சாரு ,
கடந்த மூன்று நாட்களும் ‘ ராஜபாட்டையா ’ இல்லை ‘ ராஜாபோதையா ’ என்று தெரிய வில்லை. நான் செய்தது இதுதான்.
இளைய ராஜாவின் ஆரம்ப காலப் பாடல்களை பின்னணியில் ஒலிக்க விட்டு , " ராஸ லீலாவின்" மூனறாவது பகுதியை , அதாவது படிக்கத் தொடங்கினேன். பக்கத்தில் வழக்கம் போல் பியர் போத்தல்கள்.
காதலியை ‘ பில்லியனில் ’ ஏற்றியவுடன் முதலில் மெதுவாக ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் டாப் கியரில் தூக்குவார்களே அதே போல். அல்லது " amusement park" களில் ‘ ரைடர்கள் ’ முதலில் மெதுவாக ஊஞ்சல் போல் ஆட ஆரம்பித்து பின் வேகம் எடுத்து ஒரு கட்டத்தில் அப்படியே தலை கீழாகச் சில நொடிகளுக்கு நிப்பாட்டுவார்களே, அது போல. அல்லது ‘ புணர்கையில் ’ வருடல்களுடனும் , முத்தங்களுடனும் ஆரம்பித்து உச்சக் கட்டத்தில் தம்மை மறந்து அரற்றுவார்களே அது போல.
ஃபௌஸியா வந்த உடன் நான் என்னை மறந்தேன். தன்னை இழந்தேன். அதனால்தான் உடனே அழைத்து அப்படிச் சொன்னேன்.
' அழகி ' படம் பார்த்தால் எவரும் தன் நினைவலைகளைப் பின்னோக்கி விடாமல் அதிர்வடையாமல் இருக்க முடியாது என்று தமிழ்நாடே கொண்டாடியது. .ஃபௌசியா பற்றி வாசிக்காதவர்களுக்கு ' அழகி ' ‘ இலுப்பைப் பூதான் ’.
ஃபௌஸியாப் படித்தால் காதலிக்காமல் இருந்தவன் கூட வருத்தப்படுவான், வெறுமையாய் உணர்ந்து. காதலித்தவர்களோ பொறாமை கொள்வர்.
நான் இன்னும் பற்றிய ஃபௌஸியா கதையை முடிக்கவில்லை. ஏன் எனில் முடிவு எப்படி இருக்குமோ என்ற பயம்தான். ஒரு வேளை திவ்யா கதை மாதிரி இருந்து விட்டால் என்னால் அந்த சோகத்தைத் தாங்க முடியுமா என்று தெரிய வில்லை.
' சரி சரி..இன்று படிக்கிறேன் '. அந்தக் காட்சி நிஜத்தில் நடந்ததா இல்லையா எனத் தெரியவில்லை. இப்படி ஒரு பெண்ணுடன் பேசிக் காதலிக்கவே , கற்பனை பண்ணவே இந்த உயிரைக் குடுக்கும் ‘ கேஸ் ’ நான்.
நான் மறுபடியும் உட்கார்ந்து யோசித்தேன். நான் உணர்ச்சி வசப்பட்டு சொன்னேனா என்று. இல்லை ' உள்ளத்தில் உண்மையாய் ' உணர்ந்ததைத்தான் சொன்னேன்.
" சாரு நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்."
இதை எந்தக் கோபுரத்தின் மீதும் ஏறி நின்று ராமானுஜர் போல் உரக்கச் சொல்வதில் எனக்குத் தயக்கம் இல்லை.
அன்புடன்
சூர்யா. (ஜூலை 29, 2008)
பின் குறிப்பு-
1) பியர்போத்தல்கள் ஒத்துக் கொண்டன தோற்று விட்டதாய், போதை தரும் விஷயத்தில்.
2) ஒரு சில பாடல்களுக்கு புத்தகத்தை மூடிவைத்தேன் உம்- ‘ ஏதோ மோகம் ’ . சில அத்தியாயங்களுக்கு பாடலை நிறுத்தி வைத்தேன்.
3) எல்லாம் ஃபௌஸியா வரும் வரைதான்.