9. ஒரு குருக்களின் கதை

ஆண்டன் செகாவ் பற்றி, தஸ்தயேவ்ஸ்கி பற்றி, மாப்பஸான் பற்றி, ப்யூகோவ்ஸ்கி பற்றி, மற்றும் பல மேற்கத்திய இலக்கிய மேதைகள் பற்றியெல்லாம் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் ரோமாஞ்சனம் பெருகப் பேசும்போதெல்லாம் எனக்கு அசூயையாக இருக்கும்,   நம்மிடையே இருக்கும் மாமேதகள் பற்றி யார் ஐயா பேசுவது என்று.  பேசாவிட்டாலும் பரவாயில்லை, அந்த மாமேதைகள் மீது மூத்திரமும் அடித்தால் அந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல?  அதிலும் என் மாணவரே அப்படிச் செய்யும்போது மனம் பதறுகிறது.  இது அராத்து: “லா.ச.ரா வின் அபிதா … Read more

8. இலக்கியம் என்ன செய்கிறது?

நேற்று (26.4.2024) கிட்டத்தட்ட நாள் பூராவும் நானும் அவந்திகாவும் தென் சென்னை முழுக்கவும் வீடு தேடி அலைந்தோம். நண்பர்களிடம் சொல்லியிருந்தால் கார் அனுப்பியிருப்பார்கள். எப்போது கிளம்புவோம் என்று தெரியாததால் கார் வேண்டாம், ஆட்டோவிலேயே போகலாம் என்று சொல்லி விட்டாள் அவந்திகா. வீட்டில் கார்த்திக்கின் கார் இருக்கிறது, டிரைவர் இருந்தால் அதில் போயிருக்கலாம். பகுதி நேர டிரைவர் கிடைத்தாலும் என்னால் பெட்ரோல் போட்டு மாளாது என்பதால் அது பற்றி யோசிக்கவே முடியவில்லை. ஆட்டோவிலேயே நாள் பூராவும் சுற்றினோம். வீட்டுக்குத் … Read more

7. Pieta: குரூரத்தின் அழகியல்

“இன்று 26.7.2024) அபிதாவையும் அசுரகணத்தையும் படித்து விட்டு நாளை சந்திக்கிறேன்.  அநேகமாக நேற்றைய ஆட்டத்தை விட ரௌத்ரமாக இருக்கும்.”  நேற்று நான் இப்படி எழுதியிருந்ததற்கு அராத்துவின் எதிர்வினை: ”என்ன சாரு, இப்படி எல்லாம் முன்முடிவோடு படிக்க இறங்கலாமா? இது நம் பள்ளி விதிகளுக்கு எதிரானது அல்லவா ? ரௌத்திரமான ஆட்டம் என்றெல்லாம் பஞ்ச் டயலாக் வேறு விடுகிறீர்கள். பயமாக இருக்கிறது.”    முன்முடிவோடு படிக்க இறங்குவது நம் பள்ளி விதிகளுக்கு எதிரானதுதான்.  ஆனால் நான் இங்கே முன்முடிவோடு … Read more

6. எழுத்தாளன் உருவில் ஒரு அகோரி

நேற்று கூறியது போல் இன்று தயிர்வடை சென்ஸிபிலிட்டியின் அடுத்த அத்தியாயத்தை எழுத முடியாது போல் தெரிகிறது.  அராத்துதான் காரணம்.  அவர்தான் அசுரகணத்தையும் அபிதாவையும் மீண்டும் படிக்க வேண்டிய தேவையை உண்டுபண்ணி விட்டார்.  க.நா.சு. பற்றி நான் ஆற்றிய நான்கு மணி நேர உரையைக் கேட்டிருக்கிறீர்களா?  கொரோனா காலத்தில் மாதம் ஒரு உரை என்று ஸூம் மூலம் கொடுத்தேன்.  நம் இணையதளத்தில் இருக்கிறது.  வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள்.  வழக்கம்போலவே அந்த உரைக்காக ஒரு மாத காலம் இரவு பகலாகப் … Read more

5. தயிர்வடை சென்ஸிபிலிட்டி குறித்து அராத்து & அராத்துவுக்கு பதில்

பின்வருவது அராத்துவின் கட்டுரை: “அவர் மட்டும் அல்ல.  தி.ஜானகிராமன், சி.சு. செல்லப்பா, க.நா.சு.,  ந. சிதம்பர சுப்ரமணியன், கரிச்சான் குஞ்சு, கு.ப.ரா. போன்ற சென்ற தலைமுறையின் பிராமண எழுத்தாளர்கள் அனைவரின் எழுத்திலுமே பிராமண அழகியலை நீங்கள் காண முடியாது.” – சாரு நிவேதிதா. இந்த இடத்தில் நான் சாருவிடம் இருந்து மாறுபடுகிறேன். பிராமண எழுத்தாளர்கள் என்றில்லை. தமிழில் எழுதிக்கொண்டிருந்த மற்றும் தற்போது  எழுதிக்கொண்டிருக்கும்  பெரும்பாலான எழுத்தாளார்கள் பிராமண அழகியல் என்று சாரு சொல்லும் தன்மையோடுதான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். என்ன? … Read more