விசை

ஒரு தொலைக்காட்சி சீரியல் சுயநலத்துக்காக எத்தனை கொலைகளையும் செய்யத் தயங்காத ஒரு கொடூரனின் கதை ஏற்கனவே பார்த்திருப்பதாக ஒரு சம்சயம் எதுவும் ஞாபகம் இல்லை எல்லாமே புதிதாயிருந்தது ஒன்றைத் தவிர அந்த ரவுடி தன் எடுபிடியின் மனைவியோடு கள்ள உறவு வைத்திருப்பான் அது மட்டும் துல்லியமாய் நினைவில் இருந்தது ஆகவே செக்ஸ்தான் என்னை இயக்கும் சக்தியென அறிந்து கொண்டேன் செக்ஸுக்குத் தடை போடும் தோழி யாரேனுமிருந்தால் அதோடு சேர்த்து எனக்கும் என் உயிருக்கும் தடை போட்டால் நலம் … Read more

மொழி வழி

நினைப்பதைச் சொல்ல மொழி நானும் சொல்லி வந்தேன் நினைப்பதையே எழுதி வந்தேன் அப்படித்தான் நம்பி வந்தேன் எல்லோரும் என்னை நிர்வாண மனிதன் என்றார்கள் ஆனால் உன்னிடம் வார்த்தைகள் உறைந்த பனியாய் நிற்கின்றன எல்லோரிடமும்தான்

பெண்களும் பிராணிகளும்

என்னிடம் உரையாடும் மைனா பட்சியினம்தானென்றாலும் நல்ஞானமும் நேர்கொண்ட பார்வையுமுண்டு இன்று வந்து கேட்டது: ’பெண்களுக்கேன் பிராணிகளைப் பிடிக்கிறது?’ ஆயுள் முழுதும் பெண்களுடனே இருந்தும் அந்த வேற்றுக்கிரக ஜீவிகளைப் புரிந்து கொள்ள முடிந்ததில்லை யென்றேன் ’அது ஒன்றுமில்லை பிராணிகள் கேள்வி கேட்பதில்லை’ யோசிக்கத் தொடங்கிய என்னை இடைமறித்து ‘நீயும் பிராணிதான்’ எனச் சொல்லிப் பறந்தது

ஆண் பால் பெண் பால்

பூனை நாய்களின் பெண்ணினத்தை யாரும் அவள் எனக் குறிப்பிட்டால் என் செவியில் நாராசம் பாயும் பெண் பூனை பெண் நாய் ரெண்டையும் அவனென்றே அழைப்பேன் ஆனால் என் நண்பன் ஒரு படி மேல் மனிதப் பெண்டிரையும் அவனென்றே அழைக்கிறான் என்ன ஒரே கவிதை மழை என்றான் ஹி ஹி என்றேன் எழுதுவது நீ அல்ல நண்பா அவன் எழுதுகிறான் அவன் எழுதுகிறான் என்றான் குறும்பு பொங்க

பிறந்தநாள் பரிசு

இன்று அராத்துவின் பிறந்த நாள். அதை முன்னிட்டு அவர் நமக்குத் தந்திருப்பது Minxie-யும் அதன் தமிழ் வடிவமான குட்டிமா-வும். பிறந்த நாள் பரிசாக நாம் அவருக்குத் தருவது இந்த நாவல்களை வாங்குவதே. இணைப்பு கீழே: India https://amzn.in/d/91mKkW9 USA https://a.co/d/2On7FJL UK https://amzn.eu/d/8GrhXj5