் புகழ் அடைந்தது.  இப்போது இவர் வயது 29.  எனக்குப் பிடித்த பாப் பாடகரான ஆர்.எம்.மை இந்த ஜப்பான் தொடரில் எழுத நேரிடும் என்று நான் எதிர்பார்த்ததில்லை.  அது தற்செயலாக இன்று நேர்ந்தது.  நேற்றிலிருந்து ரியூ முராகாமியின் … Read more

4. ஜப்பான்: கனவும் மாயமும்

நேற்று தூக்கக் கலக்கத்தில் பதிவேற்றம் செய்ததால் லவ் அண்ட் பாப் படத்தின் சில புகைப்படங்களைச் சேர்க்காமல் போய் விட்டேன். அக்கட்டுரையோடு இப்புகைப்படங்களையும் சேர்த்து இன்னொரு முறை வாசிக்கவும். கட்டுரைத் தொடரைப் பாராட்டி பல மின்னஞ்சல்கள் வந்தன. அடுத்த கட்டுரை படு ரகளையாக இருக்கும்.

3. ஜப்பான்: கனவும் மாயமும்

கடந்த சில ஆண்டுகளாகவே ஜப்பான் பற்றிய செய்திகள் என் முயற்சி இல்லாமலேயே என் பார்வைக்கு வந்து கொண்டேயிருந்தன.  ஜப்பானிலேயே வசிப்பவர்கள், ஜப்பானில் இரண்டு மூன்று ஆண்டுகள் வசித்து விட்டு வந்தவர்கள், நீண்ட காலப் பயணிகள், அடிக்கடி ஜப்பான் சென்று வருபவர்கள் என்று பலரும் தன் அனுபவங்களைச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.  எனக்கே ஆச்சரியமாக இருக்கும், நாமோ ஜப்பானே செல்லப் போவதில்லை, நம் காதில் ஏன் இத்தனை ஜப்பான் செய்திகள் வந்து விழுகின்றன என்று. நான் படித்த செய்திகள், … Read more

ஷிபுயா கிராஸிங்: ரா. செந்தில்குமார்

1 அது மட்டும் தயைகூர்ந்து வேண்டாம் என்று திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருக்கும் போதே அந்தக் காட்சி விரிந்தது. அகலமான ஷிபுயா கிராஸிங். ஷிபுயா ரயில்நிலையத்தை விட்டு வெளியே வந்தவுடன் எதிரில் குறுக்கும் நெடுக்குமாக ஐந்து மிகப்பெரிய நடைபாதைகள். எதிரில் மிகப்பெரிய திரைகளில் கார்ட்டூன் ஓடிக்கொண்டிருந்தது. திரையின் ஓரத்தில் 7.30 என்று கடிகாரம் மணி காட்டியது. பச்சை விளக்கு எரிந்ததும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும், கறுப்பு கோட்சூட், வெள்ளை சட்டை அணிந்து தோளில் தொங்கும் அலுவலகப் … Read more

ரா. செந்தில்குமாரின் ஒரு கதையும் அக்கதையில் சொல்லப்படாத முடிவும்…

என்னிடம் ஒரு பழக்கம் உண்டு.  நான் யாரையாவது எழுத்தாளரை சந்திக்கச் சென்றால், அவர்களின் ஒரே ஒரு புத்தகத்தையாவது படித்து விட்டுச் செல்வேன்.  என்னை சந்திக்கும் பலரும் என்னுடைய ஒரு புத்தகத்தைக் கூட படித்ததில்லை என்று சொல்வதால் அதற்கு மாறுதலாக இருக்க வேண்டும் என்று இந்தப் பழக்கத்தைக் கைக்கொண்டிருக்கிறேன். அந்த வகையில் இப்போது நான் ஜப்பான் செல்வதால் என்னை அங்கே வரவழைக்கும் துளிக்கனவு இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த ரா. செந்தில்குமாரின் சிறுகதைத் தொகுதிகள் இரண்டையும் படித்து விடுவோம் என்று … Read more