அந்நியனுடன் ஓர் உரையாடல்

அருஞ்சொல் இணைய இதழில் வெளிவந்த என் நேர்காணல் இப்போது நூல் வடிவில் வந்துள்ளது. இது கிட்டத்தட்ட என்னுடைய சுயசரிதை என்று சொல்லலாம். அருஞ்சொல் ஆசிரியர் சமஸ் அந்த அளவுக்கு இந்த நேர்காணலை ஒரு சுயசரிதம் அளவுக்கு எடுத்துக்கொண்டு வந்தார். அருஞ்சொல்லில் வந்த நேர்காணலை இந்த நூலில் வெகுவாக செப்பனிட்டிருக்கிறேன். முடிந்தால் வாங்கிப் படியுங்கள். http://tinyurl.com/Anniyunadun-Oru-Uraiyaadal

குற்றமும் தண்டனையும் (ஒரு நீதிக்கதை)

தஞ்சாவூர் கவிராயர் எழுதிய ஒரு கதையை என்னால் எந்த ஜென்மத்திலும் மறக்க இயலாது.  அவர் வீட்டில் ஒரு கல்யாணமுருங்கை மரம்.  அந்த மரத்தின் இலைகள் தன் வீட்டுத் தோட்டத்தில் நிற்கும் காரில் விழுந்து பெரிய இம்சையாக இருக்கிறது, அதை வெட்டுங்கள் என்று அண்டை வீட்டுக்காரர் இம்சை தருகிறார்.  ஒரு கட்டத்தில் அண்டை வீட்டுக்காரரின் இம்சை தாங்க முடியாமல் போகவே தஞ்சாவூர் கவிராயர் அரிவாளை எடுத்துக்கொண்டு போய் தான் பிரியம் பிரியமாக வளர்த்த கல்யாணமுருங்கை மரத்தை வெட்ட அரிவாளை … Read more

புத்தக விழா கடைசி நாள்

இன்றும் நேற்று போலவே மாலை நான்கு மணிக்கு புத்தக விழாவுக்கு வருவேன். நான்கு மணியிலிருந்து ஒன்பது மணி வரை ஸீரோ டிகிரி அரங்கில் (598 C) இருப்பேன்.

ஹிந்துவில் நேர்காணல்

தெ ஹிந்து தினசரியில் என்னையும் நந்தினியையும் பேட்டி எடுத்து வெளியிட்டுள்ளனர். வரும் 26, 27 தேதிகளில் நடக்கும் ஹிந்து இலக்கிய விழாவின் ஒரு பகுதியாக இந்தப் பேட்டி வெளிவந்தது. https://www.thehindu.com/litfest/the-hindu-lit-fest-interview-author-charu-nivedita-translator-nandini-krishnan-new-book-conversations-with-aurangzeb/article67744070.ece

புத்தக விழா குறிப்புகள் – 8 (ஒரு சின்ன கணக்கு)

ஒரு கடிதம் வந்தது. ”600 ரூ. விலையுள்ள புத்தகத்துக்கு ஒரு வாசகர் உங்களுக்கு 5000 ரூ. கொடுத்தால் அதை வாங்கிக் பாக்கெட்டில் போட்டுக் கொள்வதா? நியாயமா?” ஒரு சின்ன கணக்கு போடுங்கள். 600 ரூ. புத்தகத்துக்கு எனக்கு ராயல்டி 60 ரூ. 500 புத்தகம் விற்றால் 30000 ரூ. ராயல்டி. ஆனால் பெட்டியோ என்ற அந்த நாவலை எழுத எனக்கு ஆன செலவு மூணு லட்சம் ரூபாய். அடுத்த இலங்கைப் பயணத்துக்கு ஐந்து லட்சம் ஆகியிருக்கும். கேகே … Read more

புத்தக விழா குறிப்புகள் – 7

நேற்று (19.1.2024) அவ்வளவாக கூட்டம் இல்லை. என்ன செய்வதென்று தெரியாமல் வெறுமனே அமர்ந்திருந்தேன். பேச்சுத் துணைக்கும் ஆள் இல்லை. வித்யா, ராம்ஜி, காயத்ரி மூவரும் இட்லி வடை காஃபி சாப்பிட வெளியே சென்றிருந்தார்கள். அவர்கள் சென்ற சமயத்தில் நான் வேப் அடிக்க அரங்குக்கு அருகில் இருக்கும் கழிப்பறை பக்கம் சென்றிருந்தேன். வந்து பார்த்தால் யாரும் இல்லை. அரை மணி நேரம் சென்றது. பாடி ஷேமிங் செய்வதற்குத் தகுந்தாற்போல் பல விஷயங்கள் என்னிடம் இருந்தன. அதையாவது செய்து உற்சாகப்படுத்த … Read more